ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 3, 2017

உபதேசிக்கும் அருள் உணர்வுகளைப் பதிவாக்கி அதை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் உங்களுக்குள் “நல்ல நறுமணமும் உற்சாகமும் வரும்”

உதாரணமாக ஒருவர் நமக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டயிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரை உற்றுப் பார்க்கின்றோம். இதைக் கண்களில் உள்ள கருவிழி நம் எலும்புக்குள் பதிவாக்குகின்றது.

எப்படிச் செல் ஃபோன்களில் பதிவாக்கிய பின் மீண்டும் பதிவான அந்த நம்பர் இன்னார் என்று தெரிகின்றதோ இதைப் போல பதிவாக்கிவிட்டால் அவரை மீண்டும் மீண்டும் நினைவாக்கினால்
1.யார் பேசினார்களோ அவர்களின் நினைவு வருகின்றது.
2.அந்த அலைகளை எடுக்கின்றது.
3.அதை நுகர முடிகின்றது.
4.அதை அறிய முடிகின்றது.
5.நுகர்ந்த அலைகள் இரத்தத்தில் சேர்கின்றது. ஜீவ அணுவாக மாறுகின்றது.

பேசியவர் நமக்குள் கோபத்தையும் ஆத்திரத்தையும் வேதனையையும் தூண்டியிருந்தால் அந்தக் கெட்ட அணுக்கள் நமக்குள் உருவாகின்றது. தீமை செய்யும் தீமையை உருவாக்கும் ஜீவ அணுவை வளர்க்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் தப்புதல் வேண்டுமா இல்லையா...! நம்மை அறியாமல் நாம் தவறே செய்யாமல் வரும் தீமைகளை அகற்ற வேண்டும் அல்லவா.

அதற்காகத்தான் இதைப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்கள் உடல்களில் உள்ள அணுக்களுக்கு உங்கள் கண்ணின் நினைவு கொண்டு (செல்ஃபோனில் புதிதாகப் பதிவு செய்வது போல்) பதியச் செய்தல் வேண்டும்.

ஏனென்றால் கண்ணால் பதியச் செய்யும் பொழுது எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவாக்கிவிடுகின்றது. தீமைகள் வரும் சமயம் துருவ நட்சத்திரத்தை நினைவுக்குக் கொண்டு வந்தால் அது தீமைகளை அகற்றும்.

எப்படிச் செய்ய வேண்டும் என்ற தெளிவான சிந்தனையும் மன பலமும் ஞானமும் கிடைக்கும். தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழ இது உதவும்.

நீங்கள் எல்லாம் அத்தகைய ஆற்றல் பெறவேண்டும் என்பது தான் குருநாதர் எமக்கு இட்ட அருள் பணி.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறவேண்டும்.
2.உங்களை அறியாது சேர்ந்த தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்
3.அந்த அருள் உணர்வு பெறவேண்டும் உலக ஞானம் பெறவேண்டும்
4.இந்த உடலைக் காக்கும் ஞானமும் உலகைக் காக்கும் அந்த அருள் ஞானம் பெறவேண்டும் என்று தான்
5.தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றேன்.

ஒருவர் நம் மீது வெறுப்பாகப் பேசினால் அந்த வெறுப்படைந்தவனின் உணர்வு இயக்குகின்றதோ அதைப் போல நீங்கள் அந்த அருள் ஞானம் பெறவேண்டும் என்று நான் எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் உங்களுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டேயிருக்கும்.

அந்த நேரத்தில் நீங்கள் உங்கள் சிந்தனையை இதைப் போன்று செலுத்தி நஎடுத்தால் நீங்கள் நன்மை பெறும் அருள் சக்திகளைப் பெறலாம்.

என்னமோ ஒரு உற்சாகமாக இருக்கின்றது என்று சொல்வீர்கள். அடுத்து இந்த நினைவு வந்தால் அதை எடுக்கலாம்.

1.சில நேரங்கள் இந்த மாதிரி எண்ணும் பொழுது நல்ல நறுமணங்கள் வரும்.
2.அப்பொழுது இனம் புரியாத ஒரு உற்சாகம் வரும்.
3.அப்பொழுது அன்று சந்தோஷமாக இருக்கும்
4.நம் காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். 

அந்த அருள் சக்திகள் உங்களுக்கு எல்லா நேரமும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்குத்தான் இதைச் செய்கின்றேன்.