மாடு ஆடு இவை எல்லாம் நஞ்சின் சத்தைத் தன் உடலாக மாற்றிக்
கொள்கின்றது. ஆனால் அசிங்கமான பொருள்களையும் பல தாவர இனங்களையும் உணவாக உட்கொள்கிறது.
அவைகளை உணவாக உட்கொண்டாலும் அந்த நஞ்சின் தன்மையைத் தன் உடலாக
வலுவாக சேர்த்துக் கொள்கின்றது. ஆனால் அதே சமயம்
1.நஞ்சின் சத்தை உடலாக்கிக் கொண்டாலும்
2.நல்ல சத்தினை மலமாக மாற்றுகிறது.
உதாரணமாக விஷத்தை ஒருவர் உட்கொண்டு விட்டார் என்று வைத்துக்
கொள்வோம். அதனால் உடலு முழுவதும் நஞ்சாக மாறுகின்றது.
அதற்கு எருமை மாட்டின் சாணத்தைக் கரைத்து விஷத்தைக்
குடித்தவரின் பாதத்தை அதன் மேல் வைத்தால் அவர் உடலில் இருக்கக்கூடிய நஞ்சின் தன்மை
கீழே இறங்கி விடும்.
இது வைத்தியரீதியிலேயே இவ்வாறு உண்டு.
ஒரு விஷம் கொண்ட தண்ணீரில் மருந்துகளை அதிகமாகக் கொடுத்து அதனின்
தன்மை அந்த உடலிலே விஷங்கள் பரவச் செய்தாலும் அவரைக் காக்க முடியும்.
உடனடியாக எருமை சாணத்தை எடுத்துக் கொண்டு இது கரைக்கச் செய்து
1.அவருடைய பாதத்தை அதன் மேல் வைத்து விட்டால்
2.பூமியின் நிலைகள் இருக்கும் இந்த காந்தப்புலன்
3.அதை இழுத்துவிடும்.
தாவர இனத்தில் இருக்கும் சத்தினை எப்படி இந்த மாட்டின் தன்மை
உணவாக எடுத்துக் கொண்டதோ இந்த மாட்டின் உடலிலே இருந்த இந்த சத்து இது கரைத்தது போல்
1.இந்த மாட்டுச்சாணம் உடலிலுள்ள விஷத்தினை இழுத்துக்
கவர்ந்து
2.பூமியிலே விட்டு விடும்.
ஆகவே இதைப் போல ஒரு
விஷத்தின் உணர்வின் சத்து எவ்வாறோ அதனின் நிலைகள் இதைச் செய்யும். இது தான் கூர்மை
அவதாரம் என்பது.
நஞ்சின் இயக்க நிலைகளையும் அதை முறியடிக்கக்கூடிய
ஆற்றல்களையும் அந்த ஞானிகள் கண்டுணர்ந்த பேருண்மைகளைக் குருநாதர் காட்டிய அருள்
வழியில் உணர்த்துகின்றோம்.
1.நஞ்சை இழுத்துத் தனக்குள் சேர்த்து சாணத்தை
நல்லதாக்குகின்றது மாடு.
2.அந்தச் சாணத்தை நாம் மிதித்தால் நம் உடலிலுள்ள விஷத்தை
இழுத்து
3.நம் உடலை நல்லதாக்குகின்றது.