பக்தி
மார்க்கத்திலே நல் ஒழுக்கங்களை நாம் கடைப்பிடித்தாலும் நல்லதைக் காக்கும் திறன்
நமக்கு இல்லை.
நல்லதை
எண்ணும் பொழுது பிறிதொரு குறையைக் கண்டவுடன் அந்தக் குறைகள் அதிகமாகி நல்ல
குணங்கள் கீழ்ப்படிந்து விடுகின்றது. ஆகவே விஷம் கவர்ந்து கொள்கின்றது.
அந்த
விஷத்திலிருந்து நாம் மீளமுடியாத நிலைகளில் வெறுப்பு ஆத்திரம் வந்து “அன்று
நல்லதைச் செய்தேன்…., இப்படிச் செய்கின்றார்களே…” என்ற பழிதீர்க்கும் உணர்ச்சிகள்
அதிகமாகி நாம் இழிவான சரீரங்களுக்குத்தான் செல்லக்கூடிய நிலைகள்
ஏற்பட்டுவிடுகின்றதே தவிர மெய் ஒளி காணும் நிலைகள் இல்லை.
மெய் ஒளி
பெறவேண்டும் என்று எண்ணுகின்றோம். ஆனால் அந்த உணர்வின் நிலைகள் நமக்குள் தூண்டும்
ஆற்றலை இழந்து
1.அதை
எண்ணும் பொழுது நமக்குச் சோர்வும் சஞ்சலமும் வந்து
2.அது
முடியாத நிலையில் விரக்தியாகி
3.எண்ணத்தால்
கூட சிறிது நேரம் எண்ண முடியாது.
இந்தத்
தியானத்தை எடுக்கும் பொழுது சில பேர் “என்னால் எடுக்க முடியவில்லை… உட்கார
முடியவில்லை…” என்று சொல்லுகின்றோம். நாம் எவ்வளவு நல்லதை எண்ணி எடுக்க
வேண்டுமென்றாலும் இது ஒரு பெரிய சுமையாக இருக்கும்.
நாம்
சிறிது நேரம் பேசும் பொழுது எண்ணிவிடலாம்.
அமைதி
கொண்டு அதை நினைவு கொண்டு எடுக்க வேண்டும் என்றால் அடுத்த நிமிடமே இது
மறைந்துவிடும்.
1.நம்
நினைவலைகள் எங்கெங்கோ ஓடிவிடும்.
2.அதற்கு
இந்த ஆற்றல் இல்லை.
அதைப்
போன்ற ஆற்றல் இல்லாத நிலைகளில் எடுக்க முடியாத நிலைகளில் எத்தனையோ பேர்
முயற்சிக்கின்றார்கள். முடியவில்லை.
ஆனால் யாம்
சொல்வதைப் பதிவாக்கிக் கொண்ட மெம்பர்களுடைய நிலைகளில் கூடுமான வரையிலும் நாம்
நினைத்தவுடன் நாம் எண்ணி பல மணி நேரங்கள் கூட அமைதி கொண்டு இருக்க முடிகின்றது.
பக்கத்தில்
அமைதியைக் குலைக்கும் நிலைகள் கொண்டு இரைச்சலோ சத்தமோ இருந்தாலும் கூட
1.நமது
மெம்பர்களுடைய நிலைகள் இதன் வழி கொண்டு இருக்கும் பொழுது
2.அமைதி
கொண்டு தான் எண்ணிய நிலைகளை எடுக்கக் கூடிய ஆற்றல் பெறுகின்றார்கள்.
மற்ற
நிலைகள் இல்லாததைக் கூட உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம். காரணம் இதைப் போன்ற
நிலைகள் உங்களுக்குள் தாக்காத நிலைகளை நாம் மெய் ஒளியின் தன்மையைப் பெறுவதற்கு
முயற்சிக்கின்றோம்.
பத்து
பேரில், ஒரு சிலருக்கு இல்லாமல் இருக்கலாம், நாம் ஒரு நிமிடமானாலும் இதை எடுத்துக்
கொள்ளலாம்.
ஆனால் நாம்
எடுத்துக் கொண்ட பின் மீண்டும்
1.யாம்
சொன்னதை விட்டுவிட்டு
2.“என்னத்தை
எடுத்தோம்… முடியவில்லை…” என்று சொன்னால்
3.அதைக்
கூட்டிக் கொள்பவருக்கு மீண்டும் கிடைக்காது.
யாம் சொன்ன
உணர்வின் தன்மையைக் கூட்டி எப்பொழுதெல்லாம் உங்களுக்குத் துன்பம் வருகின்றதோ அதை
அடக்குவதற்கு ஓம் ஈஸ்வரா என்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை அடிக்கடி எடுத்துப்
பயன்படுத்துங்கள்.
அந்த
மகரிஷிகளின் அருள் ஒளியை நாம் பெறவேண்டும் என்ற எண்ணத்தை ஓங்கிச் செலுத்துங்கள்.
உங்கள் எண்ணத்திற்கு வலு கூட்டும்.
ஆகையினாலே
இதையெல்லாம் நீங்கள் “என்னமோ… ஏதோ…” என்று நினைக்க வேண்டாம்.
நமது
குருநாதர் காட்டிய அருள்வழி கொண்டு யாம் மிகவும் சிரமப்பட்டு
1.12 வருட
காலம் அந்த உணர்வின் தன்மையைச் சேர்க்கும் நிலையும்
2.உங்களுக்குள்
விளைய வைக்கும் நிலையும்
3.ஒலியால்
பாய்ச்சும் நிலையும் குருநாதர் எமக்குக் கற்பித்ததனால் உங்களுக்குள்
சேர்க்கின்றோம்.
இதை ஏன்
சேர்க்கின்றேன்?
உங்கள்
உயிர் இவ்வளவு பெரிய ஆற்றல் மிக்க உடலை எண்ணங்களாலும் உணர்வாலும், இயக்குகின்றது.
இந்த உணர்வுக்குள் நல்லதை விளைய வைத்து மகிழ்ச்சியான உணர்வலைகளை
வெளிப்படுத்துகின்றீர்கள்.
அப்பொழுது
நீங்கள் மகிழ்ந்து “சாமியினால் எனக்கு நல்லதாகியது…” என்று சொல்லப்படும் பொழுது
அந்த எண்ணம் ஆயிரம் பேர்
1.“இவர்
நல்லவர்… இவர் நல்லவர்…” என்ற உணர்வை நீங்கள் எடுத்து
2.அந்த
உணர்ச்சியின் தன்மையைப் பேசும்பொழுது
3.எமக்கு
நல்ல அமுதாகக் கிடைக்கின்றது.
இதைப்
போன்று நீங்களும் எடுத்து உங்களுடைய உணர்வுகள் மற்றவர்களிடம் சொல்லும் பொழுது
அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தூண்டும் பொழுது அவர்கள் உங்களை எண்ணுகின்றார்கள்.
“ஒருவருக்கொருவர்
அந்த மகிழ்ச்சியை…” ஒருவர் உடலிலிருந்து நாம் சமத்துவப்படுத்திக் கொள்வோம்.