ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 19, 2017

காய்கறிகளை வேக வைக்காமல் “பச்சையாக உட்கொண்டால்… நாம் எங்கே போவோம்…!” என்று தெரிந்து கொள்ளுங்கள்

பச்சைக் காய்கறிகளை “வேக வைக்காமலே நான் சாப்பிடுவேன்…!” என்று சிலர் சாப்பிடுவார்கள்.

அந்தப் “பச்சை காய்கறி ஒன்றை மட்டும்” தேடி அது விரும்பி்ச் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

காய்கறிக்குள் புழு இருக்கும். அந்தப் புழு அந்த உணர்வை மட்டும் எடுத்து உண்வாக உட்கொண்டு வாழ்கிறது.

நாம் இந்த மனித வாழ்க்கையில் காய்களை வேக வைக்காமல் பச்சையாகச் சாப்பிட்டால்
1.நான் மிக வலுவாக இருப்பேன் என்று எண்ணுவார்கள்.
2.அந்த வலுவின் தன்மை இங்கே அதிகரிக்கும்.

மாடு அந்தக் காயை அதிகமாகச் சாப்பிட்டு இருந்தால் நாம் உடலை விட்டுச் சென்றபின் நம் உயிரான்மா அந்த “மாட்டின் ஈர்ப்புக்குள்” போகும்.

ஆனால் மாடு மற்ற உணர்வின் சத்து அதிகமாகப் போகும் போது அதன் நிலைக்குச் செல்லாது மற்ற உணர்வுகள் அதிகமாக இருக்கும்.

ஓர் புழு காய்கறியின் நிலைகளில் வீழ்ந்தாலும் அந்தப் புழு அதை உணவாக உட்கொண்டால் அதனின் வலுவே அதனின் உணர்வில் உண்டு.
முட்டைக்கோஸைப் பச்சைச் சாப்பிட்டு நான் நன்றாக இருப்பேன் என்று எண்ணினால் அந்த முட்டைக்கோஸில் உள்ள

1.புழுவின் ஈர்ப்புக்குள் போகும்.
2.புழுவாகப் பிறப்போம். இது கூர்மை அவதாரம்.

இவைகளெல்லாம் தெளிவாக வியாசகரால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அதாவது உபநிஷத்துக்களில்
1.தான் எடுத்துக் கொண்ட உணர்வின் இயக்கம்
2.உணர்வுகளின் மாற்றத்தினால் நாம் எவ்வாறு இருக்கிறோம்
3.அடுத்து எவ்வாறு ஆவோம் என்ற நிலைகளைக் காட்டியுள்ளார்.

மனிதனின் குணத்தின்  நிலையும் மனிதன் வாழ்க்கையில் எண்ணும் நிலைகளையும் காட்டியுள்ளார் வியாசகர்.

தாவர இனத்தின் சத்துக்குள் இருக்கும் மணமே மனிதனுக்குள் வரும் போது அதுவே எண்ணமாகின்றது. அதன் குணத்தின் சிறப்பாக அது வேலை செய்யும்.

உதாரணமாக மிளகாயினுடைய குணம் காரம்.

அந்தக் காரத்தை நாம் உணவாக விரும்பிச் சாப்பிட்டால் நம் உடலில் நாக்கு எரிச்சல் கண் எரிச்சல் என்று இதைப் போன்ற நிலைகள் வருகின்றது.
1.அதே காரத்தின் உணர்வுகளை நாம் அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க

2.நம்மிடமிருந்து வெளிப்படும் சொல்லை மற்றவர்கள் கேட்கப்படும் போது
3.கேட்போருக்கு நம்மைப் பார்க்கும் போது எரிச்சல் வருகின்றது.

அந்தக் குணத்தின் தன்மை எதுவோ அந்த எண்ணம் தான் நமக்குள் வரும்.

அதைப்போல ஒருவர் எரிந்து பேசுவதும் எரிச்சலான செயல்களைச் செயல்படுத்துவதும் அந்தக் குணத்தின் தன்மையே இங்கு வரும்.


ஆகவே அந்தத் தாவர இனச் சத்தைக் காரத்தை அதிகமாகச் சாப்பிடுகிறேன் என்று வந்தால் கடைசியில் எங்கே செல்வோம்?

அந்தக் காரத்தைக் கிளி சாப்பிடுகின்றது. மிளகாயைக் கிளி விரும்பி உட்கொள்ளும். மிளகாயை நாம் விரும்பி உட்கொண்டால் கிளி காரத்தைச் சாப்பிடும்போது அதனுடைய உடலுக்குள் தான் நம் உயிரான்மா செல்லும்.

அதே போல் எலி காரத்தைத் தாங்கும் அளவுக்கு மிளகாயைச் சாப்பிட்டு அதிகமாக இந்த நெடியைத் தாங்கும் நிலைக்கு வருகின்றது.

ஆனால் கார உணர்வின் சத்தை நாம் அதிகமாக எடுத்துக் கொண்டால் நாம் கை கால் இயங்காது வாதம் ஆகின்றது. மேலும் ரத்தக் கொதிப்பாக மாறி நம் உடலே குறுகுகின்றது.

எத்தகைய காரத்தின் தன்மையை நாம் அதிகமாக எடுத்துக் கொண்டமோ அது முன்னணியிலே வந்து விடுகிறது.

இதனை அறிவதற்குத்தான் கணங்களுக்கு அதிபதி கணபதி என்று பெயரை வைத்துள்ளார்கள் ஞானிகள்.

நம் உடலிலே ஆயிரக்கணக்கான குணங்கள் இருப்பினும் அதிலே
1.நாம் எந்தக் குணத்தை அதிகமாகச் சேர்க்கின்றமோ
2.அது கணங்களுக்கு அதிபதியாகி அதன் வழிகளிலே தான்
3.நம்முடைய சொல் செயல் பார்வை எல்லாமே இருக்கும்.

ஆகவே தான் ஆதியிலே வேக வைத்துச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தியவன் அகஸ்தியன். முதன் முதலில் நெருப்பைக் கண்டுபிடித்தவனும் அகஸ்தியன் தான்.

வேக வைத்துச் சாப்பிடும்போது காய்கறிகளில் உள்ள காரல்கள் போய்விடுகின்றது. அதனுடன் பலவகையான பொருள்களைச் சேர்க்கும் பொழுது அது சுவையாகின்றது.

அதை உட்கொள்ளும்போது மகிழ்ச்சி என்ற மணம் வருகிறது.

மாறாகப் பச்சையாகச் சாப்பிட்டுப் பாருங்கள்.
1.எந்தக் காயைப் பச்சையாக உட்கொண்டீர்களோ
2.அந்த மணம் உங்கள் உடலிலிருந்து வெளிப்படுவதைக் காணலாம். 

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.