
அவ்வளவு பெரிய பவரை (சக்தியை) உங்களுக்குக் கொடுக்கின்றேன்
உங்களுக்கு எல்லா நிலைகளும் பெறுவதற்காகச்
சுலபமாகச் சக்திகளைக் கொடுக்கின்றோம். அதை ஆத்ம
சுத்தி செய்வதன் மூலம் எடுத்து நல்ல முறையில் ஒவ்வொரு
நொடிப்பொழுதும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
1.எந்த நேரம் சங்கடங்கள் வந்தாலும் சரி… உடனே ஆத்ம சுத்தி
செய்யுங்கள்… உங்களிடம் அழுக்குகள்
சேராது.
2.அவ்வளவு பெரிய பவரை (சக்தியை) உங்களுக்குக்
கொடுக்கின்றேன்.
3.ஏனென்றால் நான் இதை எல்லாம்
அனுபவித்து வந்தது.
நொடிக்கு நொடி… நொடிக்கு
நொடி… என்னை
இம்சை பண்ணித் தான் குருநாதர் சக்திகளைக்
கொடுத்தார். உங்களுக்கு எப்போதெல்லாம் இம்சை வருகின்றதோ அப்பொழுது
அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து உங்களை நீங்கள் காத்துக்
கொள்ளுங்கள் என்று சொல்கின்றோம்.
ஆனால்… “எங்கெங்கே நேரம்
இருக்கிறது…?” என்று சிலர் இதைச் செயல்படுத்துவதில்லை. யாம் எந்த அளவுக்குச் செய்கின்றோமோ அந்த அளவுக்குச் சாமிக்கே
விஷம் கொடுக்க வந்து விடுகின்றார்கள்.
இரவு பூராமே சாமியை
வணங்கிக் கொண்டிருந்தேன்…! “எனக்கு இப்படி இருக்கின்றதே…” என்று என்னை நினைத்து அழுது வேதனைப்பட்டுக்
கொண்டே இருக்கின்றார்கள்.
சினேகிதர்களுக்குள் ஒருவருக்கொருவர்
எண்ணினால்… நண்பர்களாக எண்ணும் பொழுது விக்கல்
பாய்கின்றது. துரோகம் செய்தான் பாவி என்றால் புரையேறுகின்றது. பாசத்துடன் இருக்கிறோம் என்றால் மனது படக்கு படக்கு என்று
இனம் புரியாதபடி பயத்தைத் தூண்டுகின்றது.
தாய் தன் பிள்ளைகளைப் பாசத்தால்
எண்ணி… அது வெளியில் சென்று வரக் காலதாமதம் ஆகிவிட்டால் “என்ன ஆனதோ… ஏதானதோ…!” என்று சும்மா
நினைத்துக் கொண்டிருந்தால் போதும்.
பிள்ளை நல்லவனாகத் தான்
இருப்பான். இருந்தாலும் இந்தத் தாயினுடைய உணர்வு பாய்ந்து
அவனைத் தவறான நிலைகளுக்கு அழைத்துச் சென்று விடும். இயந்திரத்தில் வேலை
செய்து கொண்டிருந்தான் என்றால் அவனை அறியாதபடி கையை அதற்குள் கொடுத்து விடுவான்… விபத்தாகி விடும். இதெல்லாம் பாச உணர்வின் செயல்கள்.
இதே போன்று தான் சாமி மீது பக்தியாக இருந்து “இரவெல்லாம் தலை வலிக்கிறது
உடல் வலிக்கிறது என்று மேல் வலிக்கிறது” என்று வேதனையுடன் புலம்பிக்
கொண்டுள்ளார்கள்.
1.ஆத்ம சுத்தி செய்யுங்கள்
என்று யாம் சொல்லி இருந்தாலும் அந்த நேரத்தில் அதைச் செய்வதில்லை…
2.என்னைத் தான் நினைக்கின்றார்கள்… அப்போது இவர்களுடைய உணர்வு
என்னைப் பாதிக்கின்றது.
ஏனென்றால் பாசத்தால் எல்லோருடைய
உயிரையும் நான் கடவுளாக மதித்து நினைக்கப்படும் பொழுது… அவர்கள்
இப்படி நினைக்கின்றார்கள்.
