ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 31, 2017

“மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்…” என்று எண்ணினால் என்ன பலன் கிடைக்கும்...?

ஒரு குழம்பிற்குள் மிளகாய் அதிகரித்துவிட்டால் காரத்தின் தன்மை அடைந்து விடுகின்றது. காரமானாலும் அதற்குள் மற்ற சரக்குகளை இணைத்துவிட்டால் காரத்தின் தன்மை குறைந்துவிடுகின்றது.

இதைப் போன்றுதான் நம் வாழ்க்கையில் கேட்டறிந்த பார்த்துணர்ந்த உணர்வுகள் நமக்குள் தீமையை விளைவிக்கும் சக்தியாக இருப்பினும் அந்த மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்தியை நாம் எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று “நூறு முறை… இருநூறு முறை… ஆயிரம் முறை…” என்று எண்ணிப் பாருங்கள்.

உங்களைக் காக்கும் உணர்வாக இது வரும். அப்பொழுது அந்த ஞானிகளின் உணர்வுகள் உங்கள் உயிரால் உருவாக்கப்பட்டு அதுவே ஆட்சி புரிந்து அதனின் வழிகளிலே உங்களை வழி நடத்தும்.

1.நம் உயிர் நினைத்ததையெல்லாம் இயக்கிக் காட்டும்.
2.துயரத்தைத் துடைத்துக் காட்டும்.
3.மெய்ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் காட்டும்.
4.மெய்ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் வளர உங்களுக்குள் அறியாது வந்த தீமைகள் குறையும்.

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அதிலே ஆயிரம் குடம் பாலை ஊற்றிய பின் எவ்வாறு அந்த நஞ்சினைச் சிறுக்கச் செய்கின்றதோ இதைப் போல
1.ஞானிகள் ஒரு சொல்லானாலும்
2.ஒரு நினைவானாலும் ஆயிரம் குடம் பாலுக்கு ஒப்பானவர்கள்.

“பல முறை… அதைச் சொல்லும் பொழுது” நமக்குள் தீமையின் நிலைகளைச் செயலற்றதாக்கி அதனின் வீரிய நிலையாக அதை மாற்றிவிடும்.

உங்கள் நினைவின் ஆற்றல் விண்ணிலே செல்லும் பொழுது உங்களை முழுமை அடையச் செய்யும்.

இதைப் போன்று மெய்ஞானிகளின் துணை கொண்டு உங்கள் நல்ல எண்ணங்களை மறைக்கும் இந்த அழுக்கான திரையைக் கிழித்து தீமைகளை அகற்றித் தீமைகளை அகற்றும் சக்தியாக உங்களுக்குள் விளைய வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த உடலை விட்டு அகன்றால் என்றும் அழியாப் பெரு வாழ்வு வாழும் ஒளிச் சரீரம் பெற முடியும்.

இந்த முறைப்படித்தான் விண்ணுக்குப் போக முடியுமே தவிர நான் காட்டிற்குள் போய் ஜெபமிருந்து ஆண்டவன் அருளைப் பெற முடியும் என்றால் முடியாது.

அங்கே உங்கள் நினைவாற்றல் சிறிது சோர்வடைந்தால் போதும்.
1.”பாவிப்பயல்…” அந்தக் காலத்தில் எனக்கு அப்படிச் செய்தான் இப்படிச் செய்தான்.
2.நான் சாமியாராகப் போவதற்கு எப்படியெல்லாம் இடைஞ்சல் செய்தான்…!
3.”அவர்களை என்ன செய்வது…?” என்ற இந்த உணர்வுகள் எதிர்மறையை ஊட்டும்.

அப்புறம் இவர் சாமியாராகப் போகப் போவதுமில்லை.

கடைசியில் இந்தக் கோபமான வினைகளைத்தான் சாப வினைகளாக மாற்றி மற்றவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் சாபமிட்டு அவர்களைக் கெடுக்க முடியும்.
1.விண்ணுக்குப் போகவும் முடியாது
2.இந்த மண்ணை விட்டுத் தப்பவும் முடியாது.
3.இந்தப் பூமியின் ஈர்ப்பிலே தான் அவர்கள் செயல்பட முடியும். 

இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

October 30, 2017

மரண பயத்தை நீக்கி “மரணமில்லாப் பெரு வாழ்வு” வாழ்வோம்

ஆதிமூலம் என்ற இந்த (நம்) உயிர் பல கோடிச் சரீரங்களில் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்… விடுபடவேண்டும்… என்று தான் பார்த்துத் தப்பித்த உணர்வுகள் வலுப்பெற்றது தான் மூஷிக வாகனா என்பது.
1.அந்தக் கடுமையான உணர்வுகளைச் சுவாசித்து
2.அதிலிருந்து தப்பிக்கொள்ளும் உணர்வு கொண்டு இது ஓடுகின்றது.

இருந்தாலும் அந்தத் தப்பிக்கும் உணர்வுகளில் வேதனை என்ற உணர்வுகள் அதிகமாகச் சுவாசித்தால் கணங்களுக்கு அதிபதியாகி விடுகின்றது.

அதன் வாழ்க்கையில் எந்த உடலை உற்றுப் பார்த்து அதனால் பயந்து உணர்வின் வேகங்கள் கூடியதோ அந்த உணர்வுகள் வளர்ந்த பின் இந்த உடலை விட்டுச் சென்ற இந்த உயிரான்மா அந்த வலுவான உடலுக்குள் சென்றுவிடுகின்றது.

