ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 22, 2017

மாரடைப்பு (HEART ATTACK) ஏன் எப்படி எதனால் வருகின்றது? அதைத் தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்

அடிக்கடி நீங்கள் சலிப்படைந்தால் உங்கள் உடலில் எப்படி உமிழ் நீர் சுரக்கிறது?

புளியங்காயை வெயில் காலங்களில் சாப்பிட்டால் எப்படி இருக்கும்? எச்சில் ஊறும். மாங்காயை நீங்கள் வெயில் காலத்தில் சாப்பிட்டிருக்கிறீர்களா…? அது சாப்பிட்டால் எப்படி இருக்கும்?
1.மாங்காய் என்று சொல்லும் போதே
2.உங்கள் உணர்வுகள் அந்த உமிழ் நீர் அது எப்படிச் சுரக்கின்றது?

இதைப் போன்று தான் அடிக்கடி சலிப்பு என்ற எண்ணங்கள் எண்ணுவோருக்கு சலிப்பென்ற எண்ணங்கள் தான் இருக்கும். சலிப்பு என்றால் புளிப்பு.

இருப்பினும் நாம் சுவாசித்த உணர்வுகள் இந்தச் சலிப்பின் உமிழ் நீர்கள் அதிகமாகச் சேர்ந்தவுடனே அடிக்கடி “இப்படிச் செய்தான்…! இப்படிச் செய்தானே…!” என்ற கோப உணர்வுகளைத் தூண்டச் செய்யும்

கோப உணர்வுகளைத் தூண்டச் செய்யும் போது
1.சலிப்பால் ஏற்பட்ட உமிழ் நீர் உறையும் தன்மை அடைகின்றது.
2.நாம் தண்ணீரைச் சுண்ட வைத்தால் எப்படி ஆகின்றதோ
3.இதைப் போல் உமிழ் நீர் இது போல ஆகி அது சளி என்ற நிலைகள் திக்காக மாறும்.

சளி கட்டியாக மாறும் போது இந்தச் சலிப்பின் தன்மை உமிழ் நீரைச் சுரக்கச் செய்ய
1.சுரந்த உமிழ் நீர் உறையச் செய்ய
2.உறைந்த நிலைகள் சுவாசப் பையில் உறைந்தபின்
3.ஆஸ்துமா போன்ற நோய்கள் “கிஷ்ஷு… கிஷ்…” என்று
4.நமக்குள் திகைப்பின் நிலைகள் ஆகிவிடும்.

எவர் ஒருவர் சலிப்பும் சஞ்சலமும் அதிகமாக எடுக்கின்றனரோ அவர்களுக்கு இந்த உணர்வின் நோய் நிச்சயம் வரும்.

நாம் தவறு செய்ய வில்லை.

ஆனால் இந்த உணர்வின் தன்மை நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறும் போது ஒரு குழம்பிற்குள் புளிப்பை அதிகமாகப் போட்டால் அந்தப் புளிப்பின் சுவை இருப்பது போல நம் ஆன்மாவில் புளிப்பின் உணர்ச்சிகளே முன்னணியில் நிற்கும்.

இதைத்தான் விநாயகத் தத்துவத்தில் கணங்களுக்கு அதிபதி “கணபதி” என்று சொல்வார்கள்.

நமது உடலில் எத்தனை குணங்கள் இருந்தாலும் இந்தப் புளிப்பான உணர்வுகள் நாம் அதிகமாக எடுத்து விட்டால் நமது உடலில் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்கெல்லாம் அதிபதியாகி
1.அடிக்கடி புளிப்பாகப் பேசுவதும்
2.சலிப்பான நிலைகள் செயல்படுத்தும் தன்மை வந்துவிடும்.

அதுதான் கணங்களுக்கு அதிபதி கணபதி.

அதே சமயம் சலிப்பின் தன்மை அதிகமாகும் போது நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நமக்குள் மூஷிகவாகனா.

நாம் எந்தக் குணத்தைச் சுவாசிக்கின்றோமோ இந்த உணர்வின் சக்தி அதிகமாக அந்தப் புளிப்பான செயல்களைச் செயல்படுத்தும் போது இந்த குணமான நிலைகள் இந்த உடலை அழைத்துச் செல்லும்.
1.இந்த உடலுக்குள் உணர்வலைகளை இயக்கிக் காட்டும்.
2.அதனால் தான் மூஷிகவாகனா.

