ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 28, 2018

ஆடி மாதம் பலமாகக் காற்று அடிப்பதன் காரணம் என்ன…?


27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் சக்திகளைக் கோள்கள் பெறுகின்றது. எந்தக் கோளின் சக்தி இங்கே வளர்ந்து அதன் வழியில்
1.நம் பூமிக்குள் தாவர இனங்கள் வளர்கின்றதோ
2.அதிலே நட்சத்திரத்தின் கதிரியக்கப் பொறிகளும் அதனின் வீரிய உணர்ச்சிகளும்
3.அந்த அணுக்களில் பெறப்பட்டு “இயக்கச் சக்தி…!” பெற்றது அது.

ஆகவே அந்த விண்ணுலக ஆற்றல் எவ்வாறு நமது பூமிக்குள் வருகின்றது என்ற நிலையை அகஸ்தியன் தன்னுள் கண்டுணர்ந்து அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கிக் கொண்டான்.

அவன் அறிந்த இந்தப் பேருண்மையைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்காக வேண்டித்தான் பனிரண்டு மாதங்களையும் பனிரெண்டு ராசியின் தன்மையாகக் காட்டினார்கள் அகஸ்தியனுக்குப் பின்னாடி வந்த ஞானிகள்.

இதை வைத்துத்தான் சாஸ்திரங்கள் எழுதப்பட்டது. அதாவது இன்னென்ன காலங்களில் இப்படி வரும். இதனுடைய சுழற்சி வட்டங்கள் இன்னென்ன மாதங்களில் இப்படி வரும் என்கிற வகையில் அமைத்துக் கொண்டு வருகிறார்கள். ஏனென்றால்
1.ஒவ்வொரு வருடமும் சுழற்சியின் வட்டங்கள் மாறுகின்றது.
2;அந்த நேரத்தில் நட்சத்திரங்களின் நிலைகள் எவ்வாறு மாறுகின்றது...? என்றும்
3.அந்த வானயியல் தத்துவம் புவிக்குள் வந்து எப்படி மாறுகிறது…? என்றும் காட்டியுள்ளார்கள்.

ஒவ்வொரு மனிதனின் உயிரும் ஓர் நட்சத்திரத்தின் சக்தி கொண்டது. ஆக பூமிக்குள் இருக்கும் ஒவ்வொரு உயிரும் (எல்லாம்) எந்த நட்சத்திரத்தின் பங்கு விகிதாச்சாரம் அதிகமாக எடுத்திருக்கின்றதோ அதன் வழியில் நம் பூமிக்குள் சக்திகள் கவரப்படுகின்றது.

உதாரணமாக கார்த்திகை நட்சத்திரமும் ரேவதி நட்சத்திரம் இரண்டும் இயக்கும் போது ஆண் பெண் என்ற நிலைகள் உயிரணு உருவாகின்றது.

அதைப் போன்று தான் அதனின் உணர்வின் தன்மை பூமிக்குள் வரும் போது சந்தர்ப்பத்தில் நமது பூமியில் எத்தனை கலர்கள் வருகின்றதோ அது ஓடு பாதையில்

எந்தெந்த நட்சத்திரங்கள் உமிழ்த்துகின்றதோ அதில் எத்தனை எத்தனை நிறங்கள் வருகின்றதோ அதுவெல்லாம் நம் பூமியின் ஓடும் பாதையில் வரும் பொழுது அதைத் துருவப் பகுதி வழியாகக் கவரப்படும் போது அதனதன் சக்திகள் பூமிக்குள் பரவுகின்றது.

அப்படிப் பரவும் பொழுது அந்த நட்சத்திரங்களின் எதிர்மறையான அலைகள் ஒன்றை ஒன்று சந்திக்கப்படும் போது ஒன்றுக்கு ஒன்று ஒத்துக் கொள்ளவில்லையென்றால் பார்க்கலாம்...! ஆடி மாதங்களில் காற்றலைகள் அதிகமாக வரும்.

1.எதிர்மறையான உணர்வுகள் வரப்படும் போது
2.நம் பூமியில் அடுத்தடுத்து அழுத்தமான நிலைகளில் மற்ற கோள்களின் சக்தியோ நட்சத்திரங்களின் சக்தியோ வரும்போதுதான் (பெருகி வருவதை)
3.அதை “ஆடிப் பெருக்கு” என்றார்கள் ஞானிகள்.

பூமியில் வெளிப்படும் இதைப் போன்ற உணர்வுகள் எதிர் நிலையாகப்படும் பொழுது காற்றலைகள் அதிகமாக மாறுவதும் அதன் தொடர் வரிசையில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடப்பதைப் பார்க்கலாம்.

ஆனால் சில மாதங்களில் சுத்தமாகக் காற்றே இல்லாத காலங்களும் உண்டு. ஏனென்றால் எதிர்மறையான அணுக் கதிர்கள் இங்கே வரவில்லை என்றால் அது அமைதி கொண்டு தான் இருக்கும்.

அதே சமயத்தில் சூரியனுடைய காந்தப்புலன் அதைக் கவரப்படும் போது தனக்குள் எடுத்து அதை அடக்கும் சக்தியாக அணுக்களாக மாற்றிக் கொள்ளும்.

இப்படி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நிலைகள் பெறுவதை ராசி என்றும் பன்னிரண்டு ராசிகளுக்குள்ளும் அதனுடைய இயக்கச் சக்திகள் எப்படி எப்படி உருவாகிறது...? என்றும் அன்று ஞானிகள் தெளிவாக்கியுள்ளார்கள்.