ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 28, 2018

குறைகள் வந்தால் யாரிடம் சொல்ல வேண்டும்...?


தபோவனத்திற்குள் புதிய பூமியில் எல்லோரையும் அழைத்து  ஒன்றாக இங்கே சேர்த்து வைக்கலாம் என்று சொன்னால் அதில்  நம் தாய்மார்கள் என்ன செய்கிறார்கள்...? துவைத்த துணியைக் காயப் போடுவதில் பகைமையைப் பெருக்குகின்றார்கள்.

இவர்கள் எதற்காக இங்கே வந்தார்கள்...? என்று எனக்கு (ஞனாகுரு) ஒன்றும் புரியவில்லை. இங்கே தியான மண்டபத்தில் தியானத்திற்குக் கூட அவர்கள் வருவதில்லை. ஏனென்றால் தியானத்திற்கு வருவதற்குக் கூட அவர்களுக்கு நேரம் இருக்காது.

முதலில் நல்ல நிலை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தபோவனத்திற்குள் வருகின்றார்கள். ஆனால் இங்கே வந்த பிற்பாடு துணிகளைக் காயப் போடுவதில் ஒருவருக்கொருவர் பேருக்கும் பகைமை.

இங்கே புதிய பூமியில் எவ்வளவோ பரந்த வெளி கிடக்கிறது. துணிகளைக் காயப் போட எவ்வளவோ இடம் இருக்கின்றது.

ஆனால் இவர்கள் போட்ட இடத்தில் முந்திக் கொண்டு யாராவது துணியைப் போட்டார்கள் என்றால் “என் இடத்தில் நீ போட்டு விட்டாய்...!” என்று அவர்கள் இந்த இடத்தையே சொந்தமாகக் கருதிக் கொண்டு  பேசுவதற்குத் துணிந்து விடுகின்றார்கள்.

இந்த மாதிரி நிலைகளை எல்லாம் மாற்றி அமைத்துக் கொள்வதற்காகத் தான் இங்கே கொண்டு வந்து வைத்தது. ஆனால்  நம்மையே மாற்றி அமைத்து விடுவார்கள் போலிருக்கிறது. அந்த அளவிற்குப் பகைமையைப் பெருக்கி இருக்கிறார்கள்.

ஏனென்றால் தீமையை அகற்றி அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும் என்று தான் யாம் சொல்லிக் கொண்டே வருகின்றோம்.

பெண்கள் தங்களுடைய சக்திகளை எப்படிப் பெருக்க வேண்டும் என்று சொல்கிறோம். தாய்மார்கள் எத்தகைய தீமை வந்தாலும் அதை வராதபடி தனக்குள் சாந்த உணர்வு கொண்டு சமப்படுத்தி கூடுமான வரை மகிழ்ந்த நிலைகளைப் பெருக்க வேண்டும்.

பிறருடைய குறைகளை வளர்க்காது அவர்கள் நிறைவு பெற வேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் பெருக்கிக் கொள்ளுங்கள்.
1.அருள் ஞானத்தைப் பெருக்குங்கள்.
2.இருள் ஞானத்தைப் பெருக்காதீர்கள் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

ஏனென்றால் இங்கே மட்டும் அல்ல. நமது வாழ்க்கையில் நாம் எங்கெல்லாம் செல்கிறோமோ இதைப் போன்ற சந்தர்ப்பங்கள் வரும் பொழுது பிறருடைய செயல்கள் தவறாக இருந்தாலும் அதை நமக்குள் சேராவண்ணம் தடுத்து அதிலிருந்து விலகிச் செல்வதனால் தப்பில்லை.

குறைகளை நாம் வளர்த்து கொண்டிருந்தால் பகைமைகள் தான் நமக்குள் வளரும். பகைமையற்ற நிலைகளில் நாம் வாழ வேண்டும் என்றால் அந்த ஞானியின் உணர்வை நாம் அவசியம் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
1.அப்பொழுது மனதில் நிம்மதி என்ற நிலையில் வரும்.
2.மன நிம்மதி ஏற்பட்டால் தான் ஓரளவுக்கு நம் வாழ்க்கையில் எல்லாமே தெளிவாகம் வரும்.

