ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 8, 2017

பாசத்தால் வேதனைகளைச் சுவாசிக்காது பாசத்தின் பற்று கொண்டு மகரிஷிகளின் அருள் ஒளியைச் சுவாசிப்போம்

நம் பிரபஞ்சத்திலுள்ள வியாழன் செவ்வாய் இராகு கேது சனி என்று நவக் கோள்களின் தன்மையும் ஒவ்வொன்றும் தனித் தன்மை கொண்டது.

இருப்பினும் அவை அனைத்தும் உமிழ்த்துவதைச் சூரியன் தனக்குள் கவர்ந்து “ஒளியின் சிகரமாக…” மாற்றுகின்றது. இதைப் போல தான் நம் உயிரான நிலையும் நமக்குள் சூரியனாக இருக்கின்றது.

தினசரி நம் வாழ்க்கையில் எத்தனையோ பேரைச் சந்திக்கின்றோம். நாம் சந்திப்போர் ஒவ்வொரு உடலிலேயும் சில சில கஷ்டங்களும் இருக்கும் துன்பங்களும் இருக்கும் அனைத்தும் இருக்கும்.

1.நாம் (அனைவரும்) ஒன்றிய நிலைகள் கொண்டு
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளியுடன் இணைக்கப்படும் பொழுது
3.இந்தத் துன்பங்களை நீக்கிடும் அகற்றிடும் அந்தச் சக்தியாக நாம் விளைய முடியும்.

1.பாசத்தின் நிலைகள் கொண்டு வேதனை என்ற நிலைகளைச் சுவாசிப்பதற்குப் பதில்
2.பாசத்தின் பற்று கொண்டு மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அவ்வாறு எண்ணும் பொழுது அந்தப் பற்றுதல் அதனின் நிலைகள் கொண்டு நமக்குள்ளும் அந்தப் பாசத்தின் நிலைகள் கொண்டு அருள் ஞானியின் உணர்வைப் பருக முடிகின்றது.

நமக்குள் தீமையை அகற்றும் சக்தியாக விளைகின்றது. ஒவ்வொரு நாளும் இதிலிருந்து நீங்கள் ஆரம்பித்துப் பாருங்கள்.
1.உங்களை நீங்கள் நம்பிப் பாருங்கள்.
2.எண்ணியதை உங்கள் உயிர் இயக்குகின்றது.
3.அதை இயக்கத்தின் நிலைகளில் அறிந்து கொள்கின்றீர்கள்.
4.அறிந்த உணர்வை உயிர் உடலாக்குகின்றது.
5.மீண்டும் நினைவாக்கும் பொழுது நன்மையின் தன்மையை உயிர் உருவாக்கிக் காட்டுகின்றது.
6.எதனின் உணர்வை நமக்குள் விளைய வைக்கின்றோமோ விளைய வைத்த நிலையை உயிர் தன்னுடன் அணைத்துச் செல்கிறது.
7.எண்ணிய பாதையில் உயிர் அங்கே அழைத்துச் செல்கிறது.
8.என்றும் அழியா நிலையான ஒளியின் சரீரமாக பெருவீடு பெரு நிலையாக உயிர் நம்மை அடையச் செய்கின்றது.
8.மனிதன் அடைய வேண்டிய முழுமையான நிலை அது தான்.

பிறவியில்லா நிலையை நாம் அடைய வேண்டும்.

மனிதன் முழுமையடையும் தருணம் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகும் இந்தத் தருணத்தை நழுவவிடாது அருள் ஞானிகள் காட்டிய நிலைகள் கொண்டு என்றும் உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு அவர்கள் காட்டிய நெறியின் நிலைகள் கொண்டு உணர்வின் தன்மை என்றும் ஒளியாக நிலைத்திருப்போம்.

பௌர்ணமி நாளன்று உங்கள் மனமும் பௌர்ணமியாக
1.உங்கள் நினைவுகளும் பொருளறிந்து செயல்படும் நினைவாகி
2.அதன் வழிகளில் நீங்கள் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட வளர்ந்திட
3.மகரிஷிகளின் அருள் வட்டத்துடன் உங்கள் நினைவுகள் ஒன்றிட
4.அறியாது வந்த இருள் விலகிட
4.உஙகள் மூச்சும் பேச்சும் தீமைகளை அகற்றிட
5.இந்த உலகில் உங்கள் நினைவுகள் அனைத்தும் மெய்ஞானி உணர்வுகளுடன் சென்றிட
6.விஞ்ஞான உலகத்தை வென்று “மெய்ஞான உலகத்திற்கு” நீங்கள் செல்ல வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.