ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 15, 2017

எம்மைக் கேலி செய்த பக்கத்து வீட்டுக்காரருக்கு “உண்மையை உணர்த்தினார்” குருநாதர்

ஒரு சமயம் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என் பிள்ளை மீராவிற்குக் காட்சிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். எனக்கு (ஞானகுரு) ஒன்றும் தெரியாது. என் பிள்ளைக்குக் காட்சி கொடுத்து எனக்குத் தெரிய வைப்பார் குருநாதர்.

அப்பொழுது ஒரு சந்தர்ப்பம் என் நண்பரின் மனைவிக்கு உதிரப் போக்கு போய்க் கொண்டிருந்தது.

என் நண்பர் agricultureல் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் மனைவி டீச்சர். நான்கைந்து பெண் குழந்தைகள், அதில் கண் பார்வையற்ற பெண் குழந்தை ஒன்று. அதிக உதிரப் போக்கால் வேலைக்குச் செல்ல முடியாத நிலைமை.

குருநாதரின் சித்தி எனக்குக் கிடைத்திருக்கிறது என்று தெரிந்து அந்த நண்பர் என்னிடம் வந்தார்.

நான் அப்பொழுது கொஞ்சம் குருநாதரிடம் சற்றுக் கோபித்தே பேசிக் கொண்டிருப்பேன். அதனால் “உனக்குக் காட்சி கொடுக்க மாட்டேன்… போ….! உன் பிள்ளைக்குத் தான் காட்சி கொடுப்பேன் என்று காட்சி கொடுத்துக் கொண்டிருப்பார்.

அது சமயம் பக்கத்து வீட்டுக்காரர் தேவர் வந்தார்.

“ஏய்…! நல்லய்யா நாயக்கர் எல்லாவற்றையும் சம்பாரித்து வைக்க நீ என்னென்னவோ வேலை எல்லாம் செய்து கொண்டிருக்கிறாய்…? வித்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறாய்…!” என்று சொல்லி என்னைக் கிண்டல் பண்ணினார்.

என் பெண் பிள்ளை (மீரா) அந்த நேரம் பூஜை செய்து கொண்டிருந்தது. குருநாதர் அதற்குக் காட்சி கொடுத்து "உங்களுக்கு லட்டு கொடுக்கிறார்" என்று சொல்லிக் கொண்டு வந்தது.

எங்கே பிள்ளை…? “லட்டைக் காணோம்…” என்று அவர் (தேவர்) கேட்கிறார்.
  
“கையில் வாங்கிப் பாருங்கள்..” என்று பிள்ளை சொல்கிறது.

“லட்டைக் காணவில்லையே…!” என்று அவர் கேட்கிறார்.

இந்த லட்டின் வாசனையைப் பாருங்கள் என்று பிள்ளை சொல்கிறது  "வாசனை வருகிறதா…?”

"எனக்கு மூக்கடைத்திருக்கிறது. வாசனையே தெரியாது" என்கிறார்.

இன்னும் வேறு என்னென்னவோ கொடுக்கிறார்கள். அடுத்து மாம்பழம் தருகிறார்.

"இல்லை பிள்ளை… எனக்கு வாசனையே தெரியாது" என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியே வாதம் செய்து கொண்டிருக்கின்றார்.

"நிஜமாகவே வாசனை தெரியவில்லையா…?"

தெரியவில்லை…! என்கிறார்.

நன்றாக வாய் நிறைய வெற்றிலை போட்டிருந்தார்.

அவர் இப்படியே சொல்லிக் கொண்டிருந்தவுடன் பிள்ளைக்குக் காட்சியைக் கொடுத்து.., “இப்பொழுது முகர்ந்து பாருங்கள். நன்றாக உறிஞ்சிப் பாருங்கள்"  என்று சொல்கிறது.

"நான் என்னத்தை உறிஞ்சினாலும் வாசனை தெரியாது"  என்கிறார்.

"நன்றாக… உறிஞ்சிப் பாருங்கள்…” என்று சொல்லவும் “அவ்வளவு தான்…” "நச்…நச்…நச்…," என்று தும்ம ஆரம்பித்தார்,

வாயில் போட்டிருக்கும் வெற்றிலை சட்டை வேஷ்டி முழுவதும் தெறித்தது  control பண்ண முடியாமல் அவர் உதறிக் கொண்டு எழுகிறார்.

"ஏய்… பிள்ளை…! நிறுத்து பிள்ளை…! தும்மலை நிறுத்த முடியவில்லை. எனக்கு எப்படியோ… உயிர் போகிற மாதிரி இருக்கின்றது…! உன் குருநாதரிடம் சொல்லி “என்னைக் காப்பாற்று.. பிள்ளை…” என்று சொல்ல ஆரம்பிக்கிறார்.

நடந்த நிகழ்ச்சி இது.

இனிமேல் சொல்ல மாட்டேன் இந்த மாதிரி எல்லாம் சொல்லமாட்டேன்  என்று சொல். உங்கள் தும்மல் நிற்கும் என்று பிள்ளை சொல்கிறது.

"நான் இனிமேல் உங்கள் அப்பாவைக் கிண்டலாகச் சொல்ல மாட்டேன்" என்று சொன்ன பிறகு தும்மல் நின்றது.

இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது உதிரப் போக்கை நீக்க என் நண்பரும் அங்கே வந்திருந்தார்.

மனைவிக்கு உதிரப் போக்கு ஆனால் டாக்டர்கள் எல்லாம் கைவிட்டு விட்டனர். ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆபரேஷம் செய்தும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.

தினம் அது போய்க் கொண்டே இருக்கிறது. இந்தா… அந்தா.., என்று இப்படி ஆகிவிட்டது.

