பண்டைய காலத்தில் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்
இந்தப் பூமியிலே விளைந்த மகரிஷிகள் இந்தப் பூமி சூரியனை விட்டு மாறிச் செல்லும் பொழுது
அந்தச் சூரியனையே குறிக்கோளாகக் கொண்டு தன் பார்வையின் நிலைகளை நேரே செலுத்திப் பூமியைத்
திருப்பி விட்டுள்ளார்கள்.
இந்தப் பூமி வட துருவமாக இருந்து அதன் வழியில் விண்வெளியின்
ஆற்றலை இது கவர்ந்து பூமி வளர்ச்சி அடைந்து வந்தது.
அப்படி வந்தாலும் அதிகமாக இந்தத் துருவ நிலைகளில்
அது தனக்குள் கவர்ந்து கொள்ளும் பொழுது
1.துருவத்தின் நிலைகள் எடை கூடி குடை சாயும் நிலைகளில்
2.இப்படிக் கவிழும் தன்மை வரும் பொழுது
3.துருவ மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும்.
4.இத்தகைய மாற்றங்கள் வரப்படும் பொழுது பூமியும்
திசை திருப்பி வரும்.
இதனைத் தன் வலுவான எண்ணங்கள் கொண்டு பண்டைய கால
மகரிஷிகள் இந்தப் பூமியைச் சீர்படுத்தி வந்தனர்.
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா
போற்றி என்று சொல்லும் இந்த அகஸ்தியன் தனக்குள் எடுத்து கொண்ட வலுவின் திறமை கொண்டு
இந்தப் பூமியினைச் சமப்படுத்தி சீராக ஓடச் செய்து தன் நினைவின் அலைகளை மாற்றிச் சென்றவன்.
இதைப் போன்று ஒவ்வொரு காலத்திலேயும் மகரிஷிகள் தோன்றி
இதைச் சீர்படும் நிலைகளுக்குச் செய்தார்கள்.
இன்று விஞ்ஞான அறிவால் அணுகுண்டும் ஹைட்ரஜன் குண்டும்
நாம் செயல்படுத்தும் நிலைகளிலிருந்து அது வெடித்து கதிரியக்கச் சக்தி பூமியின் நடுமையம்
சென்றுவிட்டது.
அதனால் வெப்பங்கள் அதிகமாகி துருவப் பகுதியில் உள்ள
பனிப்பாறைகள் கரைந்து நீர் நிலைகள் பெருகி நிலம் குறையும் நிலைக்கு வந்துவிட்டது விஞ்ஞான
அறிவால்.
அன்று மெய்ஞானிகள் தன் உணர்வின் எண்ணம் கொண்டு பூமியைச்
சீரான பாதையில் செலுத்தச் செய்து இந்தப் பூமியை மக்கள் வாழும் நிலைக்கு உருவாக்கினார்கள்.
பூமியில் பனிப்புயல்கள் அதிகமாகப் போகும் பொழுது
அந்தப் பனிப்புயலை மாற்றுவதற்காகச் சூரியனின் வெப்பத் தணலை அதற்கு நேர் திசையாக மாற்றியமைத்தான்.
இந்த நாட்டின் நிலைகளை ஒழுங்குபடுத்தும் நிலையாக வந்தவன் அகஸ்தியன்.
அதனால் தான் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும்
இறைவா போற்றி என்று அவனை நாம் போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.
தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் தனது ஆற்றல்மிக்க
இச்சக்தியைத் தான் கூர்மையான நிலைகள் கொண்டு சூரியனை நேர் பார்வையில் வைத்துத் தன்
வலுவின் நிலைகள் கொண்டு பூமியைத் திசை மாற்றிச் சம நிலைப்படுத்தி இங்கே வாழும் மக்களைச்
சீர்படுத்தும் நிலைகளுக்கு அவனின் ஆற்றலைப் பயன்படுத்தினான்.
இந்த வெப்பத்தின் தணல் அதிகமாகப்படும்பொழுது அதனின்
வழியில் பூமியின் திசையைத் திருப்பும் பொழுது இந்தப் பூமி கவிழாதபடி அது சீரான நிலைகள்
இயங்கி மக்கள் வாழும் நிலைகள் அடைகின்றது.
இவ்வாறு செய்தான் அன்று அகஸ்தியன்.
இன்றைய விஞ்ஞான உலகமோ ஒரு பகுதியில் நேர் வரிசையில்
அணுகுண்டுகளை வெடிக்கச் செய்தால் இது சூரியனிலிருந்து வரக்கூடிய காந்தப் புயலின் தன்மையைத்
தடுத்துப் பூமியைத் திசை மாற்றிவிடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்,
நாட்டுக்கு நாடு எதிர் நிலைகள் ஏற்படும் நிலைகள்
இதனை மாற்றிடும் நிலையாகவும் இன்று உள்ளனர்.
அதனால் எதிர் மறையான நிலைகள் இன்று ரஷ்யாவின் செயல்கள்
பலவீனமடைந்ததால் இன்று அமெரிக்கா ஒரு தலைப்பட்சமாக உலகை ஆட்சி புரிய வேண்டும்…, முடியும்
என்று தனக்கு நிகர் எதுவும் இல்லை என்று ஆணவம் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
மக்கள் மத்தியிலே அவன் தூவும் விஷத் தன்மைகள் ஒவ்வொரு
நாட்டையும் அது நஞ்சு கொண்ட உணர்வாகச் சென்று தாவர இனங்கள் வாழாத நிலையும் தாவர இனத்தை
அழித்திடும் நஞ்சு கொண்ட விஷக் கிருமிகளை உருவாக்கி ஊடுருவச் செய்துவிட்டனர்.
1.அதன் மூலம் ஒவ்வொரு நாட்டிலேயும் பஞ்சத்தை ஏற்படுத்தச்
செய்து
2.மக்களை வீழ்த்தச் செய்து மக்கள் மடிந்த பின்
3.தன் இனமான மக்களை உருவாக்க முடியும் என்று
4.இந்தத் தன்னம்பிக்கையில் விஞ்ஞான அறிவில் இப்படிச்
சென்று கொண்டிருக்கின்றார்கள்.
இதைப் போன்று நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில்
நம் பூமியும் செயலிழக்கும் தன்மை வந்துவிட்டது. விஞ்ஞானிகள் இந்தப் பூமியை மனிதர்கள்
வாழ முடியாத நிலைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.
அன்று அகஸ்தியனோ இந்தப் பூமி குடை சாயும் நிலைகளிலிருந்து
மக்களைக் காத்திடும் நிலையாகத் தன் உணர்வின் அலைகளைச் சூரியனை எதிர் நோக்கித் தன் ஆற்றல்மிக்க
நிலைகள் கொண்டு பூமியைத் திசை மாற்றினான்.
1.நிலப்பரப்பை அதிகமாக்கினான்
2.பஞ்சமற்ற நிலைகள் தாவர இனங்கள் உருப்பெறச் செய்தான்
3.தாவர இனங்களை வளர்த்திடும் நிலங்களை அவன் பெருக்கச்
செய்தான்.
இந்தப் பூமியில் வாழும் நாம் ஒவ்வொருவரும் அந்த
மெய்ஞானியான அகஸ்தியனைப் போன்று விஞ்ஞான விளைவுகளிலிருந்து மீட்டு மனிதர்கள் வாழக்
கூடிய பூமியாக மாற்ற வேண்டும் என்று உறுதி கொள்வோம்.
நம்மால் நிச்சயம் முடியும்.