அருள் ஞானிகள் துவைதம்
அத்வைதம் வசிஷ்டாத்வைதம் என்று காட்டியுள்ளார்கள்.
அத்வைதம் என்பது
மறைமுகமாக இருக்கக்கூடியது - கண்ணுக்குப் புலப்படாதது. உதாரணமாக தன் இனமான
மணத்தை (வாசனையை) செடி தனக்குள் உறைய வைத்து செடியாக
உறைந்துவிட்டால் துவைதம்.
இதில் மணம் அத்வைதம். உறைந்த செடி துவைதம்.
எந்தச் சத்தின்
தன்மையை இது கவர்ந்து தனக்குள் எடுத்ததோ அது துவைதமாக உருவமாகின்றது. அதை நாம்
நுகர்ந்தறிந்தால் இந்தச் செடி இன்னது தான் என்றும் அது இன்ன குணம் என்றும்
அறிந்து கொள்ள முடிகின்றது.
வியாசர் துவைதம் அத்வைதம் வசிஷ்டாத்வைதம் இவைகளைப் பற்றித் தெளிவாகக் காட்டியுள்ளார்.
வசிஷ்டர் என்பது
தனக்குள் கவர்ந்து கொள்ளும் சக்தி.
புழுவிலிருந்து
மனிதனாக வரும் வரையிலும் தனக்குள் கவர்ந்து கொண்ட சக்தியின் தன்மை கொண்டு அது
ரிஷியாக நின்று அதனின் உணர்வின் வலுவால் வளர்த்துக் கொண்டு நம்மை மனிதனாக
உருவாக்கிய நிலை.
1.இவ்வாறு
பல பல உடல்களாக மாறி மாறி வந்ததை
2.துவைதமாக
மாற்றிதை வசிஷ்டாத்வைதம் துவைதம் என்று காட்டினார் வியாசர்.
3.எண்ணத்தால்
நாம் எவ்வாறு உருவானோம் என்ற நிலையைக் காட்டுகின்றார்.
4.நம்
உயிரை அரசனாகவும்
5.நமக்குள்
இருக்கும் நல்ல குணங்களை மந்திரிகளாகவும்
6.நமக்குள்
உணர்ச்சிகளைத் தூண்டி வலுகூட்டிக் கொள்ளும் நிலைகளைச் சேனாதிபதிகளாகவும்
7.இந்தச்
சபையில் ஒவ்வொரு எண்ணங்களையும் எண்ணும்போது அதனின் உணர்வின் செயலாக உடலின் இயக்கமாவதைப்
படைகளாகவும் காட்டினார்.
இராஜ நீதியை உருவாக்குவதற்கு எல்லாவற்றையும்
தான் வசியப்படுத்தும் நிலைகள் கொண்டு வருவதை “இராஜரிஷி...
வசிஷ்டர்...” பெயர் வைத்தார்.
வசிஷ்டரும்
அருந்ததியும் என்றால் தனக்குள் கவர்ந்து தன் உணர்வின் சக்தியாகத் தனக்குள் இணைந்து
செயல்படும் சக்தி.
தான் நுகர்ந்த
உணர்வின் தன்மையைத் தனது சக்தியாக இயக்கி மற்றதைத் தன்னுடன் இணைத்து “அது
செயல்படும் சக்தி...” என்று “வசிஷ்டாத்வைதம் துவைதம்” என்று உணர்த்தினார்.
ஆனால் வசிஷ்டர் என்பது
அவர் ஒரு ரிஷி என்ற நிலைகளைத்தான் சொல்கின்றனர்.
1.இந்த
மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை அகற்றி
2.தனக்குள்
இணைந்த நிலைகள் கொண்டு
3.அது
இனணந்திடும் செயலாக வலுக் கொண்ட நிலையாக
4,நமக்குள்
இருக்கும் நிலையை மதித்திடும் நிலையாகத்
5.தனக்குள்
கவர்ந்திடும் சக்தியைத்தான் வசிஷ்டர் என்றார் வியாசர்.
சமஸ்கிருதத்தில்
வசிஷ்டர் என்பது வசி தனக்குள் கவர்ந்திடும் சக்தி கொண்டது. அருந்ததி தான் நுகர்ந்த
உணர்வு தன்னுடன் இணைந்து செயல்படும் சக்தி.
அருந்ததி - இரண்டும்
இரண்டற இணைந்து அது செயல்படுவது போல் அருள் ஞானிகள் தீமைகளை அகற்றிய உணர்வை நமக்குள்
எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
1.ஞானிகளின் உணர்வைக் கவர்ந்திடும் சக்தியாக நுகர்ந்து
2.அருந்ததி அதனுடன் இரண்டற இணைந்து வளர்த்து
3.ஞானிகளின் இயக்கமாக நாம் ஆக வேண்டும் என்பதையே அன்று வியாசர் இவ்வாறு காட்டினார்.