ஒரு வீட்டிலே நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள்
என்றால் அவர்களிடம் குறைகள் இருந்தது என்றால் தாய் தந்தையரால் அதைச்
சமாளிக்க முடிவதில்லை.
ஆனால் ஒரு 2000 பேர் சேர்ந்து கஷ்டம்
நஷ்டம் என்று என்னை எண்ணினால் எப்படி இருக்கும்…? நான் உங்கள் மேல்
பாசமாக இருக்கின்றேன்.
பாசத்திலே குறையாக எண்ணி என்னிடம் அந்த நினைவைச்
செலுத்துகின்றார்கள். அது என்னைத்தான் பாதிக்கின்றது.
இதைச் சமாளிப்பதற்கு உயிரைக்
கடவுளாக மதித்து உங்களுக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் உங்கள் துன்பங்கள் அகல வேண்டும் என்று சதா தியானம்
செய்து கொண்டிருக்கின்றேன்.
இதை யாரும் நினைக்க மாட்டேன் என்கிறார்கள்…!
ஒரு சமயம்… அதிகாலை மழை பெய்து
கொண்டிருக்கும் பொழுது குழந்தைக்கு இளம்பிள்ளை வாதம் என்று எம்மைச் சந்திக்க
வந்தார்கள். பக்கத்து கிராமம் தான்.
பெண் குழந்தைக்கு ரெண்டு காலுமே
சுவாதீனம் இல்லை. அது படுகின்ற அவஸ்தை பார்த்தால் எவ்வளவோ இருக்கின்றது. இப்படி இருக்கிறதே…! என்று அழுது கொண்டு வருகின்றார்கள். இரண்டு வருடம்
ஆகிவிட்டது ஒன்றும் செய்ய முடியவில்லை என்றார்கள்.
ஆசிர்வாதம் கொடுத்து அந்த நரம்பின் இயக்கங்களைச்
சீர் செய்த பின் அது நன்றாக ஆனது. ஆனால் அதற்கு பின் என்ன ஆனது…?
நன்றாகிச் சென்று
அதற்குப்பின் எம்மை என்ன… ஏது…? என்று ஒரு முறை
எட்டிக் கூட வந்து சந்திக்கவில்லை.
1.தூக்கிக் கொண்டு வந்தோம்… வைத்தியம் பார்த்தோம்…
2.சரியாகி விட்டது…! என்று அதோடு சென்று விட்டார்கள்.
யாம் உங்களுக்குப்
போதிப்பது என்ன…?
ஒவ்வொரு நாளும் தீமைகள் வரும் பொழுதெல்லாம் “அந்த மகரிஷிகளின் மூச்சலைகளை எடுத்து”
1.உங்களுக்குள் அந்தத்
தீமை வராதபடி காத்துக் கொள்ளுங்கள்
2.உங்கள் எண்ணத்தால் உங்களைக்
காத்துக் கொள்ள முடியும் என்று தான் சொல்லிக் கொண்டு
வருகின்றோம்.
ஆனால்… சாமியாரையும் மற்றவர்களையும்
தான் தேடிப் போக வேண்டும் என்று விரும்புகின்றார்களே தவிர
1.தனக்குள் அந்த உயர்ந்த உணர்வை
எடுத்துத் தீமைகள் வராது
2.தன் எண்ணத்தினால் மாற்றிக் கொள்ள முடியும் என்று யாம் சொல்வதைக் கவனிப்பதில்லை.
அதைத் திரும்பக் கேட்டோம் என்றால் “எங்கெங்கே…? இதற்கெல்லாம் நேரமில்லை…! என்று இப்படித்தான்
சொல்கின்றார்கள். “காசைச் செல்வழித்துத் தான் உடலைச்
சரி செய்ய வேண்டும்” என்று விரும்புகின்றார்கள்.
மனிதனாகப் பிறந்து இருக்கின்றோம். தன்னுடைய
எண்ணத்தால் எடுத்து எத்தகைய தீமையும் மாற்றி அமைக்க முடியும் என்று பல முறை
யாம் சொன்னாலும் அதை எடுத்துக் கொள்ள அவர்களால்
முடியவில்லை…!
இதைக் கேட்டுணர்ந்தோர் உங்களுக்குள் அந்த
முழுமையான சக்தி இருக்கிறது என்பதை நம்பிப் பழகுங்கள்.