எலி என்ன செய்கின்றது..? ஒரு நிலத்தில் தனக்கு வேண்டிய வீட்டை வசதியாக ஏற்படுத்திக் கொள்ளுகின்றது. சமமாக இருக்கும் நிலத்தை அது வங்கிட்டு கொள்கின்றது.

இதைப் போல நமக்குள் இருக்கும் குணங்கள் அனைத்தும் நாம் அடிக்கடி சலிப்பு என்ற புளிப்பான செயல்களைச் செய்வோம் என்றால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைச் செயலற்றதாக்கி இந்தப் புளிப்பின் உணர்வுகள் தனக்குள் வங்கிட்டுக் கொள்ளும்.

இந்தப் புளிப்பின் தன்மை அடையப்படும்போது அதிகமாகச் சாப்பிட்டவுடன் உமிழ் நீர் சுரக்கும். ஆஸ்துமா போன்ற நோய்கள் வரும். வாயில் ரணங்கள் வரும்.
1.சோறு சாப்பிட முடியாது.
2.வயிறு நிறைந்த மாதிரி இருக்கும்.
3.அதே சமயத்தில் கை கால் குடைச்சல் வரும்.
4.நமக்குள் நம்மை அறியாமலே கோப உணர்வுகளைத் தூண்டும்.
5.உமிழ் நீர் அது மீண்டும் உறையச் செய்யும்.
6.சளியின் தன்மை அதிகம் அடைகிறது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

எடுத்துக் கொண்ட உணர்வுகள் சலிப்பின் தன்மை அதிகமாக இருந்தது என்றால் எல்லா குணங்களுக்கும் அது அதிபதியாக இருந்து இந்தப் புளிப்பின் செயல்களே நமக்குள் செயல்படும்.

விநாயகருக்கு முன் எலியைப் போட்டு மூஷிக வாகனா, நாம் அடிக்கடி இந்த எண்ணங்களை எடுத்தோமென்றால் இந்தப் புளிப்பான குணங்களே இந்த உடலை வாகனமாக நின்று இந்த உடலின் இயக்கமாக மாற்றிக் கொண்டிருக்கும்.

இந்த நிலையைத் தெளிவாகக் காட்டுவதற்குத்தான் விநாயகத் தத்துவத்தையே தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.

ஒருவர் கோபமான குணத்தை வைத்திருப்பார்.

அது கணங்களுக்கு அதிபதியாகிவிட்டால் அவர் உடலிலே ரத்தக் கொதிப்பும் அடிக்கடி பிறரைத் தாக்கும் உணர்வுகளும் தன்னை அறியாமலே கோபிக்கும் நிலைகளும் வரும்.

சாதாரணமாக வேலை செய்து கொண்டிருக்கும் ஒருவரை இந்தக் கோபக்காரர் பார்த்தாலே அந்தக் கோபம் வரும்.
1.இவன் வேலை செய்கிறதைப் பார்…!
2.அவன் போகின்ற போக்கைப் பார்…!
3.அவன் நடப்பதைப் பார்…! என்பார்கள்.

கோபங்கள் அதிகமாக எடுப்பவர்கள் வீட்டில் அவர் சொன்னவுடனே… “போ…” என்றால் போகவேண்டும் இரண்டு எட்டு வைத்தானென்றால் ஓட வேண்டும்.

ஓடவில்லை என்றால் நடக்கிறான் பார்…, போகிறான் பார்…, சொல்வதைக் கேட்கிறானா என்று பார்…, என்று இப்படித் தன்னை அறியாமலே இந்த உணர்வுகள் கணங்களுக்கு அதிபதியாக்கி இந்த உணர்வின் செயலை அது உருவாக்கும்.

இந்த நிலைகளை நாம் எடுப்போமேயென்றால் நாம் எடுக்கும் இந்த உமிழ் நீர் நம் ஆகாரத்துடன் கலந்து அப்படிக் கலந்த நிலைகள் நம் உடலுக்குள் சேர்ந்த பின் அது ரத்தமாக மாற்றும்போது அந்த ரத்தத்துடன் இந்தக் கோப உணர்ச்சிகள் அதிகமாகத் தூண்டுகின்றது.

