ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 15, 2017

கடலில் அலைகள் தொடர்ந்து வருவது போல் வாழ்க்கையில் வரும் தீமையான அலைகளிலிருந்து “மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு” மீள்வோம்

கடல்களிலே படகுகளில் சென்றாலும் அவர்கள் அலை கடலிலே எதைக் குறிக்கோளாக வைத்துச் செல்லுகின்றனரோ அந்த அலை கடலில் எதிர் நீச்சலாடி அந்தக் கரையைக் கடந்து செல்கிறார்கள்.

தான் எண்ணிய காரியங்களை நிறைவேற்ற ஒரு ஊரைக் கடக்க வேண்டும் என்றாலும் அல்லது கடலுக்குள் மீன் பிடிக்க வேண்டும் என்றாலும் ஒரு எல்லை வகுத்துத் தான் செல்லுகின்றனர். இதைப்போல தான்
1.மனிதனான நாம் இந்த உடலிலே இருந்தாலும்
2.உடலுக்குப் பின் என்ன என்ற எல்லையை வகுத்து கொள்ள வேண்டும்.
3.அருள் ஞானிகள் சென்ற அந்த உணர்வுடன் நாம் ஒன்ற வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில் வெறுப்பு வேதனை சங்கடம் சலிப்பு கோபம் குரோதம் என்ற கடுமையான புயல் நிலைகளில் அந்த அலைகளில் சிக்கி இன்று ஒவ்வொருவருமே தவித்துக் கொண்டிருக்கின்றோம்

இதையெல்லாம் மாற்றிவிட்டு சீரான நிலைகள் பெறவேண்டும் என்று வரப்படும் போது தான் அந்த அலைகளைப் பிளந்து நாம் எண்ணும் எல்லைகளை அடைய முடியும்.

இன்று ஒரு தெய்வத்தை வணங்க வேண்டும் என்று சென்றாலும் கூட ஒருவருக்கொருவர் எதிர்க்கும் நிலையில் புயல் போன்று கொந்தளித்து இந்த “வாழ்க்கையில் என்ன ஆகுமோ…? என்று எதிர் சிந்தனையாடிக் கொண்டுள்ளார்கள்.

நம் நாட்டில் வாழும் மக்களும் உலக மக்களும் எத்தனையோ வகைகளில் சிந்தனை சிதறி இன்று அவதிப்பட்டுக் கொண்டு பெரும் புயலில் அந்த அலையில் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளார்கள்.

இந்த நேரத்திலும் நாம் ஒவ்வொருவரும் அதைச் சீராக்கிட அந்த மகரிஷியின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வை நமக்குள் செலுத்துதல் வேண்டும்.

நாம் அந்த மகரிஷிகளின் அலைகளை எண்ணி இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து நம்மை நம்மைக் காத்து நம்மைச் சார்ந்தோர் அனைவருக்கும் அதைக் கிடைக்கப் பெறச் செய்யவேண்டும்.

மகரிஷியின் அருள் ஒளி எல்லோரும் பெற வேண்டும் அவர்கள் பொருள் கண்டுணர்ந்து செயல்பட வேண்டும் என்ற இந்த நிலைக்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு யாம் உங்களுக்கு இதை உபதேசித்துக் கொண்டுள்ளோம். அதாவது
1.உலகம் முழுவதற்கும் பரவிக் கொண்டு வரும்
2.அந்தத் தீமையான அலைகள் - புயல்களிலிருந்து நாம் தப்பித்து
3.மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து
4.இந்த உடலிலிருந்தே அழியா ஒளியின் சரீரம் நாம் பெற வேண்டும்.

இன்று இந்த வாழ்க்கையில் வந்த கடுமையான அலைகளிலிருந்து நாம் விபத்தில் சிக்கியது போல் ஆகிவிடக் கூடாது.

நாம் எண்ணும் நல்ல எண்ண அலைகளை மறைத்திடாது அருள் உணர்வின் வலுகொண்டு இந்த வாழ்க்கையில்… வரும் உலகத்தில் வரும்… தீமைகளை வென்றிட வேண்டும்.

ஏனென்றால் விஞ்ஞான அறிவால் நஞ்சு கொண்ட உணர்வாக வளர்ந்து நாம் அந்த விஞ்ஞான அறிவால் தாவர இனங்களுக்குள் நஞ்சினைக் கலந்து அந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் சென்று சிந்திக்கும் எண்ணங்களை மறைத்துக் கொண்டுள்ளது.

அதனால் நமக்குள் கடு கடுக்கும் உணர்வின் தன்மை வேட்கையைக் கூட்டிச் சிந்தனையற்ற நிலைகளாகி மனித எண்ணங்களே அழிந்து கொண்டிருக்கும் நிலைக்கு வந்துவிட்டது.

இதிலிருந்து மீளும் நிலையாக அருள் ஞானியின் உணர்வின் துணை கொண்டு அந்த நஞ்சினை அடக்கி உணர்வினை ஒளியாக மாற்றி நாம் விண் செல்லும் நிலையை அடைவோம்.

அருள் ஞானியின் உணர்வை நாம் பெற்று இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி மெய் ஞானியின் உணர்வுடன் நாம் சென்றடைவோம்

அந்த எல்லையை அடையும் செயலாக இந்த மனித வாழ்க்கையில் மகிழ்ந்திடும் செயலாகவும் இருளை வென்று ஒளியின் சரீரமாகப் பெறும் அந்த நிலைக்காக நாம் தியானிப்போம்.

இந்த மனிதன் என்ற முழுமையை நாம் அடைவோம்.

உயிருடன் ஒன்றிய ஒளியின் நிலையாக உணர்வின் தன்மை ஒளியாக நிலைத்திருப்போம். அதனின் உணர்வை நமக்குள் வளர்ப்போம். இந்த நஞ்சு கொண்ட உலகிலிருந்து நம்மை மீட்டுவோம்.

1.நமக்குள் ஆண்டு கொண்டிருக்கும் உயிரான ஆண்டவனுடன்
2.என்றும் அழியாத உணர்வாக அவனுடன் நாம் வாழ்ந்து
3.அவன் உறுதுணையுடன் வாழ்வோம் என்று நாம் தியானிப்போம்.