அந்த உடலுக்குள் சென்று அதனின் உணர்வின் கருவாகப் பரிணாம வளர்ச்சி அடைந்து அதனின் ரூபமாக ஆகின்றது என்ற நிலை சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாழ்க்கையிலும் தன் வாழ்க்கையை அது வாழத் தன்னைக் காட்டிலும் எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் நிலைகளில் வலுவானதைச் சுவாசிக்கும் நிலை வருகின்றது. இவ்வாறு பரிணாம வளர்ச்சியாகின்றது.

காகத்தை எடுத்துக் கொள்வோம். தன் ஆகாரத்தை எடுக்கும் போது ஒரு கொத்துக் கொத்திவிட்டு
1.எதிரிகள் எவராவது வருகின்றனரா
2.தன்னைத் தாக்க முற்படுகிறதா என்று எண்ணிப் பார்க்கிறது.

குருவியானாலும் தன் ஆகாரத்தை எடுத்தவுடன் கொத்தி வைத்து விடுகின்றது.
1.மீண்டும் திரும்பிப் பார்க்கின்றது.
2.ஒவ்வொரு நிமிடத்திலும் தன் உடலைப் பாதுகாக்கும் உணர்வுகளே அங்கே வருகின்றது.

அதே சமயத்தில் ஒரு பூனை சீறித் தாக்கி சந்தர்ப்பவசத்தால் குருவி சிக்கி விட்டால் குருவியின் உணர்வுகள் அனைத்தும் இந்தப் பூனையின் வாயில் சிக்கிய பின் பூனையின் நினைவே வருகின்றது.

குருவியின் தசைகள் பூனைக்கு இரையாகின்றது. ஆனால்
1.குருவியின் எண்ணங்களோ பூனையின் பால் நினைவாற்றல்கள் அதிகமாகி
2.உயிராத்மா  வெளியே போகும்போது பூனையின் கருவறைக்குள் சென்று
3.இந்த உணர்வின் தன்மை கருவாகி
4.அடுத்து பூனையாகப் பிறக்கும்.

இரவிலே பல பட்சிகள் ஒன்று சேர்ந்து மரங்களில் அடங்கி இருக்கின்றது. அந்தப் பட்சிகள் ஒன்றுக்கொன்று நுனியில் தான் அது இருக்கும்.

கொப்புகள் அசைந்தால் அல்லது இதைக் காட்டிலும் கடுமையான நிலை அங்கு வந்தால் எடை தாங்காது அங்கு வர முடியாத எல்லையாகப்  பார்த்துத் தான் அந்தச் சிறு நுனியில் தான் எல்லாமே இருக்கும்.

காரணம் ஒரு குருவி இனமாக இருப்பினும் அந்த அசைவைக் கண்டு தான் விழித்துக் கொள்வதற்காக இப்படிப் பாதுகாக்கும் எண்ணங்களை உருவாக்கி அந்த மரண பயத்துடன்தான் வாழ்கின்றது.

ஆனால் எதிரி தாக்கப்படும்போது உணவாகப் புசிக்கும் நிலையில் வந்தால் மரண பயமாக அது ஒன்று சப்தம் இட்டால் போதும். எல்லாம் எழுந்து கொள்ளும்.

இதைப்போல நாம் குருவியாக பூச்சியாக இருக்கப்படும் போது எதிரியிடமிருந்து தப்பிக்கும் உணர்வின் தன்மைகளைக் கூர்மையாக்கி அந்த உணர்வின் வலிமை பெற்று அதிலிருந்து தப்பிக்கும் உணர்வுகளைச் சேர்த்துச் சேர்த்துத்தான் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வந்துள்ளோம்.

இதனை உணர்த்துவதற்குதான் மூஷிகவாகனா. கணங்களுக்கு அதிபதி கணபதி என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

பரிணாம வளர்ச்சியாகி மனிதனான பின் முன் சேர்த்து கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது நமது உயிர் தான் என்பதை எல்லோரும் அறிவதற்காக “ஆதிமூலம்” என்று உயிருக்குப் பெயர் வைக்கின்றார்கள்.

ஒவ்வொரு சரீரத்திலும் சுவாசித்த உணர்வுகள் இந்த கணங்களுக்கெல்லாம் அதிபதி கணபதி என்று அடுத்த ரூபம் பெறுகின்றோம்.

பல கோடிச் சரீரங்களில் தப்பித்து வாழ்ந்திடும் உணர்வு ஆறாவது அறிவாக வந்து மற்றதை அடக்கி ஆட்சி புரியும் கணங்களுக்கு அதிபதியாக நம்முடைய எண்ணங்கள் உருவாகி உள்ளது கணபதி.

கணங்களுக்கெல்லாம் அதிபதி என்ற நிலையில் உடல் பெற்றாலும் இந்தக் கணங்களுக்கெல்லாம் ஈசனாக இருந்து இயக்கியது உயிர் தான் என்று நம் உயிரை வணங்கும்படி செய்கிறார்கள் ஞானிகள்.

எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து வந்த நாம் இனி வரும் எத்தகைய தீமைகளிலிருந்தும் விடுபட்டு தீமையற்ற மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்வோம்.

இந்த மனித உடலைக் கொடுத்தது என்று “அங்குசபாசவா”.

