ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 2, 2017

சுழிக் காற்று எதனால் உருவாகிறது? நாம் சுவாசிக்கும் பிறர் உணர்வுகள் உயிரிலே பட்டு சுழிக்காற்றாக எப்படி மாறுகின்றது? – அகஸ்தியன் பாதம் பட்ட இடங்களில் பதிந்துள்ள விண்ணின் ஆற்றல்கள்

குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்றார். பல பல தாவர இனங்கள் உருவாகி அதனின் சத்து வெளிவரும் பொழுது சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து அந்த கவர்ந்த உணர்வலைகள் அலைகளாகப் படர்கின்றது.

பல பல செடிகள் உருவாகி அது வந்தாலும் அந்த உணர்வின் மணம் வரப்படும் பொழுது ஒவ்வொரு செடி உருவாகி வெளிப்பட்ட உணர்வலைகள் சூரியனின் காந்த சக்தி இங்கே கவர்ந்திருந்தாலும்
1.எந்தச் செடி உருவாக்கியதோ
2.அந்தச் செடியிலிருந்து வெளிப்பட்ட இந்த உணர்வின் வித்து இன்னொரு பக்கம் பட்டபின்
3.தன் தாய்ச் செடியிலிருந்து வந்ததைத் தன் இனமாகக் கவர்ந்து
4.அந்தச் செடிகள் எவ்வாறு உருவாகின்றது என்று பார் என்று இதைக் காட்டினார் குருநாதர்.

அப்பொழுது அந்தச் செடிகள் ஒன்றுடன் ஒன்று அப்படி இணையப்படும் பொழுது சுழிக் காற்று வருவதைப் பார்க்கலாம்.

மற்ற செடியின் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று இணையப்படும் பொழுது
1.சுழிக்காற்றாக வீசி
2.அதிலே எந்த உணர்வின் சத்து அதிகமாகின்றதோ அது இதைக் கவர்ந்து
3.அதற்குள் சேர்த்து ஓர் உணர்வின் கருவாக உருவாகி
4.புவியின் ஈர்ப்புக்குள் சென்று “ஓர் புதுச் செடியாக” உருவாகின்றது.
5.புதுப் புது செடிகள் இப்படித்தான் தோன்றுகிறது.

இதைப் போல் தான் மனித வாழ்க்கையில் நாம் உயர்ந்த குணங்கள் கொண்டிருந்தாலும் பிறர் செய்யும் எண்ணத்தின் உணர்வுகள் நாம் சுவாசித்து உயிருக்குள் பட்டவுடனே சுழிக்காற்று போல் நமக்குள் சுழலும் தன்மை அடைகின்றது.

நாம் ஒன்றைப் பார்த்த உணர்வின் தன்மை பொறுமையாகக் கண் எடுத்துப் பதிவு செய்தாலும் இந்தச் சுழலின் தன்மை இரண்டும் ஒன்றாகி இது விளையும் கருவாக இரண்டும் சேர்ந்த ஒரு வித்தாகின்றது.

அது (இரண்டும் கலந்த) தான் ஈர்க்கும் சக்தியாக உருவாவதை “நீ பார்…” என்று அங்கே உணர்த்தினார் குருநாதர்.

இவ்வாறு உணர்த்திய பின் இந்த வாழ்க்கையில் மனிதர்கள் தவறு செய்யாமலேயே எவ்வாறு அவர்கள் தன்னையறியாமலே பல வேதனைப்படுகின்றனர் என்ற நிலையைக் காட்டுகின்றார்.

பிறருடைய எண்ணங்களை ஒருவருகொருவர் அந்த எண்ணங்களை எண்ணிய பின் அந்தந்த உணர்வின் ஆற்றல் மறைந்து
1.அந்த உடலுக்குள் புதுப் புதுக் கரு வித்துக்களாக ஊன்றி
2.இந்தக் காற்றிலே படர்ந்து வெளிப்படுத்தும் உணர்வுகளை அது தன்னிச்சையாகக் கவர்ந்து
3.மனிதனின் நிலைகளைச் சீர் கெடும் நிலைகளுக்கு எவ்வாறு எப்படி உருவாகின்றது என்ற நிலையைக் காட்டினார் குருநாதர்.

