ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 30, 2017

கொள்ளையர்கள் திருடர்கள் பற்றி அச்சுறுத்தும் உணர்வுகளை எண்ணினால் ஏற்படும் விளைவுகள் – அதை அகற்றி மன பலம் எப்படிப் பெறுவது?

இன்று நாம் பத்திரிகையின் வாயிலாகப் படிக்கின்றோம். ஓடும் பாதையில் இரயிலே கொள்ளையடித்தான் என்ற அதிர்ச்சியான செய்திகளைக் கண்டபின் அந்த உணர்வை நுகரும் போது அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகின்றது.

பதிவான பின் அடுத்து என்ன செய்கின்றது?

அடுத்து இரயிலில் செல்லப்படும் போது அதே நினைவு வந்து அதிர்வின் நிலை ஆகின்றது. உடனே அச்சுறுத்தும் உணர்வு வருகிறது.

“கொள்ளையன் வந்து விடுவானோ…!” என்ற உணர்வின் தன்மை அச்சுறுத்தினால் மற்ற பெட்டிகளில் கொள்ளையடிக்கவில்லை என்றாலும்
1.நாம் வெளிப்படுத்தும் அச்சுறுத்தும் உணர்வின் அலைகள் படரும் போது
2.அதை நுகர்ந்து கொள்ளையடிப்பவன் நாம் இருக்கும் அந்தப் பெட்டிக்கேதான் வந்து சேருவான்.

பார்க்கலாம்.

இதே போன்றுதான் வாகனங்களில் செல்லும் போது “விபத்தில் சிக்கி விடுவோமோ…!” என்று அதிர்ச்சியாகி டிரைவரை எண்ணினால் இந்த உணர்வுகள் ஊடுருவி அதற்குத் தகுந்தாற்போல் அணைத்து அடுத்து ஆக்ஸிடண்ட் ஆகும்.

இவன் எண்ணியபடி டிரைவரின் உணர்வை அணைத்து வண்டிக்குள் இருந்தாலும் இவன் மேல் உராய்ந்து இவன் அடிபடுவான். மற்றவருக்கு ஆவதில்லை. பார்க்கலாம்.

இவர்களின் எண்ணத்திற்கு ஒப்ப அந்த உணர்வின் தன்மைகள் டிரைவரையும் இயக்குகின்றது.

எப்படி ஒரு கம்ப்யூட்டர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் உணர்வை இயக்குகின்றதோ… இதன் வழி தான் நம் உயிர் எலக்ட்ரிக்… நாம் நுகர்வைதை எலக்ட்ரானிக்காக… உணர்வாக மாற்றுகின்றது.

அதன் வழி தான் (உயிரிலே மோதினால் உணர்ச்சிகளாகின்றது) இந்த உடலை இயக்குகின்றது என்பதை விஞ்ஞான அறிவு கொண்டு நாம் தெரிந்து கொள்வது நல்லது.

விஞ்ஞான அறிவில் வளர்கின்றோம். விஞ்ஞானியும் காட்டுகின்றான். அதன் உணர்வின் இயக்கம் எப்படி என்று காட்டிய பின்
1.இனியாவது நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது?
2.நம்மையறியாது தவறு எப்படி வருகின்றது?
3.நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் எப்படி நோயாகின்றது?
4.நோயின் தன்மை வளர்ந்தபின் உடலை எப்படி இழக்கச் செய்கிறது என்பதை
5.மெய்ஞானிகள் காட்டிய உணர்வு கொண்டு அறிந்து உணர்வோம்.
6.வரும் தீமைகளிலிருந்து விடுபடும் அருள் சக்திகளை வளர்த்துக் கொள்வோம்.

அந்த விஞ்ஞானியின் தன்மையில் வளர்ந்து காட்டினாலும் அஞ்ஞான வாழ்க்கையை வாழ்கின்றனர்.

