பல கோடிச்
சரீரங்களில் தீமைகளிலிருந்து வென்றிடும் உணர்வுகள் கணங்களுக்கு அதிபதியாகி மனிதனாக
உருவாக்கப்பட்டு உலகிலுள்ள அனைத்தையும் அடக்கி ஆளும் சக்தி பெற்றவன் மனிதன் என்று
“அங்குசபாசவா”.
தனக்குள்
எடுத்துக் கொண்ட எண்ணத்தைக் கொண்டு எதையும் அடக்க முடியும் என்று விநாயகர்
தத்துவத்தில் அங்குசத்தைப் போட்டுக் காண்பித்துள்ளளார்கள்.
ஏன் நமக்கு
இது தெரியாமல் போய்விட்டது?
கணபதி
ஹோமம் செய்தால் எல்லாம் செய்வார் என்று ஹோமங்களைச் சொல்லி மந்திரங்களைச் சொல்லி
கணங்களுக்கு அதிபதியாகிவிட்டது என்று சொல்லி விட்டால்
1.நாம்
இறந்த பிற்பாடு மந்திரத்தைச் சொன்னால்
2.மந்திரவாதி
நம்மைக் கைவல்யப்படுத்திக் கொள்வான்.
3.வாடா..,
தம்பி நான் சொல்வதையெல்லாம் கேள்” என்பான்.
அந்தக்
கருவைத் தனக்குள் பெற்ற பின் ஒரு கிளி இருக்கிறது என்றால் அதிலே அந்தக் கருவைத்
தடவி விடுகின்றான்.
“ராஜா..,
வாடா..,” என்கிறான். இந்த உணர்வுகள் அங்கே போனவுடன் அடுத்துச் சீட்டை எடுடா
என்கிறான். உணர்வைப் பார்த்துச் சீட்டை எடுக்கின்றது. இதுவாகிலும் பரவாயில்லை.
ஒரு
எலிக்குள் இந்தக் கரு மையைத் தடவிவிடுகின்றான். வாடா ராஜா, இந்தச் சீட்டை எடுடா
என்கிறான். அந்த எலி போய் சீட்டை எடுக்கின்றது மனித உணர்விலிருந்து எடுத்துத்
தடவிய அந்தக் கரு.
இதைப் போல
மனிதன் தன் ஆசைக்குள் இச்சையின் உணர்வுகளை எடுத்துக் கொண்ட பின் நகைகள் எல்லாம்
பெண்கள் போட்டிருப்பார்கள். ஆண்களும் போட்டிருப்பார்கள்.
1.“அண்ணே..,
வாங்கண்ணே” என்பான், மையைத் தடவுவான்.
2.அப்புறம்
அவர்கள் நிலையையே மறந்துவிடுவார்கள்.
3.கொஞ்ச
நேரத்தில் நகை எல்லாம் கழட்டிக் கொடு என்று சொல்லி எல்லாவற்றையும் வாங்கிச்
சென்றுவிடுவான்.
இன்றைக்கும்
நடக்கின்றது.
மனிதனுக்குள்
ஆசையின் தன்மைகள் பிறரின் மறைவின் தன்மை கொண்டு இயக்கப்படும் பொழுது தன்னை மறந்து
நகைகளைக் கழட்டிக் கொடுப்போர் உண்டு.
இதைப் போல,
மந்திரங்களைச் சொல்லி பல வேலைகளைச் செய்யும் பெரிய சாமியார்களும்
இருக்கின்றார்கள்.
கடத்தல்
சரக்குகளை அங்கே பார்த்தபின் கடத்தலைக் கண்டு பிடிப்போர் வந்தபின் அவர்களின்
நினைவினை மாற்றிவிட்டு இந்தப் பக்கம் கொண்டு வந்துவிடுவார்கள்.
அதற்குக்
கப்பம் வாங்கிக் கொள்வதும் உண்டு. இப்படிப்பட்ட மகான்கள் நிறையப் பேர் உண்டு.
பெரிய
மகான் ஏனென்றால் கடத்தலில் சம்பாரித்துக் கொடுத்தார் மகானை வணங்கி இவர்
சம்பாரித்தேன் என்று அவருக்கும் காசைக் கொடுப்பார்.
நான் தவறு
செய்திருப்பேன். ஆனால் கோர்ட்டில் நான் ஜெயிக்க வேண்டும். அந்த மகான் கொடுத்தார்
நான் ஜெயித்தேன். ஆகையினால் நான் திருடி வந்த பணத்தில் உனக்குக் கொஞ்சம் பங்கு.
இப்படி
மகான்கள் நிறையப் பேர் உண்டு. நான் யாரையும் தவறாகச் சொல்லவில்லை.
மனிதனின்
இச்சையின் உணர்வுகள் நமக்குள் இவ்வாறு வளர்ந்து கொண்டு பேருண்மையின் நிலைகளை
மறைத்துக் கொண்டு நாம் இந்த உடலின் இச்சைக்குத் தான் வாழுகின்றோம்.
1.உயிரால்
வளர்க்கப்பட்ட உணர்வின் தன்மை கொண்டு
2.அது
ஒளியின் சரீரமாக அன்று அடைந்த அந்த அருள் ஞானிகளின் உணர்வைப் பெற
3.நாம்
ஆசைப்படுதல் வேண்டும்.
அதைப்
பற்றுடன் பற்ற வேண்டும். இந்த வாழ்க்கையில் வரும் தீமையின் நிலைகளைப் பற்றற்றதாக
மாற்றுதல் வேண்டும்.
“பற்று
பற்றற்று இரு…” என்று சொன்னார்கள் ஞானிகள்.