1.ஆறாவது அறிவு கொண்டு நாம் எதனையுமே அடக்கி
2.வாழ்க்கையில் வரும் இன்னல்களை ஒடுக்கி
3.மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ முடியும் என்ற
4.இந்த நிலையை நாம் உணர்தல் வேண்டும்.

இன்னொரு உடல் பெறாது உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் வாழ்வோம்.

கொள்ளையர்கள் திருடர்கள் பற்றி அச்சுறுத்தும் உணர்வுகளை எண்ணினால் ஏற்படும் விளைவுகள் – அதை அகற்றி மன பலம் எப்படிப் பெறுவது?

இன்று நாம் பத்திரிகையின் வாயிலாகப் படிக்கின்றோம். ஓடும் பாதையில் இரயிலே கொள்ளையடித்தான் என்ற அதிர்ச்சியான செய்திகளைக் கண்டபின் அந்த உணர்வை நுகரும் போது அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகின்றது.

பதிவான பின் அடுத்து என்ன செய்கின்றது?

அடுத்து இரயிலில் செல்லப்படும் போது அதே நினைவு வந்து அதிர்வின் நிலை ஆகின்றது. உடனே அச்சுறுத்தும் உணர்வு வருகிறது.

“கொள்ளையன் வந்து விடுவானோ…!” என்ற உணர்வின் தன்மை அச்சுறுத்தினால் மற்ற பெட்டிகளில் கொள்ளையடிக்கவில்லை என்றாலும்
1.நாம் வெளிப்படுத்தும் அச்சுறுத்தும் உணர்வின் அலைகள் படரும் போது
2.அதை நுகர்ந்து கொள்ளையடிப்பவன் நாம் இருக்கும் அந்தப் பெட்டிக்கேதான் வந்து சேருவான்.

பார்க்கலாம்.

இதே போன்றுதான் வாகனங்களில் செல்லும் போது “விபத்தில் சிக்கி விடுவோமோ…!” என்று அதிர்ச்சியாகி டிரைவரை எண்ணினால் இந்த உணர்வுகள் ஊடுருவி அதற்குத் தகுந்தாற்போல் அணைத்து அடுத்து ஆக்ஸிடண்ட் ஆகும்.

இவன் எண்ணியபடி டிரைவரின் உணர்வை அணைத்து வண்டிக்குள் இருந்தாலும் இவன் மேல் உராய்ந்து இவன் அடிபடுவான். மற்றவருக்கு ஆவதில்லை. பார்க்கலாம்.

இவர்களின் எண்ணத்திற்கு ஒப்ப அந்த உணர்வின் தன்மைகள் டிரைவரையும் இயக்குகின்றது.

எப்படி ஒரு கம்ப்யூட்டர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் உணர்வை இயக்குகின்றதோ… இதன் வழி தான் நம் உயிர் எலக்ட்ரிக்… நாம் நுகர்வைதை எலக்ட்ரானிக்காக… உணர்வாக மாற்றுகின்றது.

அதன் வழி தான் (உயிரிலே மோதினால் உணர்ச்சிகளாகின்றது) இந்த உடலை இயக்குகின்றது என்பதை விஞ்ஞான அறிவு கொண்டு நாம் தெரிந்து கொள்வது நல்லது.

விஞ்ஞான அறிவில் வளர்கின்றோம். விஞ்ஞானியும் காட்டுகின்றான். அதன் உணர்வின் இயக்கம் எப்படி என்று காட்டிய பின்
1.இனியாவது நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது?
2.நம்மையறியாது தவறு எப்படி வருகின்றது?
3.நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் எப்படி நோயாகின்றது?
4.நோயின் தன்மை வளர்ந்தபின் உடலை எப்படி இழக்கச் செய்கிறது என்பதை
5.மெய்ஞானிகள் காட்டிய உணர்வு கொண்டு அறிந்து உணர்வோம்.
6.வரும் தீமைகளிலிருந்து விடுபடும் அருள் சக்திகளை வளர்த்துக் கொள்வோம்.

அந்த விஞ்ஞானியின் தன்மையில் வளர்ந்து காட்டினாலும் அஞ்ஞான வாழ்க்கையை வாழ்கின்றனர்.

பக்தி மார்க்கத்தில் பற்று கொண்டவர்களும் உண்மையின் உணர்வை அருள் ஞானிகள் காட்டிய வழியில் நுகராது அதை வளர்த்திடாது அதனுடைய நிலைகள் தனியப்படும் போது அஞ்ஞான வாழ்க்கை வாழும் நிலையே பக்தி மார்க்கத்திலும் வருகிறது.

பத்திரிகைகளில் படிக்கும் போது எப்படி இந்த உணர்ச்சி  கொள்ளையர்கள் வந்து விடுவார்களோ என்ற இயக்கத்தின் தன்மை ஆகின்றது.

நாம் இதற்கு என்ன செய்வது? அந்த உணர்வைத் தூண்டுகின்றது. உணர்வின் தன்மை வளர்ந்த பின் பயந்து வாழும் நிலைகளே வருகின்றது.

இரயிலிலே அல்லது வாகனங்களில் செல்லப்படும் போது இந்த உணர்வுகளை அதிகமாகத் தூண்டி நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் அந்த அணுக்களுக்கு அதை வீரிய உணர்வாக ஊட்டி நமக்குள் அச்சுறுத்தும் அணுக்களை வளர்த்து இந்த உடலையே பறி கொடுத்த உணர்வு கொண்டு நல்ல உணர்வையே நாம் பறி கொடுத்து விடுகின்றோம்.