இந்தக் கோபம் வருவது ஒன்று மட்டும் தனியாக இருப்பதில்லை.

கோபம் வந்ததென்றால் உடனே “இப்படிச் செய்கிறானே… இவனெல்லாம் உருப்படுவானா…?” என்று வேதனைப்படுவார்கள்.

வேதனை என்பது விஷம்.

இந்தக் காரமும் விஷமும் இரண்டும் கலந்து இந்த உணர்வின் சத்து இது ரத்தமாக மாறுமேயானால் நம் இருதயத்தில் உள்ள வால்வு அந்த ரத்தத்தை உறிந்து உடல் முழுவதும் பரவச் செய்யும்.
1.முதலில் அந்த ரத்தத்தை உறிஞ்சும் இந்தப் பிஸ்டன்
2.அது இழுத்துச் சுவாசப்பைக்குள் அது பம்ப் செய்து
3.மீண்டும் கிட்னிக்கு அனுப்பும்.

கிட்னிக்கு வந்தவுடனே அது ரத்தத்தில் இருக்கக்கூடிய நிலையை அது சுத்திகரிக்கும். ஆனால் நாம் எடுத்துக் கொண்ட இந்த வேதனையான உணர்வுகள் இந்த வால்விலே உராயப்படும் போது அங்கே “எரிச்சல்…” ஏற்படும்.

எரிச்சல் - நாம் காரமான நிலைகள் கோபப்பட்டோருடைய உணர்வும் அந்த வேதனைப்பட்ட இரண்டு உணர்வும் கலந்தவுடனே எறும்பு கடித்தால் எப்படி வீங்கி விடுகின்றதோ இதைப் போல
1.இந்த வேதனையும் காரமான குணங்கள் கலந்த இரத்தத்தை இது பம்ப் செய்யும் போது
2.இந்த ரத்தங்கள் வால்வுகளிலே உராயப்படும் போது
3.வால்வுகள் வீக்கமடைந்து விடுகிறது.

அப்போது நம் வால்வுகளிலே இந்த ஒரு பக்கம் பார்த்தோம் என்றால் இந்தப் பக்கம் நெஞ்சு எரிகிறது என்பார்கள். இந்தப் பக்கம் முதலில் எரியும். இந்தப் பக்கம் எடுத்துக் கொண்டால் “பளீர்… பளீர்…” என்று மின்னும்

இந்தப் பிஸ்டன் பம்ப் செய்து உடல் முழுவதும் பம்ப் செய்யும் போது இந்த நிலையை மறு பக்கம் உறுப்புகள் மாற்றி அமைக்கும் இந்த வேளையில் வலி எடுக்க ஆரம்பிக்கும்.

இது வலி எடுக்க ஆரம்பித்த உடனே
1.நெஞ்சு வலி வந்துவிட்டது
2.ஹார்ட் அட்டாக் வந்து விடுமோ….! என்ற பய உணர்வுகள் அதிகமாக வந்துவிடும்
3.நம்மை அறியாமலேயே பல செயல்கள் நடந்துவிடுகின்றது.

இதைப்போல வேதனையும் கோபமும் அதிகமாகி விட்டால் இதனுடைய நிலைகள் அதிகமாக வீக்கமாகி விட்டாலோ
1.பம்ப் செய்யும் அந்த ரத்தத்தை அது சுத்தமாக நிறுத்திவிடும.
2.இதை இயக்கும் சிறு மூளையின் பாகமும் அது இயக்க மறுக்கும்.

இவ்வாறு இயக்க மறுக்குமேயானால் தன் உறுப்புகளில் சுவாசப்பையை அது செயல்படாது நிறுத்தி விட்டால் ஒரு நிமிடத்திற்குள்
1.“பளீர்…” என்று மின்னியது என்ற நிலையில்
2.விரிந்த நிலைகள் மூடாது நிறுத்தி விட்டால்
3.உடனே தன் மூச்சு வெளியிலே போய்விடும்.

