நமக்கு
நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக எங்கெங்கே கோயில்கள் இருக்கினறதோ அங்கெல்லாம் செல்கின்றோம்,
அங்கே போய் என்ன செய்கின்றோம்?
உண்மையின்
தன்மையை சொல்லி “யாராவது நினைக்கின்றோமா…” என்றால் இல்லை.
1.கோவிலுக்குப்
போகின்றோம்.
2."நாம்
போனால் ஆண்டவன் காப்பாற்றுவான்” என்ற நிலையில்தான் போகின்றோம்.
3.”எப்படிக்
காப்பாற்றுவான்…?” என்று சொன்னதை விட்டுவிட்டோம்.
ஆனால்
நம்மை ஆண்டு கொண்டிருப்பவன் ஆண்டவன் அது தான் நம் உயிர். அதை நாம்
புரிந்துகொள்ளவில்லை.
நாம்
எதை எண்ணுகின்றோமோ அதை வைத்துத்தான் நமக்குள் தீமையை அகற்றும். ஞானியின் உணர்வை
எடுத்தால் அருள் ஒளியாக நம்மைக் காப்பாற்றுகின்றான்.
தீமையானவர்களை
நாம் உற்றுப் பார்த்தால் அது நமக்குள் தீமையான உணா்வாகப் பதிவாகின்றது.
உதாரணமாக
நீங்கள் கோவிலுக்குப் போகின்றீர்கள். கோயிலுக்குப் போய்விட்டு வரும் போது வரும்
வழியில் ரெண்டு போ் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
அவர்களை
நாம் வேடிக்கை பார்த்தால் போதும்.
இந்த
நல்ல நாளும் அதுவுமா ரெண்டு பேர் இப்படிக் சண்டை போட்டுக் கொள்கிறார்களே… அயோக்கியர்கள்…!
என்று நாம் சொல்வோம்.
அப்பொழுது
இந்த உணா்வுகள் சிறு திரையாக (சித்திரை) உங்கள் நல்ல குணங்களை மறைத்துவிடுகின்றது.
அப்பொழுது
உங்கள் (உங்களுக்குள் நின்று ஆண்டு கொண்டிருக்கும்) ஆண்டவன் என்ன செய்கின்றான்?
1.நீ
கேட்டாய்…! (சண்டை போடுபவர்களின் உணர்வுகளை)
2.அதைப்
பெற்றாய்…!
3.அதை
நீ அறிந்துகொள்…! என்ற நிலை தான் வருகின்றது.
அதைத்
துடைக்க வேண்டுமல்லவா…! கோவிலில் இருக்கும் ஆண்டவன் வந்து அதைத் துடைப்பானா…!
சிந்தித்துப் பாருங்கள்.
அதை
நீக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? மெய் ஞானிகளின் உணா்வலைகள் என் உடல்
முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா என்று அதை வேண்டி எடுத்து உள் புகுந்த அந்தத்
தீமையான உணர்வுகளைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இருளை
நீக்கி ஒளி என்ற உணர்வை வளர்க்கும் நிலையைக் காட்டும் இடம் தான் கோவில்.
உதாரணமாக
ஒரு இஞ்சினியராகப் போக வேண்டும் என்றால் அது சம்பந்தமாகப் படிக்கின்றீர்கள். அதைப்
படித்து இன்ஜின் எப்படி ஓட்டவேண்டும் என்று தெரிந்து கொள்கிறீர்கள்.
விஞ்ஞானி
ஒவ்வொரு பொருளையும் உணா்ந்து ஒவ்வொரு இயக்கத்திற்கும் எதை எதை இணைத்தால் எப்படிச்
செயல்படும் என்ற தன்மையைக் கண்டுபிடித்துச் சொல்கின்றான்.
இஞ்சினியரோ
அதற்குத் தகுந்த சாதனங்களை உறுப்புக்களை உருவாக்கி அதனைச் செயல்படுத்துகின்றான். மெக்கானிக்கோ
(MECHANIC) இதை இந்த வழியில் செய்தால் எடை கூடி இப்படி இருக்குமென்று செய்கின்றான்.
இப்படி
அவரவா்கள் எடுக்கக்கூடிய உணா்வுகளுக்கு ஒப்பத்தான் அதை அதைச் செய்கின்றார்கள்
பள்ளியில்
சென்று எதனெதன் வழிகளில் பதிவு செய்கின்றீர்களோ நினைவு வரப்படும்பொழுது இது
இப்படி வருகின்றது. அதை உணா்ந்து சொல்லமுடியும்.
விஞ்ஞான
அடிப்பைடயில் தான் கற்றுணா்ந்த உணா்வின் தன்மையில் எதிலே எண்ணங்கள் செல்கின்றதோ அது
நம்மில் பதிவாகின்றது.
அதைப்
போன்று தான் அந்த மெய்ஞானிகள் சொன்னதை பாட நிலையாக உபதேச வாயிலாக உங்களுக்குள் மீண்டும்
மீண்டும் மீண்டும் குருநாதர் காட்டிய அருள் வழியில் பதிவு செய்கினறேன்.
இதை
நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்த மெய்ஞானிகள் எப்படித் தீமைகளை
நீக்கினார்களோ உணர்வுகளை ஒளியாக மாற்றினார்களோ உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக
சப்தரிஷி மண்டலமாக இன்றும் உள்ளார்களோ அந்த இடத்திற்குச் செல்ல முடியும்.