பௌர்ணமி
தியானம் மிகவும் முக்கியம்.
இதை
எதற்காக வேண்டி வைக்கிறோம் என்றால் உங்கள் புலனறிவின் எண்ணங்களை விண்ணை நோக்கச்
செய்து உங்கள் நினைவலைகளை விண்ணை எட்டும்படிச் செய்கின்றோம்.
1.எந்த
ஊரில் நீங்கள் இருந்தாலும் அனைவருமே சேர்த்து,
2.இந்த
எண்ண அலைகளைக் குவிக்கப்படும் பொழுது,
3.நமது
எண்ண அலைகள் வெகு தூரத்தில் பாய்கின்றது
நமது
குருநாதர் அவர் ஆரம்பத்தில் விண் சென்றவர்.
அப்பொழுது
நம் எண்ண அலைகள் ஒன்றாகச் சேர்த்து குவிக்கப்படும் பொழுது மனித உடலிலிருந்து
ஒளியின் உணர்வுகளைப் பெற்று நமது குருநாதர் அவர் “ஆரம்பத்தில் விண் சென்ற
உணர்வுகளை” நாம் அனைவரும் எளிதில் பெற முடிகின்றது.
அந்த
ஒளியின் உடலில் இருந்து வந்த ஒளி அலைகள்தாம்
1.நம்
பூமியில் படரப்பட்டு
2.மற்ற
உடல்களிலே பாய்ச்சப்பட்டு,
3.அந்த
உணர்ச்சிகள் தூண்டி மீண்டும் இங்கே எழுகின்றது.
எழுந்த
நிலைகளில் அந்த வித்தின் சத்துதான் எமக்கும் அது கிடைத்தது.
குருநாதர்
அருள் வழி கொண்டு அவர் கொடுத்த வித்தினை அவர் காட்டிய வழிகளில் வளர்த்து அதை
உங்களுக்குள்ளும் நல்ல வித்தாக விளையச் செய்கின்றோம்.
ஒரு
நெல் பசியை போக்காது. பல நெல்கள் ஒன்று சேர்ந்து ஆக்கப் பணிகளுக்கு பயன்பட்டு அதை
எப்படி உணவாக உட்கொள்கின்றோமோ அதைப் போன்று நாமெல்லம் இந்த நிலைகளைச் செய்தால்
அதன் வழியில் துரித நிலைகளில் பெறமுடியும்.
பல
ஆண்டுகள் யாம் தனித்து எடுத்தாலும் அந்த உணர்வின் தன்மையில் பல ஆயிரங்கள்
வந்தாலும் சத்து சேர்ப்பது மிகக் கடினம்.
நாம்
எல்லோரும் சேர்ந்து அந்த மெய் ஒளியின் தன்மையை நம் குருநாதர் காட்டிய நிலைகளில்
கொண்டு ஒவ்வொரு உடலிலும் சேரும் இந்தத் துன்பத்தை நீக்கி அந்த இன்பத்தின்
நிலைகளைப் பெருக்கிட வேண்டும்.
அதைப்
பெருக்குவதற்கு யாம் சொல்லும் இந்தத் தியானத்தைச் சீராகக் கடைப்பிடித்து ஆத்ம
சுத்தி செய்து அந்த மெய்ஞானியின் அருள் ஒளியை நமக்குள் சேர்க்கும் பொழுது
அனைவருக்குள்ளும் அந்த சத்து விளைகின்றது.
ஆக
நமக்குள் ஒருவருக்கொருவர் கலந்து அந்த உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிச் சென்றால்
தான் முடியுமே தவிர “தனித்து ஒருவர் செல்வோம்… என்பது முடியாது”.
நாம்
அனைவரையும் ஒன்று சேர்க்கும் பொழுது எவர் ஒருவர் முந்திச் செல்கின்றாரோ, அவர் பலன்
பெறுகின்றார். இப்படி நாம் இந்த வழிகளில் சென்று நமக்குள்
உறுதுணையான நிலைகளை ஏற்படுத்திக் கொண்டால்தான் நாம் உருப்பெற முடியும்.
கூட்டு
தியானங்களில் உங்கள் ஒவ்வொருவரையும் ஐக்கியப்படுத்தி பௌர்ணமி தியானங்களில்
எண்ணங்களைக் குவிக்கச் செய்கின்றோம்.
நாம்
நண்பர்கள் என்ற நிலைகளில் சென்றாலும் அடுத்து நாம் இந்த உடலைவிட்டுப் பூமியை
விட்டு இந்த உயிராத்மா செல்லும்பொழுது முறைப்படி நாம் சப்தரிஷி மண்டலங்களில் அந்த
உயிராத்மாவை உந்தித் தள்ள வேண்டும்.
எந்த
குடும்பத்திலிருந்து அந்த உயிராத்மா செல்லுகின்றதோ அந்தக் குடும்பத்தில்
உள்ளோரிடம் அந்த உடலின் உணர்வலைகள் இருக்கின்றது
1.அதை
எண்ணி விண்வெளியின் ஆற்றலை எண்ணும் பொழுது,
2.அந்த
உணர்வின் தன்மை அவர்கள் பெறுவது சுலபமாகின்றது.
அதைப்
போன்று உறவினர்கள், நண்பர்கள் நம்முடைய நிலைகளில் நம் குடும்பத்தாருக்கு
ஒத்துழைக்கப்படும் பொழுது அதன் நிலைகளில் விண் செலுத்துகின்றோம்.
நம்
குடும்பத்தினுடைய நிலைகளில் ஒரு உயிராத்மா விண் சென்றது என்றால் அதனால் பெரும்
லாபம் அடைகின்றோம். “சப்தரிஷி மண்டல அலைத் தொடர்பு” நமக்கு எளிதில் கிடைக்கின்றது.