
“இரக்கப்பட்டு ஊருக்கெல்லாம் உதவி செய்தாலும்…” நலிவடைந்து விட்டால் நம்மை யாரும் பார்க்க மாட்டார்கள்
குருநாதர் சொன்னது:-
வாழ்க்கையில் நல்லதை எண்ணி ஏங்கினாலும் பிறர்
செய்யும் தவறுகளை கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது
1.அதற்காக இரக்கப்பட்டோ
அதற்காகப் பரிவு கொண்டோ அதை நீ ஏங்கிச்
சுவாசித்து
2.உன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் கொடுத்தாலும்
அவர்களைக் காத்திட நீ பொருளைக் கொடுத்து உதவி
செய்தாலும்
3.உனக்குள் வந்த அவரின் விஷத்தின் தன்மையைத் துடைக்கவில்லை
என்றால் பின் விளைவு எப்படி இருக்கும்…?
4.முதலில் புகழ் கிடைக்கும்… பேர் கிடைக்கும்… இரக்கமானவர்…
நல்லவர் என்று போற்றுவார்கள்.
5.ஆனால் கடைசியில் நீ நலிந்து போகும்
பொழுது “யாரும் உன்னைப் பார்க்க மாட்டார்கள்…”
6.நல்லதைச் செய்தேனே…!
என்று வேதனையான குரலைத் தான் எழுப்பிக் கொண்டிருக்க வேண்டி வருமே தவிர
நல்லதைச் சிந்திக்க முடியாது.
இந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின் மனித உடலை
வெறுக்கும் நிலை வந்து மீண்டும் மனித இனத்தின்
கூட்டிற்குள் சென்றாலும் அந்த உடலையும் அழித்துவிட்டு வேதனையின்
விஷத்தை அதிகமாகக் கூட்டி உடலை விட்டுச் சென்ற பின் பரிணாம
வளர்ச்சியில் விஷத்தைத் தாங்கிடும் உயிரினங்களின் ஈர்ப்பிற்குள் சென்று
அங்கே தான் அடுத்த உடல் பெற முடியும்.
இதை எல்லாம் குருநாதர் இயற்கையின் செயல்கள்
என்று காட்டினார். அதை எல்லாம் கண்டுணர்ந்த பின்பு தான் (மூன்று இலட்சம் பேரைச் சந்தித்து) உங்களுக்கும் தெரியப்படுத்துகின்றோம்.
ஆக… நன்மை செய்த நிலைகளில்
அந்த நல்லவர்களைக் காத்திட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
ஒவ்வொரு கூட்டு தியானத்திலும் இணைந்து கொண்டு அங்கே
கலந்து கொண்ட அனைவருக்கும் “மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க
வேண்டும்” என்ற எண்ணத்தை ஓங்கிச் செலுத்த வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல்
முழுவதும் படர வேண்டும். அவர்கள் குடும்பத்திலே
மகரிஷியின் அருள் சக்தி படர வேண்டும். அவர் குடும்பத்தில் உள்ள இன்னல்கள்
நீங்க வேண்டும். அவர்கள் வாடிக்கையாளர் அனைவரும் நலம் பெற வேண்டும் அவர்கள்
உடல் நலம் பெற வேண்டும் அவர்கள் வாழ்க்கையிலே மகிழ்ச்சி பெற வேண்டும். என் பார்வை அவரை
நல்லவராக்க வேண்டும் என்ற உணர்வுகளைச் செலுத்தினால்
1.இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள்
வலுவாகின்றது.
2.இந்தச் சொல்லின் வாக்கும்
உங்களுக்குள் விளைகின்றது.
3.உங்கள் வாக்கின் மூச்சு அவரை நலம் பெறச்
செய்கின்றது.
4.இதை இந்த வாழ்க்கையில் பொறுமையாக இருந்து
செயல்படுத்துதல் வேண்டும்.
வயலிலே காய்கறிகளின் விதைகளைப்
போடுகின்றோம். அப்படிப் போட்டவுடனே அதைச் சமைக்க முடியாது. அதைப் பக்குவமாக விளைய வைத்து ஒருவர் பறிப்பர். அதை இன்னோருவர் எடுத்துக்
கொண்டு போய் கடையில் வியாபாரம் செய்வார்.
நாம் கடைக்குச் சென்று அதை வாங்க
வேண்டும். அதற்குப் பின் அதைச்
சமைத்துப் பல பொருள்களைச் சேர்த்துச்
சுவையாக்கி அப்புறம் தான் நாம் உணவாக உட்கொள்ள முடியும்.
இதைப் போன்று தான் பக்குவப்படுத்திச்
சமைத்துச் சாப்பிடுவது போன்று தான் நாம்
எண்ணியதைக் கொண்டு எடுக்கும் இந்தத் தியானத்தின் நிலைகள்.
மெய் ஞானிகள் அருள் சக்திகளை
நாம் பெற்று அதை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதை வளர்த்துக்
கொள்வதற்குத் தான் உபதேசமாகக் கொடுக்கின்றோம்.
1.நீங்கள் எண்ணியவுடன் அந்த மெய் ஞானிகளின் ஆற்றலைக் கிடைக்கச் செய்கின்றோம்.
2.எண்ணி எடுத்த பின் உங்கள்
உடலுக்குள் வரும் துன்ப நிலைகளை நீக்கி நல்வினைகளை நீங்கள்
கூட்டிக் கொள்ள முடியும்.
மாங்காய் புளிப்பாக இருப்பது
கனியாகும் பொழுது அது சுவை ஆகின்றது. அதிலிருந்து அந்த மாவித்தாக வருகின்றது. அந்த வித்தினை நாம் நிலத்திலே ஊன்றினோம் என்றால் மரமாக அது மீண்டும் முளைக்கின்றது.
நம் உயிர் ஆரம்ப நிலைகளில் வித்தாக உருவாகி மற்ற
செடி கொடிகளாக உருவாகி மரமாகி பூவாகி பிஞ்சாகி காயாகிக்
கனியாகின்றது. பல உயிரினங்களாக நாம் இருக்கும்
பொழுது அது மரமாகி… மனிதனாகும் பொழுது பூவாகி பிஞ்சாகி… அந்தப்
பிஞ்சின் தன்மையிலிருந்து காயான நிலையில் இருக்கின்றோம்.
1.இந்தக் காயின் தன்மையில் இந்த
உடலில் இருக்கக்கூடிய உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாற்றும் பொழுது
2.உயிருடன் ஒன்றிய கனியாக முழுமை பெறுகின்றது… கனிந்து விட்டது…!
3.உயிர் எப்படியோ அதைப் போன்று உணர்வுகள் ஒளியாகும்
பொழுது நிலையான சரீரம் பெறுகின்றோம்.
அந்த நிலையான ஒளிச்
சரீரம் பெற்ற மெய் ஒளியை உங்களுக்குள் சேர்ப்பிக்கச் செய்வதற்குத்
தான் “திரும்பவும் ஒரு ரவுண்டு உங்களுக்குள் வந்து” நினைவின்
செல்களில் பதியச் செய்கின்றேன்.
அதை மீண்டும் நீங்கள் நினைவு கொண்டு எண்ணும் பொழுது
காற்றில் பதிந்திருக்கும் அருள் ஞானிகள்
உணர்வை நீங்கள் எளிதில்
பெற முடிகின்றது. “அருள் ஞானிகளாக நீங்களும் வளர முடிகிறது…”