ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 29, 2017

சனிக் கோள் புயலை உருவாக்கி அனைத்தையும் கவர்ந்து சென்று பெரும் மழையாகக் கொட்டுவது போல் பேரருள் உணர்வுகளைப் பேரொளியாகப் படரச் செய்து நமக்கு முன் படர்ந்திருக்கும் நச்சுத் தன்மைகளை புயலென அகற்றிடுவோம்

ஒரு புயல் காற்று எப்படி வீசுகின்றதோ அதைப் போல் தான் சனிக்கோளின் இயக்க நிலைகள்.
1.சனிக் கோளிலிருந்து உமிழ்த்திய ஒவ்வொரு வட்டமும்
2.அது முதுமை அடைந்தவுடன் கழன்று வெளியிலே வரும்.
3.அதனின் அலையின் தொடர் எப்படிச் சக்கரமானதோ எதிர் நிலையாகும் பொழுது சுழற்சியாகின்றது.

ஒரு மோட்டார் பொருத்தப்பட்ட பம்பைப் (MOTOR PUMP) போட்டவுடன் (சுழலும்போது) தண்ணீரை எப்படி உறிஞ்சுகின்றதோ இதைப் போல
1.சனிக்கோள் மற்ற உணர்வின் தன்மையைத் தன் இனமான சத்தை அது கவர்ந்து கொள்ளும்போது
2.மற்றதுக்குள் இந்த சுழற்சியின் தன்மை கொண்டு மாற்றங்கள் ஏற்பட்டுவிடும்.

இது தான் “புயல்” என்பது.

ஆகவே அது எந்த அட்சரேகைப் பக்கம் இந்த முழுமையான வட்டச் சுடர்கள் வந்ததோ அந்தப் பகுதியில் இந்தப் புயல் செல்லும். இதை விஞ்ஞான அறிவு கொண்டு இயந்திரத்தின் துணையால் கண்டு கொள்கின்றனர்.

இன்றும் நீங்கள் இதைப் பார்க்கலாம்.

அன்று மெய்ஞானி சனிக் கோளின் இந்த நிலைகள் எவ்வாறு இங்கே மாற்றித் தன் உணர்வின் தன்மை ஒருக்கிணைந்து
1.இதனைச் சுழல் காற்றாக மாற்றி
2.அது மழை மேகங்களை எப்படிச் செயல்படுத்துகின்றது?
3.பெரும் மழையாக எப்படிக் கொட்டுகிறது? என்று தெளிவாக உணர்ந்து கொண்டார்கள்.

அதைப் போலத்தான் மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் அந்த ஞானியின் உணர்வை நமக்குள் எடுத்துப் புயல் போல் பேரருள் பேரொளியைப் பரப்பப்படும் பொழுது
1.தீமை செய்யும் நிலைகள் அனைத்தும் மறைந்து
2.நமக்கு முன் சுழலும் நச்சுத் தன்மைகள் அகன்று ஆன்மா சுத்தமாகின்றது.

ஆகவே அந்த உயர்ந்த உணர்வின் தன்மையை மறைக்கும் “நச்சுத் தன்மையைச் செயலிழக்கச் செய்து” அதற்கு உணவு கிடைக்காதபடி தடைப்படுத்துவதே “கார்த்திகை ஜோதி கார்த்திகை தீபம்”.

மெய்ஞானியின் உணர்வை நமக்குள் செலுத்தி அந்த உணர்வு மிக்க ஆற்றலை நமக்குள் பெருக்கச் செய்வது தான் தீப நாள் - கார்த்திகை ஜோதி என்பது.

இந்த நாளில் முருகனுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆறாவது அறிவின் தன்மை கொண்டு “முருகு…” நாம் மாற்றியமைக்கும் தன்மை கொண்டவர்கள்.

அருள் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்து உணர்வு ஒவ்வொன்றையும் ஒளியின் சுடராக மாற்ற வேண்டும். நம் எண்ணத்தின் நிலைகள் ஒவ்வொன்றும் ஒளிச் சுடராக மாற்றவேண்டும்.

நாம் எந்த எண்ணங்களை எண்ணினாலும் பிறர் குறையின் தன்மைகளைக் கண்டபின் எப்படி வெளிச்சத்தைக் கண்டபின் அங்கிருக்கும் இருள் மறைந்து பொருள் தெரிகின்றதோ இதைப் போல கார்த்திகை ஜோதி அன்று நம்முடைய எண்ணங்கள் நாம் எண்ணும் பொழுதே பிறருடைய தீமைகளை அகற்றிடும் சக்தியாக வளர வேண்டும்.

மற்றவர்கள் சொன்னாலும் அதைப் பிளந்து அந்த உணர்வுக்குள் இருக்கும் “மெய்ப் பொருளைக்” கண்டுணர வேண்டும்.

அந்தத் தீமைகள் இயக்காதபடி அதைப் பிளந்து அந்த அருள் ஞானியின் உணர்வுகள் கொண்டு உண்மையை அறிந்து கொள்வதும் அதற்குத் தகுந்தவாறு நாம் செயல்படும் தன்மைதான் திரு அண்ணாமலை தீபம் என்பது.

முருகன் வீற்றிருக்கும் இடங்கள் அனைத்திலும் கார்த்திகை நந்நாளைக் கொண்டாடுகின்றோம். கார்த்திகை மாதத்தில் தீபங்களை வீடு முழுவதும் பரப்பி வைக்கின்றோம்.

இங்கே தீபங்களைப் பரப்புவதில் பயனில்லை.

இருளை அகற்றிட அந்த பேரருள் பேரொளியான உணர்வை நமக்குள் பரப்ப வேண்டும் என்று நமக்குள் நினைவு கூறும் நாள் தான் கார்த்திகை ஜோதி என்பது.

நமக்குள் இருக்கும் ஒவ்வொரு எண்ணங்களையும் அது தெளிவான நிலைகள் கொண்டு தெளிந்திடும் எண்ணமாகச் செயல்படுத்த வேண்டும் என்ற நிலையைக் காட்டியது தான் கார்த்திகைத் தீபம்.