அவன் பொருளைப் பறிகொடுத்தான். உடலை பறி கொடுத்தான். இந்தச் செய்தியைப் படிக்கின்றோம் பதிவாக்கிக் கொள்கின்றோம். நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் கடும் நோயாக வரத்தொடங்கி விடுகிறது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபடுவதற்குத்தான் ஆலயங்களில் அந்தச் சிலையை உருவாக்கிக் காவியத்தைப் படைத்துக் கருத்தினை நுகரும்படி செய்கின்றார்கள் ஞானிகள்.

அவ்வாறு நுகர்ந்த கருத்து அருள் உணர்வின் தன்மை இயக்கமாகி அந்த உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் நல்ல அணுக்களை உருவாக்கி பகைமை உணர்வுகளை அகற்றி நம் சொல் பிறரைக் காக்கும் நிலை வருகின்றது.

ஆலயத்திற்குச் சென்றபின் தீப ஆராதனை காட்டும் போது மகரிஷிகளின் அருள் சக்தியால்
1.இந்த ஆலயம் வருவோர் எல்லாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
2.அவர்கள் குடும்பமெல்லாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
3.தொழில் செய்யும் இடமெல்லாம் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
4.நான் பார்ப்போர் எல்லாம் பொருளறிந்து செயல் படும் தன்மை பெற வேண்டும் என்று இப்படிப்பட்ட உணர்வுகளை நாம் நுகர்தல் வேண்டும்.

தீப ஆராதனை காட்டும் போது அங்கு இருக்கக்கூடிய பொருள்கள் அனைத்தும் தெரியும். பொருள் தெரிந்தபின் அந்தத் தெய்வத்தைப் பார்க்கின்றோம். அது துவைதம்.

“இந்தத் தெய்வம் நல்லது செய்யும்…” என்று உருவமாக்கி அந்த எண்ணத்தை எடுத்து அதைக் காவியமாக்கிப் படிக்கும் போது அந்த நல்ல உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது.

1.சாதாரண மனிதனும் தன்னை அறியாமலே
2.உயர்ந்த உணர்வுகளையும் உயர்ந்த ஆற்றல்களையும் பெறுவதற்கே
3.ஆலயங்களை உருவாக்கினார்கள் ஞானிகள்.

அந்த அருள் உணர்வுகள் நமக்குள் தூண்டப்பட்டால் அருள் ஆற்றல்களைப் பெறக்கூடிய தகுதி வருகின்றது. தெய்வ சக்திகளை நாம் பெறுகின்றோம்.

“நாம் தெய்வமாக வேண்டும்…” என்ற முறையைத்தான் அங்கு வகுக்கப்பட்டது. ஆலயங்களில் அதைப் பதிய வைத்தனர் ஞானிகள். அதன் வழி நாம் நடந்தோம் என்றால் நாமும் தெய்வமாகின்றோம்.

October 29, 2017

அறியாமல் தவறுகள் ஏற்பட்டாலும்... தவறு செய்யக் கூடிய இயல்புகளை மாற்றும் வல்லமையை நாம் பெற வேண்டும்

வக்கீல் படிப்பைப் பயின்றபின் பல சட்ட நுணுக்கங்களை அறிந்து கொள்கின்றோம். சட்டத்தின் நுணுக்கங்கள் அறிந்து கொண்டாலும் இதிலே பிழைகள் எது? என்ற நிலைகள் நீக்கக் கற்றுக் கொள்கிறோம்.

கற்றுக் கொண்டாலும் தனக்கு நெருங்கிய ஒரு நண்பன் இருக்கின்றான் என்றால் அவன் தவறு செய்தால் அவனைக் காக்க முற்படுகின்றோம்.

“சட்டத்தில் எங்கே குறை இருக்கிறது…?” என்று நண்பனை காக்கத் தவறும் செய்கின்றோம்.

யாரும் கோபித்துக் கொள்ளாதீர்கள். சில நிலைகளில் நடப்பதைச் சொல்கிறேன். (சட்டங்கள் எவ்வாறு இருக்கின்றது என்ற நிலைகள் இப்படி)

அதே மாதிரி ஆடிட்டர் படித்தவர்கள் அதன் வழிகளிலே கற்றுணர்ந்தாலும் அவர் கற்றுணர்ந்த நிலைகள் கொண்டு தன் வாடிக்கையாளர்களை எப்படிக் காப்பாற்றுவது என்று தான் அவருடைய தத்துவமாக இருக்கின்றது.

விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற சர்க்கார் நிலைகளிலிருந்து தன்னை மாற்றிக் கொள்ளும் நிலை தான் இங்கே வருகின்றதே தவிர பொது விதியான நிலைகள் கொண்டு செயல்படும் நிலைகள் இல்லை.

1.தவறு அங்கேயும் அங்கே வரக்கூடாது
2.இங்கேயும் நாம் தவறான நிலைகள் செய்யக்கூடாது என்ற நிலைகள்
3.அதிலே எது மையமாக இருக்கிறதோ அதை உணர்ந்து
4.அதை ஏற்றுக்கொண்டு செயல்படும் இந்த நிலையும் இல்லை.

ஏனென்றால் அப்படிப் போனால் இவர் “பிழைக்கத் தெரியாதவர்…” என்ற பட்டமே வந்து விடும். இந்த ஆறாவது அறிவால் வரக்கூடிய நிலைகளை
1.இவர் இந்த வேலைக்கு லாயக்கில்லை.
2.இவர் எதற்காக இங்கே வந்தார்..? என்று சொல்வார்கள்.

