ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 10, 2025

சாமி எதை எதையோ சொல்கிறார்… இது எல்லாம் தனக்குத் தேவையா…? என்று சிலர் எண்ணுவார்கள்

சாமி எதை எதையோ சொல்கிறார்… இது எல்லாம் தனக்குத் தேவையா…? என்று சிலர் எண்ணுவார்கள்


வாழ்க்கையில் நாம் நல்லதே எண்ணி இருந்தாலும் பிறிதொரு தவறான உணர்வுகளைஅல்லது பிறர் தவறு செய்யும் உணர்வுகளை நாம் கண் கொண்டு பார்க்கப்படும் பொழுது அவர் உடலிலே விளையும் உணர்வை நாம் நுகர நேருகின்றது.
 
நுகர்ந்த உணர்வுகளை உயிர் உணர்த்திக் காட்டினாலும் அந்த உணர்வின் சத்து நமக்குள் பதிவாகி விடுகின்றது. இதைப் போன்று தான்
1.இப்பொழுது நாம் சொல்லும் வார்த்தைகளை நீங்கள் கூர்ந்து கவனிக்கப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மையை நுகர நேருகின்றது.
2.நுகர்ந்த உணர்வுகள் உங்கள் உடல் முழுவதும் படர்கின்றது அப்படிப் பரவிய உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகி விடுகின்றது.
 
இதை ஏன் சொல்கிறோம் என்றால்… இந்த மனித வாழ்க்கையில் நீங்கள் தவறு செய்யாமலேயே உங்கள் உணர்வு இயக்கும் நிலையில்அதாவது பிறிதொரு உணர்வுகள் உங்கள் உடலுக்குள் புகுந்து அது இயக்கும் நிலையில் நீங்கள் அதைக் கட்டுப்படுத்தும் நிலைக்கு அதை வழிகோல் செய்வதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்…”
 
ஏனென்றால்
1.இதையெல்லாம் சொல்லி நாம் கேட்டறிந்து என்ன செய்யப் போகின்றோம்…?
2.சாமி சுருக்கமாகச் சொன்னால் போதுமே என்று சிலர் எண்ணுவார்கள்.
3.நான் சுருக்கமாகச் சொல்வதற்கில்லை…!
 
நீங்கள் விரிவாகத் தெரிந்து கொண்டாலும் பாட நிலையாகத் தான் கற்றுக் கொள்ள முடியும் உட்பொருளைக் காண முடியாது.
 
உதாரணமாககல்வியில் படிக்கும் பாட நிலையை எந்த மனது கொண்டு படிக்கின்றீர்களோ அந்த மனதைக் கொண்டுதான் அது முழுமையாக வரும். ஆகதன் வீட்டில் எந்த அளவிற்கு மன நிம்மதி இருக்கின்றதோ அந்த உணர்வு முன்னணியில் இருக்கும்… நன்கு படிக்க முடியும்.
 
ஆனால் வீட்டிலே சிறிது சஞ்சலப்பட்டு அந்த உணர்வுகள் வந்து கொண்டேயிருந்தால் இன்ஜினியரிங் படிக்கக் கூடியவர்கள் தன் படிப்பை அங்கே படித்தால்
1.எதைக் கூர்மையாகக் கவனித்தாலும் இந்தச் சஞ்சல அலைகள் கலந்து தான் பதிவாகும்.
2.மீண்டும் நினைக்கப்படும் பொழுது இது சரியா…! தவறா…? என்று அதைச் சரியாக நிர்ணயம் செய்ய முடியாதபடி சஞ்சல நிலைகளையே உண்டாக்கும்.
 
சஞ்சல நிலைகள் உண்டான பின் தேர்விலே கேள்விகள் கேட்கப்படும் பொழுது அதனின் விடையை அறிந்து கொள்வதற்காகச் சிந்தித்தாலும்
1.அந்தக் கேள்வியைக் கண்டாலே ஒரு திகைப்பான நிலையும்
2.அதனால் பரீட்சையில் தேறாத நிலைகளாக வந்துவிடும்.
 
ஆனால் பரீட்சை எதற்காக வைக்கின்றார்கள்…?
 
தான் படித்ததை அந்தந்த நேரங்களில் (திடீரென்று) அதைச் சிந்தித்து து இப்படித்தான் என்று நாம் அறிந்து கொள்வதற்காக படித்த நிலையை வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ பரீட்சை வைக்கப்படும் பொழுது நமக்குச் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் மூலமாக நாம் படித்ததை அறிந்து தேறுவதற்காக அதை வைக்கின்றார்கள்.
 
ஆனால் இந்த வாழ்க்கையில் வீட்டிலே அமைதி கொண்டிருந்தாலும் வெளியிலே வரப்படும் பொழுது என்ன நடக்கிறது…?
 
