ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 15, 2018

கரும்புச் சாற்றில் உள்ள அழுக்கை நீக்கி வெண்மையான சர்க்கரையை உருவாக்குவது போல் மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து நம் உணர்வுகளை ஒளியாக ஆக்க வேண்டும்


இயற்கையில் விளைந்த கரும்பை எடுத்து அதைச் சாறாகப் புளிந்து ஓடையாக ஓடச் செய்து அங்கே ஒரு டேங்கில் நிரப்புகின்றனர். பின் அதற்கென்று ஒரு அளவுகோல் வரும் போது அதைத் தூய்மைப்படுத்துகின்றனர். எப்படி…?

கொதிக்கும் கொதிகலன்கள் கொண்டு சுழலும் வேகத்தில்
1.மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட பொட்டாசியத்தை
2.அந்தக் கரும்புச் சாற்றுடன் கலக்கி அதிலுள்ள அழுக்கினை நீக்கி
3.அதைத் தனித்த தெளிந்த சர்க்கரையாக (சீனி) அனுப்புகின்றான் விஞ்ஞான அறிவால்.

விஞ்ஞான அறிவால் கண்டுபிடித்த பொட்டாசியத்தைக் கொப்பரையிலிட்ட பின் கரும்புச் சாற்றின் கருப்பு நிறத்தை மாற்றுகின்றது. வெளுப்பான நிலைகளை இழுக்கின்றது. வெண்மையான சீனியாகின்றது.

அதே பொட்டாசியத்தை நாம் ஒரு துணியிலே வைத்தால் போதும். அந்தத் துணியில் உள்ள துணியின் நிறத்தை எடுத்து விடுகின்றது. நூலை நைந்து போகச் செய்து அந்தத் துணியையே உடுத்துவதற்கு லாயக்கற்றதாக மாற்றுகின்றது.

அதைப் போன்று தான் தூய்மையான சர்க்கரையுடன் கலந்த பொட்டாசியம் நம் உடலுக்குள் இருக்கும் பாதுகாப்பு கவசத்தை முறித்து விடுகின்றது. உணவாக உட்கொள்ளும் பொழுது குடலிலே புண் வருகின்றது… சர்க்கரை நோயும் வருகின்றது…!

ஆனால் இன்று நாம் பெரும் பகுதி உணவு வகைகளில் இந்த வெள்ளைச் சர்க்கரையை (சீனி) அதிக அளவில் கலக்கின்றோம். உணவாக உட்கொள்கிறோம். சாதாரண நிலையில்.

அந்தப் பொட்டாசியத்தைக் கலந்து அழுக்கைப் பிரித்த பின் அந்த அழுக்குகளைப் பிற உபகரணங்களுடன் இணைத்து கரும்புச் சக்கையில் உள்ள சில பொருள்களை மாற்றி விஞ்ஞான அறிவு கொண்டு இதைப் பிளாஸ்டிக்காக (PLASTIC) செய்கின்றார்கள்.

பிளாஸ்டிக்காக உருவாக்கிய பின் அது அழியாத பொருளாக மண்ணும் இதைத் திங்கும் நிலை இல்லை.
1.பிளாஸ்டிக்கில் உள்ள விஷத்தின் தன்மையால்
2.இயற்கையில் உள்ள மண் அதை உட்கொள்ளும் சக்தியை இழக்கின்றது.
3.இதைத் தெளிந்து கொள்ளுங்கள்… தெரிந்து கொள்ளுங்கள்….!
4.ஏனென்றால் இயற்கையில் உருவான எந்தப் பொருளானாலும் குறிப்பிட்ட காலத்தில் அது மண்ணுடன் சேர்ந்த பின் மக்கிவிடும்
5.ஆனால் பிளாஸ்டிக் மக்குவதில்லை…! விஞ்ஞான அறிவால் மனிதன் தான் இத்தகைய நிலையை உருவாக்குகின்றான்.

ஆனால் அன்று வாழ்ந்த மெய் ஞானிகளோ தனக்குள் வந்த தீமைகளை அடக்கி தன்னை எதுவுமே சாடாத நிலைகள் கொண்டு அழியாத தன்மையாகத் தன் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி இன்றும் ஒளியின் சுடராக இருக்கின்றனர். (துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும்)

அந்த மெய் ஞானிகள் அனைவரும் விண்ணிலிருந்து எத்தகைய விஷத் தன்மைகள் வந்தாலும் அதை அடக்கி ஒளியாக மாற்றிடும் ஆற்றல் பெற்றவர்கள்.

விஞ்ஞான அறிவால் கரும்புச் சாற்றில் பொட்டாசியத்தைக் கலந்து அழுக்கைப் பிரிப்பது போல் அந்த மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் இணைத்து நமக்குள் அறியாது புகுந்த தீமைகளை… வேதனைகளை… துன்பங்களை… அகற்றிடல் வேண்டும்.

இந்த உடலிலே அந்த மெய் ஞானிகளின் உணர்வைச் சேர்த்துக் கொண்டால் அந்த உணர்வின் நிலையாக அழியாத நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நாமும் நிலைத்து வாழ முடியும்.