ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 22, 2018

நட்சத்திரக் குறிப்புகளும்… ஜாதகத்தின் உண்மை நிலைகளும்…!

இப்போது ஜாதகக் குறிப்பை வைத்துக் கொண்டு இயற்கையில் வருவதை மனிதனுக்கு இணை சேர்த்து பிறந்த நாளை வைத்துக் கணித்துக் கூறுகின்றார்கள்.

ஒரு உயிரின் தன்மை அது உருவான நிலையில் எந்த நட்சத்திரத்தின் அளவுகோல் அதிலே இருக்கின்றதோ அதற்குத்தக்கவாறுதான் அதனின் இயக்கமும்… செயலாக்கமும் இருக்கும்…! என்று அக்காலத்தில் ஞானிகள் கூறியுள்ளார்கள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் உணர்வைத்தான் முன்னணியில் கொண்டிருப்பார்கள்.
1.இந்த மனித வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும்
2.நாம் உணவாக உட்கொள்ளும் அல்லது சுவாசிக்கும் ஒவ்வொரு தாவர இனத்தின் மணத்தில் இன்னொரு நட்சத்திரத்தின் தன்மை அதிகமாக இருந்தால் அதனின் உணர்வுகளையும்
3.நாம் சந்திப்போர் அவர்கள் வேறு வேறு நட்சத்திரத்தின் இயக்கத்தில் இருக்கும் பொழுது அவரவர்கள் உணர்வை எடுத்துக் கொண்ட உணர்வுகளையும்
4.ஆக தன் நட்சத்திரத்திற்கு எதிர் மறையான இப்படிப்பட்ட உணர்வுகளைச் சுவாசித்தோம் என்றால்
5.நமக்குள் எதிர் நிலை உருவாகி அந்த உயிருக்கும் நமக்கும் எதிர் நிலையாகிப் போர் முறைகள் உருவாகும்.

நல்ல உணர்வுகளை வளர்த்து நாம் மனிதனாக இன்று வந்தாலும் ஒவ்வொரு உயிருக்குள்ளும் இருக்கும் அந்தந்த நட்சத்திரத்தின் இயக்கச் சக்தியால் ஒரு மனிதனுக்கு மனிதன் உறவாடும் போதே ஏற்றுக் கொள்ளாத நிலைகளாக இப்படியெல்லாம் வரும்.

அதாவது அந்த நட்சத்திரத்திற்கு எதிர் மறையான உணர்வுகள் கொண்டவர்களுடன் அதிகமாக நெருங்கிப் பழகப்படும் போது நம்மை அறியாமலேயே பல பிரிவினைகள் வரும். அதனால் வேதனைகளும் வரும். பின் பல நோய்களும் உருவாகின்றது.

ஏனென்றால் இவை எல்லாம் சாஸ்திரங்களாக அன்று ஞானிகள் கொடுத்ததை இன்று தலை கீழாக மாற்றி ஜாதகங்களாகக் குறித்து அவரவர்களுடைய இஷ்டத்திற்கு மாற்றிக் கொண்டார்கள்.

வானஇயல் புவியியல் உயிரியல் என்ற நிலைகளில் ஞானிகள் கண்டுணர்ந்ததைத்தான் சாஸ்திரங்களாகக் கொடுத்தார்கள்.

வானஇயல் தத்துவம் புவியியலாக மாறும் போது உயிரியலாக எப்படி மாறுகின்றது…? அதாவது
1.விண்ணிலே தோன்றும் உயிர்கள் புவிக்குள் வந்து
2.பல பல தாவர இனச் சத்துகளை எடுத்து உயிரினங்களாக எப்படி வளர்ந்து வந்தது…! என்ற நிலையை
3.அன்றைய ஞானிகள் வெளிப்படுத்தி உள்ளார்கள்.

ஏனென்றால் இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் இதைப் பதிவாக்கிக் கொண்டால் உங்களுக்குள் இயக்கும் உணர்வின் இயக்க நிலைகளையும் உங்களிடம் வந்து மோதும் பிறிதொரு உணர்வின் (குணம்) நிலைகளையும் அறிந்து கொள்ள முடியும்.

ஞானிகள் கண்ட பேருண்மையும் நீங்கள் உணரலாம். ஆறாவது அறிவின் துணை கொண்டு
1.உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் பல பல தீமைகளை மாற்றிட முடியும் என்ற
2.அந்தத் தன்னம்பிக்கையை நீங்கள் பெறவேண்டும் என்பதற்கே இதைச் சொல்கின்றேன்.

இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியை எடுத்துப் பேரொளியாக ஆனது தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமானது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து நமக்குள் வரும் எந்த நட்சத்திர இயக்கத்தின் எதிர் நிலைகளையும் சமப்படுத்திக் கொள்ள முடியும்.

பகைமையில்லாது…
எதிர்ப்பில்லாது…
ஏகாந்தமாக…!
என்றுமே ஒளியாக… மகிழ்ச்சியாக வாழ முடியும்….!