அப்படியா…! நிஜமாவா…? என்று பிள்ளை மூலம் குருநாதர் கேட்க அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இவர் என் நண்பர். அவருக்குக் கொஞ்சம் “உதவி செய்யுங்கள் சாமி…” என்று நான் குருநாதரிடம் கேட்கிறேன்.

"ஏன்டா…?” உனக்கே மூல நோய் இருக்கிறது.

அதை விட்டுவிட்டு அங்கே இரத்தம் போய்க் கொண்டிருக்கிறது என்று இதைக் கேட்கிறாய். நீ உன் மூலத்தைச் சௌகரியமாவதை விட்டுவிட்டு உதிரப் போக்கைக் கேட்கின்றாயா…?”

இப்படித் திடீர் என்று என்னிடம் கேட்கிறார்.

என் பிள்ளை மூலமாகப் பேசிக் கொண்டிருந்த குருநாதர் என் பிள்ளையிடம் சொல்வதை விட்டு விட்டு என்னிடம் நேரடியாகக் கேட்கிறார்.

உனக்கு மூல நோய் இருக்கிறது. அதே போகவில்லை. நீ அவர்களுக்குக் கேட்கிறாயே என்கிறார். “உனக்குக் கேள்…!” என்றார் குருநாதர்.

இல்லை…, பாவம்… அந்த அம்மாவிற்கு உதவி செய்தால் போறும். எனக்கு எப்படி மூலம் இருந்தாலும் நான் “எப்படியோ சமாளித்துக் கொள்வேன்” என்று சொன்னேன்.

இப்படிச் சொன்னவுடன் "சமாளித்துக் கொள்வாயா…" என்று குருநாதர் சொல்லிவிட்டுச் சிறிது நேரத்தில் பார்த்தால் "பளீர்…ர்ர்..” என்று ஒரு இது கேட்டது. (நீளமான) ஆணி வெளியே வந்து என் வேஷ்டியெல்லாம் இரத்தமாக ஆகிவிட்டது.

தும்மித் தும்மி அலுத்துப் போனார் தேவர் இந்த மாதிரிப் பார்த்தவுடன் “இது என்னடா….! பெரிய கூத்தாக இருக்கிறது…!” என்று சொல்லிவிட்டு என்ன செய்கிறார்?

“ஓ… மாப்பிள்ளை…! இது என்னமோ வேலை…!? இனிமே நான் உன்னைத் திட்டவும் மாட்டேன். என்னை… ஆளை விட்டு விடு". உனக்கே இரத்தம் வந்து விட்டது. இப்படி நடந்து கொண்டிருக்கிறது என்று அவர் அரண்டு போய் விட்டார்.

உதிரப் போக்குக்காக வந்த நண்பரிடம் ஓமப் பொடி வாங்கிக் கொண்டு வரச் சொன்னார் குருநாதர்.

அவர் வாங்கிக் கொண்டு வந்தார்.

"இதை சாப்பிடச் சொல்லு. உதிரப் போக்கு நின்றுவிடும். போ…" என்கிறார் குருநாதர்.

"என்னங்க…! ஓமப் பொடியைப் போய்ச் சாப்பிடச் சொல்கிறீர்கள் என்கிறார், நண்பர்.

"உதிரப் போக்கு நிற்க வேண்டுமா வேண்டாமா…?

நிற்க வேண்டும் என்றால் கொண்டு போய்க் கொடு. இல்லை என்றால் விட்டுவிட்டுப் போய்விடு.

அவனுக்கு இ்ரத்தமாகப் போகிறது அவன் சாப்பிடட்டும்" என்கிறார்.

இப்படிச் சொல்கிறார்… குருநாதர்…!

என் பிள்ளை மீராவிடம் சொல்லித் தான் இதைச் சொல்கிறார்.

அப்புறம் அந்த நண்பர் ஓமப் பொடியைக் கொண்டு போய்த் தன் மனைவிக்குக் கொடுத்தார். கொடுத்தவுடன் suddenஆக break போட்டது போல் இரத்தப் போக்கு நின்றுவிட்டது.

திரும்ப வந்த நண்பர் உதிரம் போய்க் கொண்டேயிருக்கும். இப்பொழுது “அப்படியே நின்று போய்விட்டது.” நைனா… இது அபூர்வ சக்தியாக இருக்கிறது என்றார்.

எனக்குச் சாபம் ஏதும் குருநாதர் கொடுத்து விடாமல் இருக்கவேண்டும். என்னை ஆளை விட்டுவிடு என்கிறார். யார்…?

இவ்வளவு நேரம் விரட்டிக் கொண்டு இருந்த தேவர் இப்போது இப்படிச் சொல்கிறார்.

"இனிமேல் நான் சொல்ல மாட்டேன்”. குருநாதரிடம் சொல்லிக் கேள் பிள்ளை என்று என் பெண் மீராவிடம் சொல்கிறார்.

வீட்டை கவனிக்காமல் இருக்கின்றார் என்று நான் சும்மா உன் அப்பா மேல இருக்கின்ற பிரியத்தில் அப்படிச் சொல்லிவிட்டேன். இனி மேல் நான் சொல்ல மாட்டேன் என்கிறார்.

இது நடந்த நிகழ்ச்சி.

அந்தக் காட்சிகளில் அந்த அளவிற்கு அனுபவத்தைக் கொடுத்துத்தான் உலகம் முழுவதற்கும் என் அனுபவத்திலேயே தெரிந்து கொள்ளச் செய்தார் குருநாதர். அதைத் தான் இப்போது நான் உங்களிடம் நான் சொல்வது. 

சூட்சமத்தில் நடப்பதை அது எப்படி நடக்கிறது என்று காட்சியாகவும் காட்டுவார்,