ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 24, 2018

ஆடி “பதினெட்டாம் பெருக்கு”


ஒவ்வொரு வருடத்திலும் பனிரெண்டு மாதம் என்றால் ஒவ்வொரு மாதத்திலும் சூரியனிலிருந்து வெளிப்படும் உணர்வின் கதிர் இயக்கங்களும் மற்ற கோள்களில் இருந்து வெளிப்படுத்தும் உணர்வுகளும் மற்ற நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படுத்தும் உணர்வுகளும் இந்த மூன்றும் கலவைகள் ஆவதை “ராசிகள்” என்று காட்டினார்கள்.

ஒவ்வொரு நட்சத்திரத்தின் தொகுப்பிலிருந்தும் பனிரண்டு மாதங்களிலும் அது கவர்ந்து எந்தெந்த நட்சத்திரங்கள் இந்த மாதங்களில் மூன்றும் ஒன்றாக அருகிலே கலந்து அது கவர்ந்து கொண்ட சக்திகளை மற்ற கோள்கள் கவர்ந்து
1.அது எவ்வாறு நமது பூமிக்குக் கிடைக்கின்றதென்ற நிலையையும்
2.அதே உணர்வின் சத்தை எவ்வாறு பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்படுத்துவதற்குத் தான்
3.மாதங்களைப் பனிரண்டு ராசிகளாகப் பிரித்தார்கள்.

இந்த இருபத்தேழு நட்சத்திரங்களும் பனிரண்டு ராசிக்குள் இரண்டு நட்சத்திரம் மூன்று நட்சத்திரம் நான்கு நட்சத்திரம் என்று இந்த அலைவரிசைகளை அது கலந்து அதை ஒவ்வொரு கோளும் தனக்குள் கவர்ந்து வரும் நேரத்தில் நமது பூமி இதை எவ்வாறு ஒவ்வொரு மாதமும் கவர்கிறதென்ற நிலையை ராசி என்று காட்டினார்கள்.

பூமிக்குள் இருக்கும் தாவர இனங்கள் அதற்குள் எதை எதைச் சேர்த்துக் கொண்டதோ அதனதன் வளர்ச்சிகள் அந்தந்த மாதங்களில் வரும் போது
1.அதனுடைய பெருக்குகள் எவ்வாறு இருக்கின்றன... எப்படிப் பெருகி வருகிறது...!
2.கவர்ந்து தன் சக்திகளை எப்படிப் பெருக்கி கொள்கிறதென்ற நிலையைக் காட்டுகின்றார்கள்.

இருபத்தேழு நட்சத்திரங்களும் பனிரண்டு ராசிகளானாலும் இந்த நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளை ஒன்பது கோள்களும் அது எடுத்து அதை வெளிப்படுத்தும் போது சூரியன் அதைத் தனக்குள் கவர்ந்து ஒளிக் கதிர்களாக வெளிப்படுத்துகின்றது.

ஒளிக்கதிர்களாக வெளிப்படுத்தியதை நமது பூமி எந்தெந்த நட்சத்திரத்திற்கு நேர் முகமாகத் துருவப் பகுதி (வடக்கு) இருக்கின்றதோ அதன் வழியாகக் கவர்ந்து பூமிக்குள் வருவது தான் இங்கே வளர்ந்த அதனதன் தாவர இனங்களுக்கு ராசியாகப் பெறுகின்றது.

மற்ற கோள்கள் எடுத்தது ஒவ்வொரு தொகுதியும் நட்சத்திரங்களின் தொகுப்புகளையும் அது பூமிக்குள் சேரும் நிலையை அந்த எல்லையை வகுத்து (அட்சரேகை என்று விஞ்ஞானத்தில் சொல்வார்கள்)
1.இன்னன்ன பகுதியில் இன்னன்ன ராசிகள் இவ்வளவு வருகிறது.
2,இன்னென்ன வழியில் நட்சத்திரங்களின் சக்திகளும் கோள்களின் சக்திகளும் பரவுகின்றது
3.கோள்களின் சக்தியும் நட்சத்திரங்களின் சக்தியும் அது கலந்து வந்து நமது பூமியில் தாவர இனங்கள் கலவையாகிறது
4.பூமிக்குள் பல கலவைகளான பின் பல பாறைகளும் மற்றவைகளும் உருவாகிப் பற்பல உலோகங்களாகிறது
5.உலோகச் சக்தியிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் ஆவியாவதை மீண்டும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி
6.நமது பூமிக்குள் அதனுடைய பெருக்கங்கள் இப்படி ஆகிக் கொண்டே வருகிறது என்பதைக் காட்டும் நிலையே “ஆடி பதினெட்டாம் பெருக்கு...!”

அதாவது “ஆடி...!” என்பது எல்லா வகையிலும் இசைந்து அந்த இயக்கத்தின் தன்மைகள் ஒன்றுடன் ஒன்று அசைந்து சென்று... ஒன்றுடன் ஒன்று மோதி... மோதலுக்குத்தக்க ஒவ்வொன்றும் உணர்வுகள் மாறுகின்றது...! என்பதையே அவ்வாறு காரணப் பெயர் வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

அப்படி இயக்கங்கள் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வருடத்திலும் ஒவ்வொரு மாதத்திலும்
1.மனிதன் எவ்வாறு தனக்குள் நல்ல நினைவுகளைக் கூட்டிக் கொள்ள வேண்டும்...?
2.தன் உயிரான்மாவை எப்படி உயர்த்திக் கொள்ள வேண்டும்...?
3.உயர் ஞானத்தை எப்படித் தனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்...? என்று சிந்திக்கும்படி செய்தார்கள்

ஆகவே ஒளியான உணர்வுகளைப் பெருக்கி... உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகப்
1.பத்தாவது நிலை அடைந்து...
2.எட்டுத் திக்கிலிருந்து வரும் எத்தகைய நஞ்சாக இருந்தாலும் அதை அடக்கி
3.ஒளியாக மாற்றுவதே பதினெட்டாம் பெருக்கு...!

அதனால் தான் அன்றைய நாளில் நம் முன்னோர்களை எண்ணச் செய்து அவர்கள் உயிரான்மாக்களை இன்னொரு உடல் பெறாதபடி அழியாத நிலையாக ஒளியாகப் பெருக்கும்படி சொன்னார்கள் ஞானிகள்.

நாம் ஞானிகள் காட்டிய வழியில் செயல்படுகின்றோமா...?