பக்தி மார்க்கத்தில் பற்று கொண்டவர்களும் உண்மையின் உணர்வை அருள் ஞானிகள் காட்டிய வழியில் நுகராது அதை வளர்த்திடாது அதனுடைய நிலைகள் தனியப்படும் போது அஞ்ஞான வாழ்க்கை வாழும் நிலையே பக்தி மார்க்கத்திலும் வருகிறது.

பத்திரிகைகளில் படிக்கும் போது எப்படி இந்த உணர்ச்சி  கொள்ளையர்கள் வந்து விடுவார்களோ என்ற இயக்கத்தின் தன்மை ஆகின்றது.

நாம் இதற்கு என்ன செய்வது? அந்த உணர்வைத் தூண்டுகின்றது. உணர்வின் தன்மை வளர்ந்த பின் பயந்து வாழும் நிலைகளே வருகின்றது.

இரயிலிலே அல்லது வாகனங்களில் செல்லப்படும் போது இந்த உணர்வுகளை அதிகமாகத் தூண்டி நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் அந்த அணுக்களுக்கு அதை வீரிய உணர்வாக ஊட்டி நமக்குள் அச்சுறுத்தும் அணுக்களை வளர்த்து இந்த உடலையே பறி கொடுத்த உணர்வு கொண்டு நல்ல உணர்வையே நாம் பறி கொடுத்து விடுகின்றோம்.

அவன் பொருளைப் பறிகொடுத்தான். உடலை பறி கொடுத்தான். இந்தச் செய்தியைப் படிக்கின்றோம் பதிவாக்கிக் கொள்கின்றோம். நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் கடும் நோயாக வரத்தொடங்கி விடுகிறது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபடுவதற்குத்தான் ஆலயங்களில் அந்தச் சிலையை உருவாக்கிக் காவியத்தைப் படைத்துக் கருத்தினை நுகரும்படி செய்கின்றார்கள் ஞானிகள்.

அவ்வாறு நுகர்ந்த கருத்து அருள் உணர்வின் தன்மை இயக்கமாகி அந்த உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் நல்ல அணுக்களை உருவாக்கி பகைமை உணர்வுகளை அகற்றி நம் சொல் பிறரைக் காக்கும் நிலை வருகின்றது.

ஆலயத்திற்குச் சென்றபின் தீப ஆராதனை காட்டும் போது மகரிஷிகளின் அருள் சக்தியால்
1.இந்த ஆலயம் வருவோர் எல்லாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
2.அவர்கள் குடும்பமெல்லாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
3.தொழில் செய்யும் இடமெல்லாம் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
4.நான் பார்ப்போர் எல்லாம் பொருளறிந்து செயல் படும் தன்மை பெற வேண்டும் என்று இப்படிப்பட்ட உணர்வுகளை நாம் நுகர்தல் வேண்டும்.

தீப ஆராதனை காட்டும் போது அங்கு இருக்கக்கூடிய பொருள்கள் அனைத்தும் தெரியும். பொருள் தெரிந்தபின் அந்தத் தெய்வத்தைப் பார்க்கின்றோம். அது துவைதம்.

“இந்தத் தெய்வம் நல்லது செய்யும்…” என்று உருவமாக்கி அந்த எண்ணத்தை எடுத்து அதைக் காவியமாக்கிப் படிக்கும் போது அந்த நல்ல உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது.

1.சாதாரண மனிதனும் தன்னை அறியாமலே
2.உயர்ந்த உணர்வுகளையும் உயர்ந்த ஆற்றல்களையும் பெறுவதற்கே
3.ஆலயங்களை உருவாக்கினார்கள் ஞானிகள்.

அந்த அருள் உணர்வுகள் நமக்குள் தூண்டப்பட்டால் அருள் ஆற்றல்களைப் பெறக்கூடிய தகுதி வருகின்றது. தெய்வ சக்திகளை நாம் பெறுகின்றோம்.

“நாம் தெய்வமாக வேண்டும்…” என்ற முறையைத்தான் அங்கு வகுக்கப்பட்டது. ஆலயங்களில் அதைப் பதிய வைத்தனர் ஞானிகள். அதன் வழி நாம் நடந்தோம் என்றால் நாமும் தெய்வமாகின்றோம்.