7/28/2018

தியானப் பயிற்சி - 1

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் பெறுவதற்கும் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியினை நம் ஆன்மாவிற்குள் சேர்த்துக் கொள்வதற்கும் “ஒரு சிறு பயிற்சி….!”
.
உங்கள் வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்திருந்தால் அந்த ஜோதியைப் பார்த்துத் தியானியுங்கள்.

ஜோதியைக் கண்களால் பாருங்கள். ஓ..ம் ஈஸ்வரா.. குருதேவா… என்று உங்கள் புருவ மத்தியில் எண்ணுங்கள்.

கண்களைத் திறந்த மாதிரியே உங்கள் நினைவுகள் மட்டும் புருவ மத்தியிலிருந்து விண்ணுக்குச் செல்லட்டும்.

பூமியின் வடக்குத் திசையில் துருவப் பகுதி வழியாக அங்கே விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் உங்கள் நினைவினைச் செலுத்துங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு குழந்தை ஆசைப்பட்டு ஏங்குவது போல் ஏக்கமான எண்ணங்களில் தியானியுங்கள்.

முடிந்தவரை கண்களை இமைக்காது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று திரும்பத் திரும்ப விண்ணிலிருந்து இழுத்துச் சுவாசியுங்கள்.

5 நிமிடம் அல்லது 10 நிமிடம் அல்லது அதிகபட்சம் 15 நிமிடம் வரை செய்து பாருங்கள். அதற்கு மேல் கண்களைத் திறந்து செய்ய வேண்டியதில்லை.

கண்கள் தன்னாலே மூடிக் கொண்டால் அதே உணர்வுடன் மீண்டும் தியானிக்கலாம்.

விளக்கின் ஜோதியைப் பார்க்க முடியவில்லை என்றால் சுவற்றில் ஏதாவது ஒரு புள்ளியை வைத்து இதே உணர்வுடன்
1.புருவ மத்தி,
2.விண்ணில் நினைவு,
3.துருவ நட்சத்திரம் மூன்றையும் இணைத்து மாறி மாறி இழுத்துச் சுவாசியுங்கள்.