எம்மிடம் நல்ல வாக்குகளை வாங்க வருகிறார்கள்.
அதை யாம் இலேசாகக் கொடுத்தாலும் உங்களுக்கு அதை எளிதில் பெறச்
செய்தாலும் கூட உங்களால் அது முடியவில்லை.
அங்கிருந்து வந்து சாமியிடம் உபதேசம் கேட்பதற்காக வருகிறோம்.
உபதேசம் கேட்டு முடிந்த பிறகு சாமியிடம் ஆசி கேட்போம் என்று இல்லை.
ஏனென்றால் வந்தவுடன் ஒரு முறை ஆசி வாங்க வேண்டும். இரண்டாவது
முறை இங்கு வந்து ஆசி வாங்க வேண்டும். ஆசீர்வாதம் வாங்கிவிட்டால் சரியாகப் போகும் என்று
தான் நினைக்கிறார்கள்.
அந்த ஆசீர்வாதத்தைக் காட்டிலும் நாம் முழுமையாக உபதேசம்
செய்வதைக் கேட்டுணர்ந்து அடுத்து வரிசையில் நின்று கேட்கும் போது
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் பரவ வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள நோய்கள் நீங்க வேண்டும்
4.எங்கள் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்க வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பத்தின் மீது படர வேண்டும்
6.நாங்கள் எல்லோரும் மன பலம் பெற வேண்டும்
7.எங்கள் விவசாயம் நன்றாக இருக்க வேண்டும்
8.நாங்கள் ஆரம்பித்த தொழில் நன்றாக இருக்க வேண்டும்
9.என் பிள்ளைகளுக்குச் சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று
வேண்டி வந்தீர்களானால்
10.இந்த வாக்குகளை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்ய
முடியும்.
பிள்ளைகளுக்குக் கல்யாணம் ஆக வேண்டும் என்று எண்ணிக்
கேட்கலாம். அதற்குள்ளேயே நான்கு ஐந்து கோரிக்கைகளுடன்
வரக் கூடாது. நான்கு ஐந்து வாக்குக் கொண்டு வந்தால் அத்தனையும் fail தான்.
காரணம் பெண்ணிற்கு நல்ல வரன் வர வேண்டும், சீக்கிரம் திருமணம்
நடைபெற வேண்டும் என்று கேட்டால் அந்த பெண்ணிற்கு சீக்கிரம் திருமணம் நடக்கும்.
“பத்திரிக்கையைக் கொண்டு வாருங்கள்…” என்று வாக்கைப் பதிவு செய்கிறோம்.
பதிவு செய்தபடி நீங்கள் எண்ணி எடுத்தால் அதை நீங்கள் திருப்பிக்
கொண்டு வந்தால் சீக்கிரமாகவே அந்தத் திருமணம் நடக்கும். ஏனென்றால் யாம் ஜெபித்த
இந்த உணர்வின் ஆழமான சத்தான நிலைகளை “ஒருமுகமாகப் பதிவு செய்கிறோம்.”
அப்பொழுது நீங்கள்.., சரி…! என்ற நிலையில் அதே மகிழ்ச்சியோடு
போக வேண்டும்.
இந்த வாக்கை முதலில் வாங்கிக் கொள்வார்கள்.
ஆனால் அடுத்தாற்போல் வீட்டில் கஷ்டமாக இருக்கிறது பணத்திற்கே
கஷ்டமாக இருக்கிறது என்பார்கள்.
சரி… “அதுவும் நடக்கும்” என்று யாம் சொல்வோம்.
பிறகு என் பையன் எப்பொழுது பாத்தாலும் சண்டை போட்டுக்
கொண்டிருக்கிறான். பக்கத்து வீட்டுக்காரர்கள் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்
என்று வரிசையாக “அடுக்கிக் கொண்டே இருப்பார்கள்”.
1.நாம் எதன் அடிப்படையில் வருகிறோமோ…, “ஒன்று தான்”.
2.வாக்கிற்கு வன்மை.
அங்கிருந்து வருகிறீர்கள் என்றால் அதில் முக்கியமான ஒன்றைத்
தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
குடும்பத்தில் மகரிஷிகளின்
அருள் சக்தியைப் பெற வேண்டும், எங்கள் குடும்பத்தில் உள்ள கஷ்டம் எல்லாம் நீங்க வேண்டும்.
மகரிஷிகளின் சக்தியால் தொழில் வளமும் செல்வமும் பெற வேண்டும் என்று எண்ணினால் “இந்த
ஒரு வாக்கில் எல்லாமே நடக்கும்”.
செல்வம் வந்தால் உங்கள் கஷ்டத்தை நிவர்த்தி செய்துவிடலாம்.
ஆனால் அதற்கு இப்படி நல்ல வாக்குகளைப் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை
ஏற்படுத்திக் கொடுத்தாலும் கூட அதை ஏற்றுக் கொள்ள சமுதாயத்தில் இடம் இல்லை.
எதைச் சொன்னாலும் சாமியிடம் ஒரு ஐந்து முறையாவது ஆசிர்வாதம்
வாங்கினால் தான் அது நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறார்கள்.
1.சாமி வாக்கை ஏற்று அந்த ஒரு வாக்கு இருந்தாலும் போதும்.