அங்கே காடும் இங்கே ஊரும் மற்ற நிலைகள் கொண்டு சுற்றிக் காண்பித்து… “இதிலிருந்து நீ மீளும் வழி என்ன…?” என்ற நிலையும் தீமைகளை வென்ற அருள் ஞானிகள் அவர்களுடைய நிலை என்ன? என்பதையும் உணர்த்தினார்.

அன்று அகஸ்தியர் தனக்குள் வந்த தீமைகளை வென்றிட அந்த உணர்வின் சத்தைக் கொண்டு தன் எண்ணத்தால் மேகங்களை உற்றுப் பார்க்கப்படும் பொழுது அதனின் தன்மையைக் கவர்ந்து உடலுக்குள் வரும் பொழுது நீராகச் சுரக்கின்றது.

அத்தகைய ஜீவித நிலைகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டார். அதைப் போல மற்ற தாவர இனச் சத்துக்களையும் அகஸ்தியர் நுகர்ந்தறிந்து வளர்த்துக் கொண்டார்.

இவ்வாறு
1.அகஸ்தியர் உடலிலே பதிந்த நிலைகள்
2.எங்கே நின்று அவர் உணர்வின் தன்மை கவர்ந்தாரோ
3.அப்பகுதிகளுக்கெல்லாம் குருநாதர் என்னை அழைத்துச் சென்றார்.

அவர் நின்ற பகுதியின் நிலைகளில் அந்த உணர்வுகள் பூமியிலே படரப்பட்டு இன்றும் அது பல நீர் சத்துக்களை அது கவர்ந்து கொண்டிருப்பதைக் காட்டுகின்றார்.

நீர் சத்தைக் கவர்ந்து அது அந்தப் பகுதியில் இருக்கும் பாறைகளுக்கும் அது உணவாக எடுத்து பல சத்தின் தன்மைகளை எப்படி மாற்றிக் கொண்டிருக்கின்றது? என்பதனை “நீ பார்…” என்றார் குருநாதர்.

மனிதர்கள் பல தாவர இனச் சத்துக்களை உணவாக எடுத்து வளர்ந்தாலும்  வளர்ந்த உணர்வின் சத்து எண்ணங்களாக மாறி அந்த எண்ணத்தின் வலுத் தொடர் கொண்டு தான் நாம் வாழ்கின்றோம்.

நஞ்சின் தன்மை கொண்டு ஒவ்வொரு செடியும் இயக்கப்பட்டாலும் அந்தச் செடிக்குள் கலந்த நஞ்சின் சத்தை அகஸ்தியர் விண்ணின் ஆற்றலை நுகர்ந்து தனக்குள் பெற்று அதை முறியடித்தார். தன் உணர்வுகளை ஒளியின் தன்மையாக மாற்றினார்.

 ஒரு நஞ்சு கொண்ட பாம்பு தனக்குள் இருக்கக்கூடிய நஞ்சின் தன்மையை மற்றதன் மீது பாய்ச்சி அதனைக் கரையச் செய்து தனக்கு உணவாக எடுத்துக் கொள்கின்றது. இதைப் போல
1.மனிதனின் உணர்வுக்குள் வரும் நஞ்சினை உணர்ந்து
2.அதனின் நிலைகள் கரைக்கச் செய்து அதைச் செயலற்றதாக ஆக்கி
3.உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றியவன் அகஸ்தியன்.

அகஸ்தியன் உணர்வைக் கவர்ந்து நம்மையறியாமல் நமக்குள் புகும் பிறிதோரு வேதனையோ வெறுப்போ ஆத்திரமோ கோபமோ குரோதமோ அவைகளைக் கரைத்து நாமும் ஒளியாக மாற்றுவோம்.

“அகஸ்தியன் சென்ற பாதையில் வேகா நிலை அடைவோம்”.