தனக்குள் எடுக்கும் காற்றில் இருந்து வரக்கூடிய நாம் எந்தெந்த குணங்கள் எண்ணுகின்றமோ இவை அனைத்தும் சூரியன் காந்த சக்தி அது கவர்ந்து அந்த உணர்வின் சத்தாக நாம் எண்ணும் போது
1.நாம் எந்தக் குணத்தை எண்ணுகின்றமோ அதன் வழி கொண்டு
2.நம் உடலுக்குள் இந்த காந்தப்புலன்கள் மற்றதோடு உராயப்படும் போது தான்
3.நாம் இயங்குகின்றோம்

ஒரு் மோட்டாருக்குள் மேக்னட் பவர் இருக்கப்படும் போது அதனைச் சுழற்றப்படும் போது இடைவெளி விட்டபின் அதனுடைய தன்மைகள் விட்டு விட்டு இருந்தால் அது தான் சுண்டி இழுக்கும் தன்மை பெறுகிறது

இதைப்போலத் தான் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் எந்தக் குணமானாலும் நாம் சுவாசித்த நிலைகள் உயிருடன் உராயப்பட்டு இந்த உணர்வுகள் நமக்குள் கரண்டை உற்பத்தி செய்கின்றது.

அது நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் சத்தை உமிழ் நீராக மாற்றி நம் உடலுக்குள் மற்ற உணர்வுகளுக்கு ஆகாரமாகக் கொடுப்பதும் செயல்படும் இந்த உயிருக்குள்
1.பம்ப் - இழுக்கும் இந்தச் சக்தி (உயிருக்குள்) குறையப்படும் போது
2.இதற்குள் இயக்கச் சக்தி கம்மியானால்
3.நமக்குள் இருக்கக்கூடிய உறுப்புகள் அனைத்தும் செயலற்றதாகி விடும்.
4.இது தான் ஹார்ட் அட்டாக்.

ஆனால் இந்த ஹார்ட் அட்டாக் வரக்கூடியவர்களுக்கு உயிரின் துடிப்பு மட்டும் இருந்து கொண்டிருக்கும். நாடியைப் பார்த்தால் இன்னும் கொஞ்சம் இருக்கும் என்று சொல்வார்கள்.

உயிரின் துடிப்பு என்றும் அழிவதில்லை.

ஆனால் அதே சமயம் ஒரு மனிதன் தீயிலே குதித்தாலும் இந்த உயிரின் தன்மை நெருப்பில் வேகுவதில்லை. இந்தத் துடிப்பின் இயக்கமாகத்தான் இருக்கும்.

இந்தக் கார உணர்வுகள் கணங்களுக்கு அதிபதியாக அது இயக்கப்படும் போது மற்ற உறுப்புகளைத் தனக்குகந்ததாக அது செயல் பட்டாலும்
1.அது செயல் பட முடியவில்லை என்றால்
2.தன் உணர்வின் வேகம் கொண்டு
3.நல்ல குணங்களால் உருவாக்கப்பட்ட அந்த உணர்வின் உறுப்புகளை அது பாழாக்கிவிடுகின்றது.., வீணாக்கிவிடுகின்றது.

இந்த இயற்கையின் நிலைகளில் இது எவ்வாறு இயங்குகின்றது என்ற நிலையை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.

இதைப் போன்ற தீமையான நிலைகளைத் தடுக்க வேண்டும் என்றால் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரான ஈசனை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்தங்கள் முழுவதும் படரவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்தங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இருதயம் முழுவதும் படர வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இருதயத்தில் உள்ள வால்வுகள் முழுவதும் படர வேண்டும்.

இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று
1.உள் முகமாக இந்த உணர்வுகளைப் பாய்ச்சினால்
2.அந்த அணுக்கள் அனைத்தும் உற்சாகம் பெறும்.
3.உங்கள் இரத்தம் தூய்மையாகும்.
4.இருதய வால்வுகள் சீராக இயங்கும்.
5.உடல் முழுவதும் நல்ல இரத்தம் பாயும்.
6.உடல் நலம் பெற முடியும்.

மகிழ்ந்து வாழும் சக்தி பெற முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களால் முடியும்.