ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 25, 2018

தியானம் செய்யும் பொழுது புருவ மத்தியில் பார்த்து… உணர்ந்து கொண்டிருக்கும் உணர்வுகள் – என்னுடைய அனுபவம்

1.குறு குறு என்று அடிக்கடி அரிப்பு வரும். ஆனால் ஆனந்தமாக இருக்கும்.

2.தீமை வரும் பொழுது அல்லது பிரச்சனை வரும் பொழுது தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சுகிற மாதிரி புருவ மத்தியிலிருந்து அழுத்தமாக “சர்ர்ர்..” என்று பூமியின் வடக்குத் திசையில் துருவ நட்சத்திரத்தின் பால் “உள் உணர்ச்சிகள்…” போகும்.

3.அதே வேகத்தில் ஒரு துரட்டியைப் போட்டு “வெடுக் வெடுக்” என்று இழுக்கிற மாதிரி (புருவ மத்தியிலிருந்து) துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அங்கே அது இருக்கும் இடத்திற்கே சென்று அதை இழுக்கும்.

4.புருவ மத்தியில் நினைவைச் செலுத்திச் செலுத்தி என் நெற்றியே எப்பொழுதும் சுருங்கியே தான் இருக்கிறது. நான் நினைத்தால் தான் அந்தச் சுருக்கத்தையே எடுக்க முடியும். சுருக்கத்தை எடுத்தாலும் அடுத்த கணமே புருவ மத்தியில் நினைவு சென்று சுருங்கிவிடும்.

5.தமிழ் ஆய்த எழுத்து ஃ போல் இரண்டு கண்கள் + மூக்கின் வழி சுவாசித்து புருவ மத்தியில் காற்று மோதும் இடம் & மோதியவுடன் சுவாசம் கரைந்து வாயில் அந்த அலைகள் உமிழ் நீராகக் கரையும் இடம் இந்த நான்கும் சேர்ந்து புருவ மத்தியில் குவியும். பெரும்பகுதி உள் நினைவாக என் நினைவு இப்படித்தான் இருக்கும்.

6.வாழ்க்கையில் சந்திக்கும் அல்லது மோதும் உணர்ச்சிகளுக்குத் தக்க புருவ மத்தியில் உணர்வுகள் தன்னிச்சையாக ADJUST ஆகும்.

7.மகரிஷிகள் உணர்வுடன் சரியாக உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தும் இணைந்துவிட்டால் புருவ மத்தியின் உணர்வுகள் ஒரு LASER போன்று எதுவாக இருந்தாலும் அலசி SCANNING செய்து (1)அகண்டு விரிவடைந்து செல்லும் நிலையாகவும் (2)குறுக்கி மிக நுண்ணிய சிறிய அளவிற்குள் உள்ளதற்குள்ளும் நுணுகிச் செல்லும் நிலையாகவும் இயக்கமாகும்.

8.தியான நினைவுகளிலிருந்தாலும் சரி…! அல்லது எந்த நினைவுகளிலிருந்தாலும் சரி…! இரண்டு கண்கள் + புருவ மத்தி + சாமி + ஈஸ்வராய குருதேவர் என்று நான்கும் சேர்ந்து “நாங்கள்…!” என்ற நிலையில் தான் உணர்ச்சிகளே இயக்கும்.

9.நான் (சுவாசிக்கும் உணர்வு) அந்த நான்கில் எதிலாவது சேர்ந்து கொள்வேன். சுவாசம் (உணர்ச்சிகள்) மாறினால் நான்கில் ஏதாவது ஒன்று என்னுடன் (சுவாசத்துடன்) மோதி மறுபடி மகரிஷிகளின் பால் என்னைத் (சுவாசத்தை) திசை திருப்பும்.

10.நீல நிறத்தில் ஒளி அலைகள் குபு குபு என்று குவிந்து புருவ மத்தியில் ஒரு வெல்டிங்க் (WELDING) அடித்தால் “பளீர்…” என்று பிரகாசித்து ஒரு மெர்க்குரி திரும்பத் திரும்ப ஒளிரும். (இது தியானம் செய்தாலும் வரும். அல்லது வேறு நினைவுகளில் இருந்தாலும் இடையில் வரும்… கண்களை மூடிச் சில வினாடிகளிலேயே வரும்)

புருவ மத்தியில் ஏற்படும் உணர்ச்சிகளை இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.