2.இரண்டாவது ஒரு முறை பதிவு செய்துவிட்டால் தியான
மண்டபத்திற்குள் வந்து
3.சாமி சொன்ன வாக்கு நிறைவேற வேண்டும்.
4.எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்
5.என் குழந்தைக்குச் சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும்
என்று எண்ணினால் போதும்.
“திருமணம் நடக்கும்” என்று சொல்லி வாக்கினைக் கொடுக்கிறேன்.
அடுத்துப் பணத்திற்குக் கஷ்டம் என்பார்கள். திருமணம் நடக்க
வேண்டும் என்று கேட்பார்கள். ஆனால் அவர்களே இரண்டாவது “பணம் இல்லையே…” என்பார்கள்.
இதெல்லாம் அவர்களே இதற்குத் தடை விதிப்பதாகும்.
இது போன்ற நிலைகளை விடுத்து திருமணம் நடக்கும்…, பத்திரிக்கை
கொண்டு வாருங்கள் என்று சொன்னால் அதற்கு வேண்டிய வழிகள் நடக்கும்.
1.வாக்கு சாதாரணமானது அல்ல.
2.பல லட்சம் கொடுத்தாலும் இந்த மாதிரியான வாக்குகள்
உங்களுக்கு அமைவது கடினம்.
அந்த வாக்கை நீங்கள் பதிவு செய்து கொண்டீர்களானால் அது உங்களுக்கு
நன்மை செய்யும்.
ஒருவர் திட்டுவதையும் வேதனைப்படுவதையும் பதிவு செய்கிறீர்கள்.
அவர்களை நினைக்கும் போதெல்லாம் உங்களுக்குக் கோபம் வருகிறது. வேதனை உங்களுக்குள் பதிவாகிறது.
அது உங்களுக்குள் விளைகிறது.
இதைப் போலத்தான் சாமி அன்று என் பிள்ளைக்குத் திருமணம் நடக்கும்
நல்ல வரன் கிடைக்கும் என்று சொன்னார்கள்.
மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என் குடும்பத்தில்
அது படர வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியால் என் மகளுக்கு நல்ல வரன் வர வேண்டும்,
அந்த குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். அது குடிபுகும் இடத்தில் எல்லோரும் நன்றாக
இருக்க வேண்டும் என்று எடுத்துப் பாருங்கள்.
அது எவ்வளவு பெரிய உண்மை என்று நீங்கள் பார்க்கலாம்.
யாம் கொடுத்த வாக்கும் உங்கள் எண்ணமும் உங்கள் நினைவும்
1.உங்களை எப்படிக் காக்கிறது?
2.உங்களுக்கு நல்ல வழியை எப்படிக் கொண்டு வருகிறது என்பதை
3.நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் தெரியும்.
ஏனென்றால் நாம் பல முறை சொல்கிறோம். உங்கள் வாழ்க்கையிலே எப்பொழுதும்
“சாமி சொன்ன வாக்கு நிறைவேறும்” என்று எண்ணினீர்கள் என்றால் அது நிறைவேற்றிக்
கொண்டே இருக்கும்.
அதைப் பதிவு செய்த பிற்பாடு… சாமி அன்றைக்கு வாக்குக்
கொடுத்தார். அது எங்கிட்டு…? என்று விட்டீர்கள் என்றால் போய்விட்டது.
ஒரு விதையை ஊன்றிவிட்டோம் என்றால் அதற்குத் தகுந்த தண்ணீர் ஊற்ற
வேண்டும். அந்தந்தக் காலத்திற்குத் தகுந்தாற் போல் உரத்தையும் போட வேண்டும்.
அது போலத் தான் சாமி சொன்ணார்கள். எப்படியும் பெண்ணிற்குத் திருமணம்
நடக்கும். நல்ல வரன் வரும் என்ற உணர்வை மட்டும் வைத்திருந்தால் போதும்.
1.ரொம்பச் சீக்கிரமும் நடக்கும்.
2.காலம் தாமதமானாலும் ஒரு நல்ல வரனாகவும் கிடைக்கும்.
ஏனென்றால் உங்கள் உணர்வுகளில் மிகவும் கடுமையான நிலைகளைப் பதிவு
செய்து வைத்திருப்பதால் உங்கள் பதிவே உங்களுக்கு எதிரியாகும். நீங்கள் எந்தெந்த அளவிற்கு
வேதனையையும் கஷ்டத்தையும் வைத்திருக்கிறீர்களோ உங்கள் ஆன்மாவில் அது அதிகமாகப் பரவியிருக்கும்.
எந்த நல்ல சமாச்சாரத்தைப் பேசினாலும்
1.உங்களை அறியாமலேயே உங்கள் கஷ்டத்தைச் சொல்லி விடுவீர்கள்.
2.உங்களை அறியாமலேயே என் கஷ்டம் என்னை விட்டுப் போக மாட்டேன்
என்கிறது என்றே சொல்வீர்கள்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்.
யாம் கொடுத்த வாக்குகளின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின்
அருள் சக்தி கொண்டு அதைச் செயலாக்கி உங்கள் காரியங்களஒச் சித்தியாக்கி நிரூபிக்க வேண்டும்.
எமது அருளாசிகள்.