ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 9, 2018

நம் உடலுக்குள் இருந்து கொண்டு நம்மை அறியாமல் இயக்கும் (ஆசையின்) உணர்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்...!


எம்முடைய (ஞானகுரு) உபதேசத்தைக் கேட்பவர்கள்... “என்னமோ சாமி சொன்னார்... நன்றாக இருந்தது...!” என்பார்கள். அதற்கப்புறம் வழக்கம் போல் மற்றவர்கள் (இவர்களைப்) பேசுவதைப் பார்த்து
1.அவர்கள் என்னை இப்படிச் சொன்னால் அது எப்படி...!
2.நான் சும்மா விடுவேனா...? என்று பிடித்துக் கொள்வார்கள்.

அதே சமயத்தில் “நல்ல மனிதன்... கஷ்டம்...!” என்று சொன்னால் அதை எப்படி நான் கேட்காமல் இருக்க முடியும்...? கேட்டுவிட்டு உதவி செய்யாமல் நான் சும்மா இருக்க முடியுமா...? என்பார்கள்.

அவர்கள் கஷ்டப்பட்டது துயரப்பட்டது சங்கடப்பட்டது அது பூராமே இங்கே வந்துவிடுகின்றது. இப்படி நமக்குள் அந்தப் பாசத்தால் ஒன்றைக் கவர்ந்து விட்டால் அந்த உணர்வின் தன்மை இயக்கும்.

காரணம் ஒரு செடியிலே விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் அந்தத் தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து தான் தீரும். இதே மாதிரித்தான்
1.ஒரு உடலிலே விளைந்த உணர்வுகள் நம் உடலுக்குள் வந்துவிட்டால்
2.அது உணர்ச்சியைத் தூண்டி அதன் உணர்வைத்தான் அது வளர்க்கும்.
3.ஆகவே இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட வேண்டும்.

மாமிசம் சாப்பிட்டுப் பழகி விட்டோம். சாப்பிடக்கூடாது என்று சொன்னால் மாமிசத்தைச் சாப்பிடுவதில்லை. அதே சமயத்தில் சிந்தனை இழந்து விடுகின்றது.

நீங்கள் மாமிசம் சாப்பிடாமல் போனாலும் கறியைச் சமைத்துச் சாப்பிட எடுத்துக் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாலே இந்த உணர்வு வரும். மற்றவர்கள் சாப்பிடுவதைப் பார்த்தால் நமக்கும் அந்த உணர்வு வரும்.
1.ஆனால் இதை மறுத்து... நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் இருந்தால்
2.அதைப் பார்த்தவுடன் விலகிப் போகச் சொல்லும்.
3.தியான வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துக் கொண்டால்
4.அதைப் பார்த்ததும்... உடனே அந்த உணர்வை நுகருவதை விட்டு விலகிப் போகச் சொல்லும்.

இல்லாமல் போனால் என்ன நடக்கும்...? நான் அதைச் சாப்பிடவில்லை. சும்மா வேடிக்கைதான் பார்க்கின்றேன்... என்று சொன்னால்
1.கொஞ்சம் கொஞ்சமாகப் போகும்...!
2.அப்புறம் அந்த அணுக்கள் விளைந்தவுடன் “சாப்பிடலாமா...! என்ற அந்த ருசி இழுக்கும்.
3.பிறகு தன்னாலே அங்கே தான் போய்க் கொண்டிருப்போம்.
(எல்லாப் பழக்க வழக்கங்களுக்கும் இப்படித்தான்)
4.அந்த வலு வரும். ஆனால் சிந்திக்கும் தன்மை இழக்கும்.

மற்ற உயிரினங்களுக்கு அந்தச் சிந்தனை கிடையாது. தன் உடலை வளர்த்துக் கொள்ளும் உணர்வு தான் உண்டு. அதைப் போன்று இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் தன் உடலை வளர்த்துக் கொள்ளும் நிலையில் சிந்திக்கும் தன்மையை இழக்கத்தான் செய்யும்.

ஏனென்றால் நம் வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் இப்படி எல்லாம் மாற்றிக் கொண்டே வருகின்றது. அதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்...?

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நீங்கள் எடுப்பதற்காக வேண்டி உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். “சாமி மிகவும் நன்றாகப் பேசுகின்றார்...!” என்று சொல்லிவிட்டு அப்படியே போய்விடாதீர்கள்.

இருபது வருடம் எவ்வளவோ கஷ்டப்பட்டேன் உண்மைகளைத் தெரிந்து கொண்டேன். அது எப்படி என்று உங்களிடம் வந்து சொல்கின்றேன்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னிடம் பதிவு செய்தார். அவர் சொன்னதை எல்லாம் எடுத்தேன்.
1.எடுத்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது.
2.உங்களுக்கும் அந்தக் காக்கும் சக்தியைக் கொடுக்க முடிகின்றது.