நண்பர்கள் பால் உள்ள பற்றால் ஆர்வ உணர்வுகள் தூண்டப்பட்டு அதன் வழியில் சென்று விட்டால் படிப்புக்கு என்று செல்லப்படும் பொழுது கல்வி கற்கும் இட்த்தில்
1.நுண்ணிய உறுப்புகளின் செயலை இதை இப்படி இதில் பொருத்தினால் இன்னது தான் நடக்கும் என்று சொல்லிக் கொடுக்கும் போது
2.அங்கே அதைக் கூர்மையாகக் கவனிக்கும் நிலைகள் வரும் பொழுது
3.ஆர்வ உணர்ச்சிகள் தூண்டப்பட்ட நண்பர்களிடமிருந்து வந்த உணர்வு முன்னணியில் வந்து
4.அதை எண்ணிய உடனே ஆசிரியர் சொல்லிக் கொடுப்பது மனதிற்குச் சிக்கலாக வரும்…”
 
“தனக்குள் இது சரியாக வரவில்லையே…” என்ற உணர்வு இயக்கப்படும் பொழுது
1.தன் நினைவலைகள் வரப்படும் பொழுது கண்ணின் ஈர்ப்பு சக்தி சோர்வடையும்... கண் கனமாகும் தன்னை அறியாமலேயே தூக்கம் வரும்.
2.நான் படிக்கச் சென்றேன் ஆனால் எனக்குத் தூக்கம் வருகிறது என்னால் முடியவில்லை…! என்று சொல்வார்கள்.
 
ஏனென்றால் நுண்ணிய கருத்த்துக்கள் பாடநிலையாக வரும் பொழுது அதை எடுத்து எண்ணத்துடன் பிணைத்து அதனைத் தெரிந்து கொள்ளும் நினைவலைகளை ஊட்டப்படும் பொழுது நண்பரின் ஆர்வத்தின் உணர்வுகளைக் கொண்டு வந்த உடனே அது முடியாத நிலைகள் கொண்டு படிக்க வேண்டியதை மறைத்துக் கொண்டே இருக்கும்…”
 
நண்பன் அங்கேல்லாம் சென்றார் அழகான இடங்களைக் கண்டார் அந்த மகிழ்ச்சியூட்டும் நிலைகளைப் பார்த்தார் என்று இந்த நினைவலைகளை எண்ணப்படும் பொழுது… காரணம்
1.தொழிலிலே மிகவும் லாபமாகச் சம்பாதிக்கின்றார்கள் அதனால் இப்படி வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள் என்று
2.இப்படிப்பட்ட ஆர்வங்கள் உந்தப்படும் பொழுது இது முன்னணியில் வரும் பொழுது கல்வியைச் சீராகக் கற்க விடாது
3.அது பதிவானாலும் நினைவுபடுத்திச் சரியாகச் செயல்படுத்த முடியாது.
 
இதுகள் எல்லாம்… இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணினாலும் மாறுபாடான செயல்கள் எத்தனையோ நடக்கின்றது.
 
ஒரு கடைக்குச் செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அங்கே தெரிந்தவர்கள் வந்துவிட்டால் அந்தக் கடைக்காரர் அவர்களைத்தான் முதலிலே கவனித்துச் சரக்கை எடுத்துக் கொடுப்பார்.
 
என்னங்க…! எனக்குச் சரக்கு கொடுங்கள் என்று நாம் சொல்லிக் கொண்டிருப்போம். நாம் சொல்லச் சொல்ல நேரம் ஆக ஆக நம்மை அறியாமலே கடைக்காரர் மீது நமக்குக் கோபம் வரும்.
 
அந்தக் கோபத்துடன் பார்க்கப் பார்க்க நம்மைக் கடைக்காரர் பார்த்தவுடன் இவர் என்ன…? கொடுப்பதற்கு முன் ஆத்திரப்படுகிறார்…?” என்று இன்னும் கொஞ்சம் நம்மை நிறுத்தி விடுவார்.
 
நாம் பொறுமை இழந்து ஏய்யா ரொம்ப நேரமாக நான் நின்று கொண்டிருக்கின்றேன்…! நீ சரக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறாய்…!” என்று ஸொல்வோம்.
 
வாழ்க்கையில் நம்மை அறியாமலேயே ஒவ்வொரு செயல்களிலும் இத்தகைய உணர்வுகள் பதிவாகி விடுகின்றது. நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணினாலும்
1.நல்ல குணங்களுக்குள் இது எல்லாம் கலந்த பின் எதை எண்ணினாலும் கலக்கமுடன்தான் இருக்க முடிகின்றதே தவிர
2.நிம்மதியான நிலைகள் கொண்டு எந்தச் சொல்லையும் நல்லது என்று வலு கொண்டு நிலைத்திருக்க முடியவில்லை.
3.எதை எடுத்தாலும் கவலையும் சஞ்சலமும் ஏற்பட்டு எல்லா குணங்களிலும் கலக்கச் செய்து அந்த உணர்வை நுகரப்படும் பொழுது
4.எதன் எதன் அளவைக் கூட்டிக் குறைத்துச் சுவாசித்தோமோ அதற்குத் தக்கவாறு உடல் உறுப்புகளில் நோய்கள் உருப்பெறுகின்றது.
 
இதை எல்லாம் மாற்ற வேண்டும் அல்லவா…! அதற்கு என்ன சக்தி வைத்திருக்கின்றோம்…?