நாம் தியானத்தின் மூலம் எடுக்கும் அந்தத் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நம் உடல் முழுவதும் படர்ந்து நம் உடலிலுள்ள ஜீவ
அணுக்களில் இந்த உணர்வின் ஆற்றல் பெருகுகின்றது.
அதன் மூலம் விண்ணில் பரவிக் கொண்டிருக்கும்
அந்த மகரிஷிகளின் உணர்வலைகளை எளிதில் பெறும் தகுதியும் இந்த மனித வாழ்க்கையில்
இருள் நீக்கிப் பொருள் காணும் நிலைகளும் பெறும் தகுதியினைப் பெறுகின்றோம்.
1.உங்கள் நினைவலைகளை விண்ணில் செலுத்தப்பட்டு
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும்
உணர்வின் கதிர் பொறிகளை உங்கள் உடலுக்குள் பரவச் செய்து
3,உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும்
பெறும்படி செய்வது தான்
4.குருநாதர் காட்டிய வழியில் எமது வேலை.
இந்த முறைப்படி செய்தால் துருவ தியான நேரத்தில்
உங்களுக்குள் புதுப் புது உணர்வுகள் பரவி இருக்கும்.
1.உங்கள் ஈர்ப்பு வட்டத்திற்குள் அந்த ஒளிக்
கதிர்கள்
2.அலைகளைப் போன்று சுழன்று கொண்டிருப்பதையும்
உங்களால் காணமுடியும்.
இதை யாரெல்லாம் பெறுகின்றனரோ அவை அனைத்தும்
உங்கள் வாழ்வில் இந்த மனித வாழ்க்கையில் சேரும் தீமைகளை அகற்றி உங்கள் ஆன்மாவைத்
தூய்மையாக்கச் செய்யும்.
நீங்கள் சுவாசிக்கும் உணர்வுகள் தெளிந்த மனதுடன்
வாழ்ந்திடவும் இந்த வாழ்க்கையில் எத்தகைய எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம்
நுகர்ந்தறியும் உணர்வுக்குள் தீமைகளைப் பிளந்திடவும் முடியும்.
அந்தத் தீமையற்ற உணர்வின் தன்மை அறியும்
ஆற்றலும் உங்கள் நினைவிற்குள் வரப்பட்டு உடலில் உள்ள அணுக்களை ஒவ்வொரு நொடிகளிலும்
இந்த விண்ணின் ஆற்றலை ஒளிக்கதிர்களாக மாற்றும் திறன் பெறுவீர்கள்.
இதை ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில்
மறவாது இதைச் செய்யுங்கள்.
அதைப் பெறும் தகுதியை துருவ
நட்சத்திரத்திலிருந்து விளைந்த உணர்வுகளை உங்களுக்குள் இணைக்கச் செய்கின்றோம். இதே
நினைவினை
1.விண்ணிலே நீங்கள் எண்ணி ஏங்கும் போதெல்லாம்
2.இந்த உணர்வுகள் உங்களுக்குள் வளர்ச்சியாகி
3.உங்கள் நினைவின் ஆற்றல் விண்ணுக்கே செல்லும்.
விண்ணுலகில் அதாவது வானவியலில் விளைந்த
உணர்வுகள் புவியில் ஈர்க்கப்பட்டு தாவர இனங்களாக வளர்க்கப்பட்டு தாவர இனங்களில்
உணர்வின் செயலாக உயிரினங்களில் எண்ணங்கள் உருவாக்கப்பட்டு அது பல கோடிச் சரீரங்களை
நாம் கடந்து வந்து இன்று மனிதனாக உருவாகி வந்துள்ளோம்.
எத்தனையோ வகையான இன்னல்களிலிருந்து விடுபடும்
எண்ணங்கள் நமக்குள் உருவாகி அதனின் உணர்வின் வலுவாக உணர்வுகள் வலுப்பெற்று உடல்கள்
பரிணாம வளர்ச்சியாகி வந்துள்ளோம்.
நம்மை மனிதனாக உருவாக்கிய இந்த உயிரால் இந்த
உடலுக்குள் விளைந்த உணர்வின் தன்மை தான் கார்த்திகேயா என்று நாம் எதனையும்
அறிந்திடும் ஆற்றலும் தெளிந்திடும் மனமும் கொண்டவர்கள் நாம்.
இருளைப் பிளந்து அங்கிருக்கும் பொருளைக் காணும்
நிலைகள் பெற்றது நமது ஆறாவது அறிவு. ஒரு தீபத்தை ஏற்றினோம் என்றால் அங்கே இருளை
மாய்த்து விட்டுப் பொருள் இருக்கும் நிலைகளை நாம் காணுகின்றோம்.
இதைப்போன்றுதான் துருவ நட்சத்திரத்தின் ஒளிக்
கதிர்களை உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களில்
1.சிறுகச் சிறுகச் சேர்க்கச் செய்கின்றோம்.
2அதிகமாகச் சேர்த்தால் உங்களால் தாங்க
முடியாது.
3.அது உடலிலே சூடாகி விடும்.
4.அதே சமயத்தில் அதனுடைய வேகத் துடிப்புகளை
நாம் தாங்கும் சக்தி இல்லை.
அதனால் தான் ஒவ்வொரு நொடிக்கும் இந்தத் துருவ
தியான நேரங்களில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்கள் ஈர்ப்புக்குள்
பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
சிறுகச் சிறுக உங்கள் உடலுக்குள் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளைப் பரவச் செய்து ஒவ்வொரு அணுக்களிலும் இதை
இணைக்கும்படிச் செய்கின்றோம்.
அணுக்கள் என்றால் நம் உடலில் எத்தனையோ விதமான
குணங்களை எண்ணியுள்ளோம். வளர்த்துள்ளோம். அதன் உணர்வின் தன்மை கொண்டு அணுக்கள்
விளைகின்றது.
அந்த அணுக்களில் துருவ நட்சத்திரத்தின்
ஒளிக்கதிர்களை இணைக்கப்படும் போது அந்த அணுக்களில் விளைந்துள்ள தீமைகள் சிறுகச்
சிறுகக் குறையும்.
உங்கள் நினைவின் ஆற்றல் விண்ணுக்கே செல்லும்.
அந்த விண்ணின் ஆற்றலைப் பருகும் தகுதியைப் பெறுவீர்கள்.
எந்த விண்ணில் இது உரு பெற்றதோ அந்த விண்ணில்
உரு பெற்ற உணர்வின் தன்மையை நுகர்ந்து ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கின்றான்
அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமான நிலைகள்.
அதைப் பின்பற்றியவர்கள் அனைவரும் இன்றும்
சப்தரிஷி மண்டலங்களாக என்றும் பேரின்பப் பெருவாழ்வாக என்றும் பெரு நிலையாக என்றும்
பதினாறு என்ற நிலையில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
1.அதன் வழி நாம் சென்றால்
2.அந்த எல்லையை அடைய முடியும்.