
குருநாதர் காட்டிய வழியிலே உங்களுக்குத் “தொட்டுக் காண்பிக்கின்றேன்”
இந்த வாழ்க்கையில் நம் நல்ல குணங்களை இழக்காத வண்ணம்
ஞானிகளின் அருள் உணர்வுகளைச்
சேர்த்து நமக்குள் வரும் துன்பத்தை நீக்கி வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த உபதேசத்தின் வாயிலாக அந்த மெய் ஞானிகளின்
உணர்வுகளை அருள் ஞான
வித்துக்களாக உங்களுக்குள் ஊன்றி வளர்க்கும்படி செய்கிறோம். ஏனென்றால் திரும்பத் திரும்பப் பல தடவை சொல்கிறேன்.
1.ஒரு தடவை சொன்னாலும்…
அப்படியே சொல்லிக்
கொண்டே சென்றால் அடுத்து உங்களுக்கு அந்த நினைவு வராது.
2.அதை மீண்டும் சொல்லும் பொழுது தான் ஞானிகள் உணர்வலைகள் உங்களுக்குள் பதிவாக ஏதுவாகும்.
3.பதிந்த பின்
நீங்கள் மீண்டும் எண்ணும் பொழுது நினைவுக்கு வர
இது உதவியாக இருக்கும்.
4.ஆனால்… சாமி இப்பொழுது
தான் சொன்னார்… திரும்பவும் அதையே சொல்கிறார் என்று எண்ணி விட்டால்
5.“ஏற்கும் பக்குவம் குறைவாகி விடுகின்றது…” (இது முக்கியம்)
உதாரணமாக நாம் ஒரு
கட்டிடத்தைக் கட்டுகிறோம் என்றால் வானம் தோண்டிச் சுண்ணாம்பையும் கல்லையும் வைத்துக் கட்டிக் கொண்டே
போகின்றோம். அது ஈரமாக இருக்கின்றது.
சீக்கிரம் கட்டி முடிக்க வேண்டும் என்று செங்கலை மேலே ஏற்றி ஒரே நாளில் கட்டிட்த்தைக் கட்டினால் என்ன ஆகும்…? மொத்தமாக அமுக்கிக்
கீழே விழுந்து விடும்.
கட்டிடத்தை ஆறச் செய்து நிறுத்தி அந்த ஈரம்
உணரும் வரையிலும் பொறுத்திருக்க வேண்டும். கட்டியது இந்தப் பக்கம் சாய்ந்து இருக்கின்றதா…? அந்தப்
பக்கம் சாய்ந்திருக்கின்றதா…? சரியாகக் கட்டியிருக்கின்றோமா…? என்பதைச்
சிந்தித்துப் பார்த்து… ஈரம் காய்ந்த பின் அதன் மேல் கட்டிடத்தைக் கட்டுவது
சாலச்சிறந்ததாக இருக்கும்.
அதைப் போன்று தான் துன்பத்தைப்
போக்கிக் கொள்ளும் நிலையாக என்னிடம் நீங்கள் வரும் பொழுது அந்தத்
துன்பத்தைப் போக்கிடும் உணர்வின் ஆற்றலைப்
பதிவு செய்கின்றேன்.
இதைத்தான் “தொட்டுக் காட்டுதல்” என்று சொல்வது.
சில பேர் வருவார்கள். நான் அங்கே சென்றேன்… அவர்
முதுகில் தட்டிக் காண்பித்தார்…! நெற்றியில் தொட்டுக்
காண்பித்தார்…! நெற்றியில் பார் அங்கே
தெரியும்… பின் உச்சிக்கு கொண்டு போ அது
தெரியும்…! என்றெல்லாம் சொன்னதாகச் சொல்வார்கள்.
திட்டியவரைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது
அது ஆழமாகப் பதிந்து விடுகின்றது. பதிந்ததை மீண்டும்
எண்ணும் பொழுது உங்களுக்குக் கோபம்
வருகிறது.
அதைப் போல் மெய் ஞானிகளின் உணர்வுகளைப் பெறும் போது துன்பத்தைப்
போக்கும் உணர்வுகளாக அது உங்களுக்குள் வருகின்றது. தொட்டுக் காட்டுதல் என்பது…
1.உங்கள் உணர்வுக்குள் ஆழமாக… உங்கள் உள்ளத்திற்குள் தொட்டு
2.”உள்ளத்தைத் தொடும் நிலையாக உணர்வுகளை
ஒன்றச் செய்து” பதியச் செய்கின்றோம்.
3.இது குருநாதர் காட்டிய வழியிலே தொட்டுக் காட்டும் முறைகள்.
மீண்டும் இதை நீங்கள் எண்ணும் போது காற்றில்
படர்ந்திருக்கக்கூடிய ஞானிகள் அருள் சக்திகளைச் சுவாசித்து… உங்களுக்குள் வரும்
படபடப்பு பயம் வேதனை இது போன்ற நிலைகளைக் குறைத்திட இது உதவும்.
சாமி ஆசீர்வாதம் கொடுத்தார் என்று வெறுமனே நினைப்பதில் பயனில்லை... குருநாதர் எனக்கு எப்படி
ஆசீர்வாதம் கொடுத்தார்…?
1.மெய் வழியைப் பெறும் உணர்வின்
தன்மையைத் தொட்டுணரச் செய்து
2.அந்த உணர்வின்
செயலை ஒவ்வொன்றும் ஆழமாக எனக்குள் பதியச் செய்து
3.அந்த எண்ணத்தை நான் நுகர்ந்தறிந்து
என் உடலுக்குள் சேர்க்கச் செய்து
4.அதை எண்ணும்போதெல்லாம்
அந்த உணர்வின் எண்ண அலைகளைப் பரவச் செய்து பேச்சால்
மூச்சால் அது வெளிப்படுவதை
5.அந்த உணர்வுகள் எனக்குள் விளையப்படும் பொழுது “அது எனக்குப்
பாதுகாப்பாக வருகிறது…”
6.அந்த உணர்வின்
சத்து என் உடலில் மணமாக வரும்.
இப்பொழுது நான் பேசிக்
கொண்டிருக்கின்றேன். துன்பத்தைப் போக்க வேண்டும் என்ற
எண்ணத்தில் என்னை நீங்கள் பார்க்கின்றீர்கள்.
“உங்கள் துன்பம் விலகிவிடும்…” என்று வாக்காக நான் சொல்லும் பொழுது இந்த உணர்வுகள் உங்கள் செவிகளிலே
பட்டு ஒன்றிய பின் என்னை நீங்கள் அந்த உணர்வுடன் கூர்மையாகப் பார்க்கப்படும் பொழுது
1.எந்த மெய் ஒளியின் தன்மையை
நான்
பேசிக் கொண்டிருந்தேனோ
2.என் உடலிலிருந்து வெளிப்படும் அந்த
மணத்தை நீங்கள் நுகர்ந்து
3.உங்களுக்குள் ஆறுதலை ஊட்டும் நிலையாக யாம்
சொல்லும் வாக்குகள் பதிவாகி
4.அந்த உணர்வு வளர்ச்சியாகித்
துன்பத்தைப் உணர்வுகளாக உங்களுக்குள் வரும்.
5.மறுபடி மறுபடி அதை எண்ணும்
போது சிந்தித்து
செயல்படும் அந்த எண்ணங்கள் உங்களில் தோன்றும்.
இதைத்தான் “தொட்டுக்
காண்பிப்பது” என்று சொல்வது.