நாம்
ரோட்டில் செல்லும் பொழுது ஒரு வாகனம் வேகமாகச் செல்கிறது என்று வைத்துக் கொல்வோம்.
இது யார் மீதாவது மோதிவிட்டால் “அவர்கள் அவதிப்படுவார்களே…” என்ற எண்ணங்கள்
நமக்குள் தோன்றுகிறது.
அந்த
எண்ணங்கள் தோன்றும் பொழுது நமக்குள் அந்த வாகனத்தின் வேக உணர்வுகள் காணும்பொழுதே மனது
நமக்குள் “பட…பட…” என்று துடிக்கின்றது.
அப்படிப்
பயத்தின் உணர்வுகள் துடிக்கப்படும் பொழுது பய அலைகள் நமக்குள் பெருகிவிட்டால் நம்
சிந்திக்கும் திறனே இங்கே இழக்கப்படுகின்றது.
அப்பொழுது
அந்த வேதனையின் உணர்வுகள் “இது என்ன ஆகுமோ…!” என்ற மன பயத்தால் வேதனை என்ற
உணர்வுகள் தூண்டுகின்றது.
வேதனை
என்ற அந்த நஞ்சு இதனுடன் கலக்கப்படும் பொழுது என்ன ஆகும்?
1.ஏதாவது
ஒரு பொருளைப் பார்த்தவுடன்
2.“அது
கீழே விழுந்துவிடுமோ…” என்ற பயமாகி விட்டால்
3.அந்தப்
பொருளை அந்த எண்ணத்தால் எண்ணும் பொழுது பார்க்கலாம்.
4.அந்தப்
பொருள் கீழே கண்டிப்பாக விழுகும்.
ஆனால்
அதே சமயத்தில்
1.அந்த
மன வலுக் கொண்டு
2.இதை
மாற்றி வைக்க வேண்டும் என்று எண்ணினால்
3.உடனே
அது வரும்.
நாம்
அப்படி எண்ணாமல் “இது கீழே விழுந்துவிடும்..” என்று தான் எண்ணுவோம். ஆனால் எடுத்து
அதை “மாற்றி வைக்க வேண்டும்” என்ற மனம் வராது.
ஆகவே
இந்த உணர்வுகள் இத்தகைய நிலைகள் கொண்டு அதே எண்ணத்திலிருக்கும் பொழுது இந்த
உணர்வின் அலைகள் மோதும் பொழுது
1.நாம்
எண்ணிய எண்ணங்களும்
2.எதிர்படும்
உணர்வுகளும் மோதப்படும் பொழுது
4.காற்றலை
போல் வந்து
4.அந்தப்
பொருள் ஆடுவதைப் பார்க்கலாம்.
ஆக
“மனிதனின் உணர்வின் உணர்ச்சிகள்” அது சிறிதளவு இருப்பதை இதிலுள்ள காந்தப் புலன்
இழுத்து “டப்..,” என்று கீழே விழுகச் செய்யும்.
இதையெல்லாம்
நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.