நியாயத்திற்காகப் போராடினால் அவர் “பைத்தியக்கார வக்கீல்…” என்று சொல்வார்கள்.

நியாயத்திற்காக வேண்டி ஆடிட்டர் சொன்னால் இவருக்குப் “பிழைக்கத் தெரியவில்லை..!” என்று சொல்வார்கள்.

இப்படித் தவறு செய்பவனுடைய நிலைகள்
1.தவறு செய்து விட்டேன் என்றால்
2.அந்தத் தவறை அது சாதகமாக வைத்து
3.எந்தச் சட்டத்தில் எது ஓட்டை இருக்கின்றதோ
4.அதைப் பிடித்து தவறு செய்தவரைக் காப்பாற்றிக் கெட்டிக்காரராகும் நிலை தான்,

அப்பொழுது எங்கள் வக்கீல் “மிகவும் கெட்டிக்காரர்” என்பார்கள்

குற்றவாளியாக இருப்பவன் இவன் முதன்மையாக (நல்லவனாக) வந்து விடுகின்றான். குற்றவாளி செய்யக்கூடிய தவறை அவர் ஏற்றுக்கொண்டு வக்கீல் குற்றவாளியாக வேண்டும்.

குற்றத்தைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நிலைகளுக்கு இவர் வாதிடுகின்றார்.
1.இப்படித்தான் இன்றைய நிலைகள்
2.கல்வியில் ஞானங்கள் வரப்படும் போது
3.இது தான் வருகின்றது.

ஏனென்றால் இது விஞ்ஞான அறிவால் மனிதனால் கற்றுணர்ந்த நிலைகள் இத்தகைய இயல்புகள் வருகின்றது.

(நான் யாரையும் குறை கூறவில்லை)

மெய்ஞானியின் உணர்வுகளை நாம் ஒவ்வொரு சமயம் நாம் எடுக்கப்படும் போது நம்மை அறியாமல் இயக்கும் தீமைகளிலிருந்து குற்ற இயல்புகளை அகற்றச் செய்யும்.

1.இயற்கையின் உணர்வுகள் எவ்வாறு இயங்குகின்றது?
2.அந்த உணர்வின் ஆற்றல் மனிதனை எப்படி இயக்குகின்றது? என்ற நிலையை அறிந்தவர்கள் ஞானிகள்.

காலத்தால் சந்தர்ப்பத்தால் இணைந்த இந்த நிலைகளை இது எவ்வாறு முறியடிப்பது? என்ற ஆற்றல்களை வளர்த்துக் கொண்டவர்கள் மகரிஷிகள்.

சாதாரண மனித உணர்வின் இயக்க நிலைகள் இது மற்றவர்களைக் குற்றவாளியாக்கும். அந்த மெய்ஞானிகள் யாரையும் குற்றவாளி ஆக்குவதில்லை.

சந்தர்ப்ப பேதத்தால் தான் இந்தக் குற்றங்கள் ஏற்படுகின்றது என்பதை உணர்ந்தவர்கள் ஞானிகள்.

1.குற்றமற்ற உணர்வை உருவாக்குவதற்காகச் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி
2.தான் கண்டுணர்ந்த மெய் ஒளியை அவர்கள் பால் பாய்ச்சி - அவர்களை
3.தன்னைத் தான் அறியும்… மெய்யை அறியும்… மெய் ஞானிகளாக… ஆக்குபவர்கள் மகரிஷிகள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெற்றால் நல்லதைக் காக்க முடியும். நாம் எடுக்கும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் தீமைகள் வராது குற்றங்கள் வராது பாதுகாப்புக் கவசமாக அமையும்.

நாம் எண்ணும் நல்ல குணங்களை நம்மைக் காக்கும் தெய்வமாகத் துதிப்போம். செய்து பாருங்கள். “உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்”.

மெய் ஞானிகளை உருவாக்கும் இடம் எது...?

நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக எங்கெங்கே கோயில்கள் இருக்கினறதோ அங்கெல்லாம் செல்கின்றோம், அங்கே போய் என்ன செய்கின்றோம்?

உண்மையின் தன்மையை சொல்லி “யாராவது நினைக்கின்றோமா…” என்றால் இல்லை.

1.கோவிலுக்குப் போகின்றோம்.
2."நாம் போனால் ஆண்டவன் காப்பாற்றுவான்” என்ற நிலையில்தான் போகின்றோம்.
3.”எப்படிக் காப்பாற்றுவான்…?” என்று சொன்னதை விட்டுவிட்டோம்.

ஆனால் நம்மை ஆண்டு கொண்டிருப்பவன் ஆண்டவன் அது தான் நம் உயிர். அதை நாம் புரிந்துகொள்ளவில்லை.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதை வைத்துத்தான் நமக்குள் தீமையை அகற்றும். ஞானியின் உணர்வை எடுத்தால் அருள் ஒளியாக நம்மைக் காப்பாற்றுகின்றான்.

தீமையானவர்களை நாம் உற்றுப் பார்த்தால் அது நமக்குள் தீமையான உணா்வாகப் பதிவாகின்றது.

உதாரணமாக நீங்கள் கோவிலுக்குப் போகின்றீர்கள். கோயிலுக்குப் போய்விட்டு வரும் போது வரும் வழியில் ரெண்டு போ் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.

அவர்களை நாம் வேடிக்கை பார்த்தால் போதும்.