இந்த நாட்டிலோ அல்லது உலகில் எந்த மூலைக்குச் சென்று நாம் குடியிருந்தாலும் நம அருகில் உள்ளோர் எல்லோரும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்.
3.அவர்கள் தொழிலில் வளம் பெற வேண்டும்.
4.அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் சகோதரத்துவம் வளர வேண்டும்.
5.அவர்கள் ஒற்றுமை பெற வேண்டும் என்று
6.ஒவ்வொரு நாளும் இதைத் தான் தியானித்து நமக்குள் பெருக்க வேண்டும்

இதை விட்டு விட்டு அவர்கள் தான் முதலில் அப்படிச் சொன்னார்கள். அதனால் நான் பதிலுக்கு இப்படிச் சொன்னேன் என்று அடுத்தவர்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் பெருக்கக் கூடாது. கடைசியில் “குற்றவாளி யார் என்றே தெரியாது....!”

சத்தான பாலாக இருந்தாலும் அதிலே பாதாமைப் போட்டாலும் விஷம் பட்டுவிட்டால் பாலைக் குடித்த பின் விஷத்தின் இயக்கமாகி இருள் சூழ்ந்த நிலையைத்தான் அது உருவாக்கும்.

அதைப் போன்று தான் நாம் நல்ல குணங்கள் கொண்டிருந்தாலும் பிறர் சொல்லும் குறைகளையோ பிறர் படும் உணர்வுகளையோ நாம் அடிக்கடி உற்றுப் பார்த்து அதை விசாரித்துக் கொண்டேயிருந்தால் அந்தக் குறை உணர்வுகள் நம் உடலிலும் வளர்ச்சியின் தன்மை அடைந்து விடுகின்றது.

ஆனால் நாம் கொஞ்சம் சுதாரித்து அந்தக் குறைகள் நமக்குள் வளராது மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என்னைப் பார்க்கும் அனைவரும் பெறவேண்டும்.

அவர்கள் குடும்பத்தில் அருள் ஒளிகள் பரவி அவர்கள் செயல்கள் அனைத்தும் தெளிந்த நிலை பெறவேண்டும்... மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்று அந்த நேரத்திலேயே நாம் எண்ணிப் பழகுதல் வேண்டும்.

இவ்வளவும் சொன்னாலும் இன்னொன்று கேள்வி கேட்பார்கள். 

அவர்களிடம் நாங்கள் சொல்கிறோம். அவர்கள் மீண்டும் மீண்டும் தவறு செய்து கொண்டே இருக்கின்றார்கள். அதை நாங்கள் எப்படிச் சொல்லாமல் இருப்பது என்பார்கள்.

இந்த நினைவு வந்துவிட்டாலே நமக்குள் அவர்கள் உணர்வுகள் எல்லாமே நமக்குள் வந்திவிடுகின்றது. ஆகவே
1.இதை யாரிடம் சொல்ல வேண்டும்...? சொல்ல வேண்டியது எங்கே...?
2.இதைக் குருவிடம் சொல்லலாம். மற்றவர்களிடம் சொல்வது கூடாது.
3.குருவிடம் சொன்னால் அது விளக்கம் கிடைக்கும்.
4.எந்த நிலையிலும் எப்பொழுதுமே அதை நிவர்த்திப்பதற்குக் குருவிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.
5.குருவல்லாத நிலைகள் போனால் பகைமை உணர்வையே வளர்க்கும்.
6.குருவிடம் வந்தால் பகைமையைக் குறைக்கும்.
7.பகைமை எதனால் எப்படி வளர்கின்றது என்ற நிலையை குரு மூலமாக அறிந்து கொள்ளலாம்.

அந்தக் குருவினுடைய அருள் பெற வேண்டும் என்றால் உங்களுக்கு உபதேசமாகக் கொடுக்கும் அருள் ஞானிகளின் உணர்வைக் குருவாக மதித்து அந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்ற நீங்கள் எண்ணி எடுத்தால் அந்தக் குரு உங்களுக்குள் நல்வழி காட்டும். தெளிந்த மனங்களைக் கூட்டும்.
1.உங்கள் உயிரான குருவிடம் கேட்டு
2.அருள் ஞானத்தின் உணர்வை உங்களுக்குள் பெருக்கிக் கொள்ளுங்கள்.

எனக்கு இப்படித் தீமை செய்தான் தீமை செய்தான் என்ற உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொண்டால் உங்கள் உயிர் நீங்கள் எண்ணியதை உருவாக்கி அதைக் குருவாக இயக்கிவிடும். தீமையைத்தான் உங்களுக்குள் பெருக்க செய்யும்.

ஆகவே அந்தத் தீமையின் நிலைகள் பெருகாதபடி அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் பெருக்கிப் பத்தாவது நிலையான கல்கி என்ற அழியா ஒளி நிலை பெறுங்கள். எமது அருளாசிகள்...!