உங்கள்
வாழ்க்கையில் குறைகள் இருந்தது என்றால் “ஈஸ்வரா…” என்று எண்ணி அந்த மகரிஷிகளின்
அருள் சக்தி பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் குடும்பம்
முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும் என்று எண்ணுங்கள்.
யாரும்
சொன்னபடி கேட்கவில்லை என்றால் “சொன்னபடி கேட்கவில்லையே…” என்று எண்ணக் கூடாது.
அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தியால்
1.குடும்பப்
பொறுப்புடன் அவர்கள் நடக்க வேண்டும்
2.அந்தச்
சக்திகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று இப்படித்தான் நாம் எண்ண வேண்டும்.
அதைப்
பெறச் செய்வதற்குத்தான் தபோவனத்தை அமைத்துள்ளோம்.
பௌர்ணமி
அன்று எல்லோரையும் இங்கே வரச் சொல்லி
1.எல்லோருக்கும்
“உயர்ந்த சக்திகளைக் கூட்டிக் கொடுப்பதற்காக”
2.இங்கே
கூட்டுத் தியானத்தை அமைத்துள்ளோம்.
மகரிஷிகளின்
அருள் சக்தியால் எல்லோருக்கும் உடல் நலம் பெறவேண்டும் மன வளம் பெறவேண்டும் மன பலம்
பெறவேண்டும் என்று வேண்டித் தியானிக்கின்றோம்.
இந்தச்
சொல்லை உங்களிடம் பதியச் செய்த பிற்பாடு வீட்டிக்குச் சென்றாலும் தொழிலில்
இருந்தாலும் வெளியில் எங்கு சென்றாலும் “ஈஸ்வரா..” என்று உயிரை எண்ணி மகரிஷிகளின்
அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணிவிட்டுச் செல்ல வேண்டும்.
யாருக்கும்
உடல் நலம் இல்லை என்றால் அவர்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க
வேண்டும் என்று சொல்லிவிட்டு அவர்கள் உடல் நலம் பெறவேண்டும் நன்றாக ஆக வேண்டும்
என்று எண்ண வேண்டும்.
மற்றவர்கள்
நலம் பெறவேண்டும் என்று நாம் முதலில் எண்ணித் தியானித்தால் நமக்கு முதலில் அந்தச்
சக்தி கிடைக்கின்றது. நாம் சொல்லும் பொழுது அவர்களுக்கும் அந்த நல்லது
நடக்கின்றது.
இந்த
மாதிரிப் பழக்கத்திற்கு வந்துவிட்டால் அது இது என்று சொல்லி உங்களை ஏமாற்றுபவர்கள்
ஏமாற்றாதபடி உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். நீங்கள் சம்பாரித்த பணம்
உங்களுக்கு மிச்சமாகும்.
மற்றவர்கள்
சொல்லக்கூடிய மாதிரி “அவருக்குப் பேய் பிடித்திருக்கிறது… அவருக்கு அந்தக் குணம் இருக்கிறது…
இந்தக் குணம் இருக்கிறது…
1.உங்கள்
மனதிற்குத் தகுந்த மாதிரி ஏதோதோ சொல்லும் பொழுது
2.அதை
மனதில் பதிய வைத்துக் கொண்டால்
3.அதையே
உங்களுக்குள் விளைய வைத்துக் கொள்கின்றீர்கள்.
4.“அந்த
மாதிரி இல்லாதபடி” நீங்கள் உங்களை நம்ப வேண்டும்.
உங்களுக்குள்
இருக்கக்கூடிய சக்தியை நீங்கள் முழுமையாக அதைப் பெறவேண்டும் என்பதற்காகத்தான்
இந்தத் தபோவனத்தை அமைத்தது.
இங்கே
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்திற்கு வரக்கூடிய அனைவரும் கூட்டுத்
தியானத்தில் கலந்து கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் செருகேற்றிக்
கொள்ளுங்கள்.
இதை
நீங்கள் செம்மையாகப் பயன்படுத்தி எதையெல்லாம் நல்லதாக வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ
அதை எண்ணி “நல்லதாக வேண்டும்” என்று திரும்பத் திரும்ப எண்ணினீர்கள் என்றால் அது நடக்கும்.
நல்லதாகும்,
ஏனென்றால்
சாமியை நம்புகின்றீர்கள் சாமியாரை நம்புகின்றீர்கள் மந்திரத்தை நம்புகிறீர்க்ள்
யந்திரத்தை நம்புகின்றீர்கள் எல்லோரையும் நம்புகின்றீர்கள்.
1.ஆனால்
உங்களிடமும் நல்ல சக்தி இருக்கின்றது
2.அதை
நீங்கள் எப்படிப் பயன்படுத்துகிறது என்பதைத்தான்
3.திரும்பத்
திரும்பச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.
அதைப்
பயன்படுத்திக் கொண்டீர்கள் என்றால்
1.“காசு
செலவில்லாதபடி” உங்கள் எண்ணம் வலுப் பெறுகின்றது.
2.உங்கள்
உடல் நலம் பெறுகின்றது
3.உங்கள்
காரியம் எல்லாம் சித்தியாகின்றது.
இது
ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.