ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 7, 2017

“உலகம் கெட்டுக் கிடக்கிறது” என்று சொல்கிறோம் – தூய்மைப்படுத்தும் வழியை அன்றே ஞானிகள் நமக்குக் காட்டியுள்ளார்கள் “விநாயகர் சதுர்த்தி”

வாரத்தில் ஒரு நாளாவது கூட்டுத் தியானம் இருந்து மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஒருக்கிணைந்த வலுவின் எண்ணங்களைப் பாய்ச்சுதல் வேண்டும்.

அவ்வாறு பாய்ச்சப்படும் பொழுது எல்லோரும் ஏகோபித்த நிலைகளில் வெளிப்படுத்தும் இந்த உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
1.அவைகளைச் சக்தி வாய்ந்த உணர்வலைகளாகப் பூமி முழுவதும் படரச் செய்கின்றது.
2.ப்படிப் பரவும் அருள் உணர்வுகள்
3.நம்மிலிருந்து வெளிப்பட்ட தீமைகளை விளைய வைக்கும் உணர்வலைகளைத் "துரத்திச் சென்று.."
4.கடல் அலைகளில் மோதச் செய்கின்றது.
5.பின் கடலுக்குள் ஆழத்திற்குள் அமிழச் செய்துவிடுகின்றது.

இதற்குப் பெயர் தான் விநாயகர் சதுர்த்தி.

விநாயகர் சதுர்த்தி அன்று களி மண்ணால் விநாயகரைச் செய்து அதைப் பூஜித்துவிட்டு அதன் பின் கடலிலோ அல்லது ஆற்றிலோ கரைத்துவிடுகின்றோம்.

இதைத்தான் நாம் ஐதீகம் என்ற நிலைகளில் இங்கே கொண்டாடுகின்றோம்.

நம் வாழ்க்கையில் நாம் பல பல நன்மைகள் செய்திருப்பினும் அதில் நம்மையறியாமலே வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் இதைப் போன்ற உணர்வுகள் நம் உடலுக்குள் விளைந்து விடுகின்றது.

நமக்குள் அவ்வாறு விளைந்ததை நமக்குள் வளராமல் தடுக்கும் நிலை தான் யாம் சொல்லும் இந்தக் கூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம்.

ஒருக்கிணைந்த நிலைகளில் “எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எடுத்து நாம் வெளிப்படுத்தும் இந்த உணர்வலைகள் காற்று மண்டலத்தில் பரவும் பொழுது
1.தீமையான உணர்வுகளுக்கு இங்கே இடமில்லாது
2.அதனின் சக்தியை இழக்கச் செய்துவிடுகின்றோம்.
3.நமக்கு முன் படர்ந்திருக்கும் வெறுப்பு குரோதம் போன்ற தீமையை உருவாக்கும் உணர்வுகள் துரத்தியடிக்கப்படுகின்றது.

ஒரு ரோஜாப்பூவின் அருகில் வேப்ப மரத்தின் சக்தி வாய்ந்த உணர்வலைகள் வந்தாலும் ரோஜாப்பூ தன் மணத்தின் துணை கொண்டு அந்தக் கசப்பான உணர்வைத் தனக்குள் ஏற்றுக் கொள்ளாது ஒதுக்கித் தள்ளும்.

அதைப் போல் கூட்டுத் தியானத்தின் மூலம் வலுவான நிலைகள் கொண்டு எல்லோரும் நலம் பெறவேண்டும் என்ற எண்ணத்தை அனைவரும் ஒருக்கிணைந்து வெளிப்படுத்த வேண்டும்.

நாம் வெளிப்படுத்தும் இந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரவச் செய்து தீமையான உணர்வலைகளைத் துரத்திச் சென்று கடலுக்கடியில் அமிழ்த்தி விடும்.

கடலில் ஏன் அவைகளை அமிழ்த்த வேண்டும்?

1.கடலுக்குள் இருக்கும் ஹைட்ரஜன் - அதற்குள் ஈர்க்கும் காந்த சக்தி அதிகமாக உண்டு
2.கடலில் இருக்கும் நீருக்குக் கனம் ஜாஸ்தி.
3.இங்கே கிணற்று நீருக்கு எடை குறைவு.

ஆகவே கடல் நீருக்குள் இருக்கும் காந்தப் புலனின் ஆற்றல் அதிகம். கடலிலிருந்து தான் ஆதியிலே எல்லாமே உருப்பெற்றது.

அதனின்று வெளிப்பட்ட நிலை தான் அது ஆவியாக மாறி அதனின் துணை கொண்டு தாவர இனங்கள் அது விளைந்தாலும் அத்தகைய நிலைகளிலிருந்து வெளிப்பட்ட அந்த ஹைட்ரஜன்
1.நாம் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் சத்து உப்பாக மாறுகின்றது.
2.து கனம் கொண்ட சத்தாக இருப்பினும் (இதை)
3.அதே இனம் தனக்குள் அதைக் கவர்ந்து கடலுக்குள் அமிழ்த்தி விடுகின்றது.

தனால் பூமியிலிருக்கும் தீமை விளைவிக்கும் உணர்வுகள் குறைகின்து இத்தகைய கூட்டுத் தியானங்களைச் செய்வோம் என்றால் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் “நாம் வாழும் இடத்திலிருந்து... தீமைகளை அகற்ற முடிகின்றது”.