ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 29, 2017

அறியாமல் தவறுகள் ஏற்பட்டாலும்... தவறு செய்யக் கூடிய இயல்புகளை மாற்றும் வல்லமையை நாம் பெற வேண்டும்

வக்கீல் படிப்பைப் பயின்றபின் பல சட்ட நுணுக்கங்களை அறிந்து கொள்கின்றோம். சட்டத்தின் நுணுக்கங்கள் அறிந்து கொண்டாலும் இதிலே பிழைகள் எது? என்ற நிலைகள் நீக்கக் கற்றுக் கொள்கிறோம்.

கற்றுக் கொண்டாலும் தனக்கு நெருங்கிய ஒரு நண்பன் இருக்கின்றான் என்றால் அவன் தவறு செய்தால் அவனைக் காக்க முற்படுகின்றோம்.

“சட்டத்தில் எங்கே குறை இருக்கிறது…?” என்று நண்பனை காக்கத் தவறும் செய்கின்றோம்.

யாரும் கோபித்துக் கொள்ளாதீர்கள். சில நிலைகளில் நடப்பதைச் சொல்கிறேன். (சட்டங்கள் எவ்வாறு இருக்கின்றது என்ற நிலைகள் இப்படி)

அதே மாதிரி ஆடிட்டர் படித்தவர்கள் அதன் வழிகளிலே கற்றுணர்ந்தாலும் அவர் கற்றுணர்ந்த நிலைகள் கொண்டு தன் வாடிக்கையாளர்களை எப்படிக் காப்பாற்றுவது என்று தான் அவருடைய தத்துவமாக இருக்கின்றது.

விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற சர்க்கார் நிலைகளிலிருந்து தன்னை மாற்றிக் கொள்ளும் நிலை தான் இங்கே வருகின்றதே தவிர பொது விதியான நிலைகள் கொண்டு செயல்படும் நிலைகள் இல்லை.

1.தவறு அங்கேயும் அங்கே வரக்கூடாது
2.இங்கேயும் நாம் தவறான நிலைகள் செய்யக்கூடாது என்ற நிலைகள்
3.அதிலே எது மையமாக இருக்கிறதோ அதை உணர்ந்து
4.அதை ஏற்றுக்கொண்டு செயல்படும் இந்த நிலையும் இல்லை.

ஏனென்றால் அப்படிப் போனால் இவர் “பிழைக்கத் தெரியாதவர்…” என்ற பட்டமே வந்து விடும். இந்த ஆறாவது அறிவால் வரக்கூடிய நிலைகளை
1.இவர் இந்த வேலைக்கு லாயக்கில்லை.
2.இவர் எதற்காக இங்கே வந்தார்..? என்று சொல்வார்கள்.

நியாயத்திற்காகப் போராடினால் அவர் “பைத்தியக்கார வக்கீல்…” என்று சொல்வார்கள்.

நியாயத்திற்காக வேண்டி ஆடிட்டர் சொன்னால் இவருக்குப் “பிழைக்கத் தெரியவில்லை..!” என்று சொல்வார்கள்.

இப்படித் தவறு செய்பவனுடைய நிலைகள்
1.தவறு செய்து விட்டேன் என்றால்
2.அந்தத் தவறை அது சாதகமாக வைத்து
3.எந்தச் சட்டத்தில் எது ஓட்டை இருக்கின்றதோ
4.அதைப் பிடித்து தவறு செய்தவரைக் காப்பாற்றிக் கெட்டிக்காரராகும் நிலை தான்,

அப்பொழுது எங்கள் வக்கீல் “மிகவும் கெட்டிக்காரர்” என்பார்கள்

குற்றவாளியாக இருப்பவன் இவன் முதன்மையாக (நல்லவனாக) வந்து விடுகின்றான். குற்றவாளி செய்யக்கூடிய தவறை அவர் ஏற்றுக்கொண்டு வக்கீல் குற்றவாளியாக வேண்டும்.

குற்றத்தைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நிலைகளுக்கு இவர் வாதிடுகின்றார்.
1.இப்படித்தான் இன்றைய நிலைகள்
2.கல்வியில் ஞானங்கள் வரப்படும் போது
3.இது தான் வருகின்றது.

ஏனென்றால் இது விஞ்ஞான அறிவால் மனிதனால் கற்றுணர்ந்த நிலைகள் இத்தகைய இயல்புகள் வருகின்றது.

(நான் யாரையும் குறை கூறவில்லை)

மெய்ஞானியின் உணர்வுகளை நாம் ஒவ்வொரு சமயம் நாம் எடுக்கப்படும் போது நம்மை அறியாமல் இயக்கும் தீமைகளிலிருந்து குற்ற இயல்புகளை அகற்றச் செய்யும்.

1.இயற்கையின் உணர்வுகள் எவ்வாறு இயங்குகின்றது?
2.அந்த உணர்வின் ஆற்றல் மனிதனை எப்படி இயக்குகின்றது? என்ற நிலையை அறிந்தவர்கள் ஞானிகள்.

காலத்தால் சந்தர்ப்பத்தால் இணைந்த இந்த நிலைகளை இது எவ்வாறு முறியடிப்பது? என்ற ஆற்றல்களை வளர்த்துக் கொண்டவர்கள் மகரிஷிகள்.

சாதாரண மனித உணர்வின் இயக்க நிலைகள் இது மற்றவர்களைக் குற்றவாளியாக்கும். அந்த மெய்ஞானிகள் யாரையும் குற்றவாளி ஆக்குவதில்லை.

சந்தர்ப்ப பேதத்தால் தான் இந்தக் குற்றங்கள் ஏற்படுகின்றது என்பதை உணர்ந்தவர்கள் ஞானிகள்.

1.குற்றமற்ற உணர்வை உருவாக்குவதற்காகச் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி
2.தான் கண்டுணர்ந்த மெய் ஒளியை அவர்கள் பால் பாய்ச்சி - அவர்களை
3.தன்னைத் தான் அறியும்… மெய்யை அறியும்… மெய் ஞானிகளாக… ஆக்குபவர்கள் மகரிஷிகள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெற்றால் நல்லதைக் காக்க முடியும். நாம் எடுக்கும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் தீமைகள் வராது குற்றங்கள் வராது பாதுகாப்புக் கவசமாக அமையும்.

நாம் எண்ணும் நல்ல குணங்களை நம்மைக் காக்கும் தெய்வமாகத் துதிப்போம். செய்து பாருங்கள். “உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்”.