இந்த நல்ல நாளும் அதுவுமா ரெண்டு பேர் இப்படிக் சண்டை போட்டுக் கொள்கிறார்களே… அயோக்கியர்கள்…! என்று நாம் சொல்வோம்.

அப்பொழுது இந்த உணா்வுகள் சிறு திரையாக (சித்திரை) உங்கள் நல்ல குணங்களை மறைத்துவிடுகின்றது.

அப்பொழுது உங்கள் (உங்களுக்குள் நின்று ஆண்டு கொண்டிருக்கும்) ஆண்டவன் என்ன செய்கின்றான்?

1.நீ கேட்டாய்…! (சண்டை போடுபவர்களின் உணர்வுகளை)
2.அதைப் பெற்றாய்…!
3.அதை நீ அறிந்துகொள்…! என்ற நிலை தான் வருகின்றது.

அதைத் துடைக்க வேண்டுமல்லவா…! கோவிலில் இருக்கும் ஆண்டவன் வந்து அதைத் துடைப்பானா…! சிந்தித்துப் பாருங்கள்.

அதை நீக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? மெய் ஞானிகளின் உணா்வலைகள் என் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா என்று அதை வேண்டி எடுத்து உள் புகுந்த அந்தத் தீமையான உணர்வுகளைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இருளை நீக்கி ஒளி என்ற உணர்வை வளர்க்கும் நிலையைக் காட்டும் இடம் தான் கோவில்.

உதாரணமாக ஒரு இஞ்சினியராகப் போக வேண்டும் என்றால் அது சம்பந்தமாகப் படிக்கின்றீர்கள். அதைப் படித்து இன்ஜின் எப்படி ஓட்டவேண்டும் என்று தெரிந்து கொள்கிறீர்கள்.

விஞ்ஞானி ஒவ்வொரு பொருளையும் உணா்ந்து ஒவ்வொரு இயக்கத்திற்கும் எதை எதை இணைத்தால் எப்படிச் செயல்படும் என்ற தன்மையைக் கண்டுபிடித்துச் சொல்கின்றான்.

இஞ்சினியரோ அதற்குத் தகுந்த சாதனங்களை உறுப்புக்களை உருவாக்கி அதனைச் செயல்படுத்துகின்றான். மெக்கானிக்கோ (MECHANIC) இதை இந்த வழியில் செய்தால் எடை கூடி இப்படி இருக்குமென்று செய்கின்றான்.

இப்படி அவரவா்கள் எடுக்கக்கூடிய உணா்வுகளுக்கு ஒப்பத்தான் அதை அதைச் செய்கின்றார்கள்

பள்ளியில் சென்று எதனெதன் வழிகளில் பதிவு செய்கின்றீர்களோ நினைவு வரப்படும்பொழுது இது இப்படி வருகின்றது. அதை உணா்ந்து சொல்லமுடியும்.

விஞ்ஞான அடிப்பைடயில் தான் கற்றுணா்ந்த உணா்வின் தன்மையில் எதிலே எண்ணங்கள் செல்கின்றதோ அது நம்மில் பதிவாகின்றது.

அதைப் போன்று தான் அந்த மெய்ஞானிகள் சொன்னதை பாட நிலையாக உபதேச வாயிலாக உங்களுக்குள் மீண்டும் மீண்டும் மீண்டும் குருநாதர் காட்டிய அருள் வழியில் பதிவு செய்கினறேன்.

இதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்த மெய்ஞானிகள் எப்படித் தீமைகளை நீக்கினார்களோ உணர்வுகளை ஒளியாக மாற்றினார்களோ உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலமாக இன்றும் உள்ளார்களோ அந்த இடத்திற்குச் செல்ல முடியும்.

மெய்ஞானிகள் உணர்வை வளர்த்துக் கொண்டால் நீங்கள் மெய்ஞானிகள் ஆகின்றீர்கள்.

October 28, 2017

“அமானுஷ்யமான…” செயல்களைச் செய்தவர்களின் கடைசி நிலைகள்

ஆரம்பக் காலத்தில் குருநாதர் கண்ணின் நினைவாற்றலைக் கொண்டு என்னை ஒரு மனிதனை உற்றுப் பார்க்கச் செய்வார்.

உதாரணமாக ஒருவர் நோயால் உடலுக்குள் அவர் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பார். எனக்கு மேல் வலிக்கிறது என்று சொல்வார்.

குருநாதர் அவர் ஒரு முறைப்படி எனக்குச் சொல்லி இருப்பார். அந்த முறைப்படி அந்த உணர்வின் நினைவு கொண்டு கண்ணிலே பார்ப்பேன்.

பார்த்தால் அந்த உடலுக்குள் மற்ற எதிர் அணுக்கள் இந்த உடலை உருவாக்கிய அணுக்களுடன் இது போராடி அதைக் கொன்று புசிப்பது தெரியும். உடலை உருவாக்கிய அணுக்களை அது தின்பதால் அவருக்கு இங்கே வலி ஏற்படும்.

ஆரம்பக் காலத்தில் வெகு பேருக்குத் தெரியும். இதையெல்லாம் வெளிப்படுத்திக் காட்டினேன்.

உங்கள் உடலில் என்ன இருக்கும் என்று பாருங்கள் என்று காண்பிப்பேன். கை முறிந்திருந்தால் அந்த இடத்தில் என்ன ஆகும்? இவர்கள் உடலில் என்னென்ன உருவாகிறது?

வயிற்றுக்குள் “கேன்சர்…” என்றால் அந்தக் கட்டியினுடைய நிலைகள் எப்படி இருக்கும்? என்றெல்லாம் பார்க்க வைத்தேன். ஏனென்றால்
1.அந்த உணர்வுகள் எப்படி இயங்குகிறது என்று
2.எனக்குக் குருநாதர் காட்டிய அதே அருள் வழியில்
3.எல்லோரையும் பார்க்க வைத்தேன்.

ஆனால் அந்த மாதிரிப் பார்க்கப்படும் போது பெரும்பகுதியானவர்கள் பிறருடைய நோய்களை “என்ன…! ஏது…?” என்று அதிகமாகக் கவர்ந்து விடுவார்கள். பின் அந்த நோயைத்தான் இவர்களுக்குள்ளும் வளர்த்துக் கொள்வார்கள்.

அந்த அருள் ஞானத்தை இவர்கள் வளர்க்கும் நிலைகள் வரவில்லை.

உடலுக்குள் இருப்பதைப் பார்த்ததும் அவர்களுக்கு இ்து பேராச்சர்யமாகப் போகும். பார்த்தவுடனே…
1.உங்கள் குடும்பத்தில் இப்படியெல்லாம் வந்தது… சண்டை வந்தது…
2.இதை நுகர வந்தவுடனே இது எல்லாம் சொல்வார்கள்.
3.கெட்டதெல்லாம் சொல்வார்கள்.
4.நல்லதை இவர்களால் சொல்ல முடியாது.

ஒரு மனிதன் தெய்வங்களைப் பற்றி எதை வணங்கினாரோ இந்த உணர்வலைகள் இது உடலில் செல்களாக அமைகிறது.

1.அதே தெய்வ பக்தி கொண்டு அந்த மனிதன் இறந்து விட்டால்
2.அதே பக்தி கொண்ட இன்னொரு மனிதன் ஏங்கப்படும் போது
3.அவன் (முதல் மனிதன்) இங்கே வந்து தெய்வமாகக் காட்சி அளிப்பான்.

இவையெல்லாம் எப்படி உருவாகிறதென்ற நிலையைத் தெளிவாக்கினதால் ஆரம்பக் காலங்களில் இதெல்லாம் எல்லாருக்கும் அந்தக் காட்சி வந்ததுதான்.

கடைசியில் என்ன செய்கிறார்கள்?

இவர்கள் எந்தெந்த ஆசை கொண்டு தெய்வங்களை வணங்கினார்களோ அந்த மனிதன் இறந்த பிற்பாடு அதே தெய்வ பக்தி கொண்ட மனிதன் ஏங்கினால் அதே ஆன்மா இங்கு வரும்.

இவர் எந்தத் தெய்வத்தை வணங்கினாரோ அதே தெய்வ உணர்வுடன் இறந்த அந்த ஆன்மா கூடி வரும்.

ஆஹா…! நான் காமாட்சியைப் பார்த்தேன்…, மீனாட்சியைப் பார்த்தேன்… எங்கள் குலதெய்வத்தைப் பார்த்தேன்…. முருகனைப் பார்த்தேன்…

அவர்கள் தெய்வத்தை வழிபட்ட உணர்வுகள் கொண்டு அதன் வழிகளிலே பார்ப்பார்கள். அப்போது அந்த உணர்வின் தன்மை
1.அவர் எந்த வேதனைப்பட்டாரோ அதுவும் இவர்களுக்குள் விளையும்.
2.தெய்வம் எனக்குக் காட்சி கொடுத்தது என்று.
3.அவர் எந்தெந்த தெய்வத்தை எண்ணி நோயால் மடிந்தாரோ
4.அந்த மடிந்த உணர்வின் தன்மையும் இங்கு வரும்.

இதைப் பார்க்கலாம். அவருக்கு அருள் ஆடும்.

என்னை இப்படிச் சோதிக்கின்றானே… முருகன். என்னை இப்படிக் காளி சோதிக்கின்றதே… என் குலதெய்வம் என்னைச் சோதிக்கின்றதே… என்று சொல்வார்கள்,

இவைகளெல்லாம் நாம் எடுத்த உணர்வின் தன்மை அணுக்கள் நமக்குள் செல்லாக விளைகின்றது. இறந்தபின் அது அலைகளாகப் படர்கின்றது.

அதே எண்ணம் கொண்டு கவர்ந்த பின் அந்த உருவங்கள் நமக்குள் தெரிகின்றது. இதைப் போன்ற நிலைகளைத்தான் அது உருவாகும்

ஏனென்றால் ஆரம்பக் காலத்தில் தியான வழி அன்பர்களில் பழகப் போகும் போது உலக நிலையை அறிவிக்கச் சில நிலைகளைச் செய்தோம்.

அவர்கள் இதை மேல் ஆசைப்படும் போது ஜோதிடம் சொல்கின்ற மாதிரிச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுடைய உணர்வுகளை எல்லாம் கவர்ந்திடுவார்கள்.

திருநெல்வேலியில் ஒரு இடத்தில் இந்த மாதிரி காட்சிகளைக் காட்டியவுடனே அந்தப் பையனுக்குக் காட்சிகள் தெரிந்தது.

உடனே எனக்குக் கொய்யாப்பழம் வேண்டும் என்று எண்ணுகின்றான். அந்தக் கொய்யாப்பழம் வருகிறது. எனக்குக் காசு வேண்டும் என்று எண்ணுகின்றான். அந்தக் காசு வருகிறது.

அவர்கள் வீட்டிலேயோ அடேயப்பா...! குருநாதர் கொய்யாப்பழம் கொண்டு வந்து கொடுக்கிறார். இதெல்லாம் கொடுக்கிறார் என்று.

அப்பொழுது அவன் இந்த நிலைகளை வளர்த்துக் கொண்ட பின் ஒரு பூனைக் குட்டியை வளர்க்கச் சொல்லிச் சொல்கிறார் குருநாதர் என்றான்.

பூனைக் குட்டி கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.

அதே சமயத்தில் சினிமாவுக்குச் செல்வதற்காகவும் அதைப் போன்ற செலவுக்காகவும் குருநாதர் உங்களிடம் ஐந்து ரூபாய் கேட்கச் சொல்கிறார் என்கிறான்.

கேட்கச் சொல்கிறார் என்றவுடன் கொடுக்கின்றார்கள். அடுத்தாற்போல எண்ணத்தில் கேட்கிறார்கள்…, “என்னடா இப்படித் தியானம்…?! என்று

இவர்கள் “இல்லை…” என்று சொன்னால் போதும்.

உடனே குருநாதர் வந்தார் உங்களைப் பஸ் ஸ்டாப்ண்டில் போய்ப் படுக்கச் சொன்னார் என்று சொல்லிவிட்டான். இது நடந்த நிகழ்ச்சி.

பஸ் நிலையத்தில் போய் படுக்கச் சொன்னார் என்று அந்தப் பையன் சொல்கிறான்.

எதற்காக…? என்று கேட்கிறார்கள்.

இங்கே பல கஷ்டமான நிலைகள் வருகிறது. ஆகையினால் ஒரு பத்து நாட்களுக்குப் பஸ் நிலையத்தில் போய் பாய் தலையணை எடுத்துக் கொண்டு போய்ப் படுத்துத் தூங்க வேண்டும் என்கிறான்.

குருநாதர் கட்டளை இட்டார் என்று அதே மாதிரி அவர்கள் செய்தார்கள்.
  
நான் இங்கிருந்து திருநெல்வேலி யதார்த்தமாகப் போகிறேன். அன்றைக்குக் காலையில் தான் பஸ் நிலையத்தில் இறங்கினேன்.

பாயும் தலையணையும் தூக்கிக் கொண்டு “சாமி…!” என்று கூப்பிட்டார்.

என்ன..? என்றேன்.

குருநாதர் எனக்குக் கட்டளை இட்டார். “பத்து நாட்கள் வீட்டில் படுக்க வேண்டாம்…” என்று. இப்போது நீங்கள் வந்து விட்டீர்கள் பார்த்தீர்களா…! “அதற்காகத் தான் சொல்லி இருப்பார்” போலிருக்கிறது. இது அவர்களுடைய எண்ணம்.

அப்படிச் சொல்லி வந்தவுடனே… “என்ன ஐயா சொல்கிறீர்கள்…!” என்றேன்.

என்ன என்றே தெரியவில்லை…! குருநாதர் நீ போய்ப் படுத்துக்கொள் என்றார். படுத்துக் கொண்டேன். பையனிடம் தானே “குருநாதர்… பேசுகிறார்”.

அதனால் இதெல்லாம் நன்றாக நடக்கும் என்று அவர் சொன்னபடி வந்து விட்டேன். அப்புறம் பாருங்கள்…! அவர் சொன்ன மாதிரி பத்து நாள் இங்கே படுக்கச் சொன்னால் பத்தாவது நாள் நீங்கள் சரியாக வந்து விட்டீர்கள் பாருங்கள்.

“உங்களிடம் ஆசி வாங்குவதற்காக… இப்படி அனுப்பி இருப்பார்…” என்று அவர் அனுமானங்கள் இப்படிச் செயல்படுத்துகினறது.

அப்புறம் அவர்களிடம் நான் என்ன சொல்வது?

இப்படியெல்லாம் அவன் சொல்ல ஆரம்பித்தவுடனே அந்தப் பையன் சிறுகச் சிறுகக் காசு கேட்பதற்கு ஆரம்பித்தான்.

எனக்கு அந்த வேஷ்டி வேண்டும், இந்தக் கடையில் இன்ன மாதிரியான பதார்த்தங்கள் வாங்கி வர வேண்டும் என்று கேட்டான்.

ஓஹோ…! இது குருநாதர் அல்ல போலிருக்கிறது. இவன் குருநாதர் பேரைச் சொல்லிக் கொண்டு அல்லவா காசு கேட்கிறான் என்று அப்புறம்தான் தெரிய வருகின்றது.

இது திருநெல்வேலி அன்பர்களுக்கு வெகு பேருக்கு இது தெரியும்.

இந்த மாதிரிக் காட்சிகளை கொடுக்கும் போது குழந்தைகள் யதார்த்தமாக இருக்கும் போது அந்த உணர்வுகளை அறியச் செய்தது. ஆனால் “இது எப்படி…?” என்று அறியும் நிலைக்குச் செயல்படுத்த முற்பட்டாலும் அதிலே தீமைகள் தான் வருகின்றது.

சிலர் தெய்வம் என்னிடம் பேசுகிறது. அதை வசப்படுத்தியுள்ளேன். என்றெல்லாம் சொல்வார்கள்.

அதைப் பற்றிய உண்மைகளை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறோம்.