ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 20, 2017

“கார்த்திகை ஜோதி” – திரு அண்ணாமலை

கார்த்திகை ஜோதி (தீபம்) அன்று பக்தி மார்க்கத்தில் அந்த ஜோதியைப் பார்த்தால் நமக்குப் புனிதம் என்று ஐதீகப்படி எண்ணுவார்கள்.

ஆனால் விண்ணுலகம் சென்ற அருள் ஞானிகளின் உணர்வை… “நாம் பார்க்க வேண்டும்”. இருளை நீக்கிய அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் பெறவேண்டும்.

அருள் ஞானிகளின் அருள் சக்தியால் நம்மை அறியாது வந்த இருளைப் பிளந்து நமக்குள் அந்த ஒளியின் சுடரைக் காணும் நிலைகளை எண்ணி ஏங்கும் நந்நாளைத் தான் “கார்த்திகை தீபம்” என்று வைத்தது.

திருவண்ணாமலையில் “திரு அண்ணாமலை” என்ற நிலைகள் அங்கே காட்டப்பட்டது.
1.இந்த உடலின் தன்மையில் உணர்வின் தன்மை கொண்டு
2.உயிர் உச்சியிலே நின்று இயக்குகின்றான் “திரு அண்ணாமலை”
3.நாம் மேல் நோக்கிப் பார்க்கும் உணர்வின் தன்மையை
4.அந்த ஜோதிச் சுடர் போல் நம் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றவேண்டும்.
5.நமக்குள் ஜோதியை உருவாக்க வேண்டும் என்று சொன்னால்…
6.நாம் இங்கிருந்து எங்கேயோ போய்க் கொண்டிருக்கின்றோம்.

நம் ஆசை இந்த உடலின் இச்சைக்குத்தான் செயல்படுகிறோமே தவிர  வேறு எதுவும் இல்லை.

அருள் ஒளியின் சுடராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நன்னாளில் மகிழ்ச்சி பெறும் உணர்வைப் பெற்று, பகைமைகள் மறந்து ஒற்றுமை ஏற்படச் செய்யும் நிலைக்காக இருளை அகற்றும் நாள் என்று ஞானிகள் குறித்தார்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனவரது உடல்களிலும் படரவேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ஈசன் வீற்றிருக்கும் ஒவ்வொரு உடலிகளிலும் படரவேண்டும் என்று எண்ணும்படிச் செய்தார்கள்.

இருள் அகற்றும் நிலைகளை நாம் ஒற்றுமையாக இருந்து தியானித்து  அனைவரும் நலம் பெற வேண்டும். வளம் பெறவேண்டும் அவர்கள் உடலில் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்தினை எல்லோரும் சேர்ந்து எடுத்துப் பேரொளியாக உருவாக்கும் நிலைகளுக்குச் செய்தார்கள் ஞானிகள்.

இருண்ட உணர்வின் தன்மையைத் துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளி கொண்டு அனைவருடைய உணர்வுகளும் ஒளி பெறவேண்டும் என்று நாம் எண்ணும் போது
1.நமக்குள் ஒளி பெறுகின்றது.
2.ஒளியின் உணர்வின் அணுக்களாக மாற்றுகின்றது.
3.இருளை அகற்றிப் பொருளைக் காட்டுகின்றது.

நம் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை நாம் மாற்றியமைக்கும் திறனும் பெறுகின்றோம். இதுதான் “ஜோதி தரிசனம்” (கார்த்திகை தீபம்) என்பது.

கார்த்திகை தீபம் நம் வீட்டு வாசற்படியில் வைப்பது போல நம் உணர்வின் தன்மையை ஆறாவது அறிவு கார்த்திகேயா என்று அந்த அருள் ஓளியின் உணர்வை  உங்களுக்குள் வளர்த்துக்கொண்டால் இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றும் நன்னாளாக இது அமைகின்றது.

நம்மை உருவாக்கிய முன்னோர்கள் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்தக் குலதெய்வங்களின் உயிரான்மாக்களை அவருடைய உணர்வின் தன்மை நம் உயிரான நிலைகள் கொண்டு ஒன்றி பிறவியில்லா நிலைகள் அடைந்த அந்த ஞானிகளின் உணர்வுடன் அங்கே இணைத்தல் வேண்டும்.

1.அந்த ஜோதியின் சுடராக விளைய வேண்டும் என்று
2.மூதாதையர்களின் உயிரான்மாக்களை அந்த ஒளியின் சுடராக மாற்றப்படும் பொழுது
3.அதனின் உணர்வை நாம் நுகரும் ஆற்றலே பெறுகின்றோம்.

சாஸ்திரங்கள் இவ்வளவு தெளிவாக எடுத்துரைத்தாலும் அதை ஐதீகம் என்ற நிலைகள் கொண்டு இவர்கள் காட்டும் நெருப்பைப் பார்த்தால்…, “பாப விமோசனம்” என்று சாதாரண நிலைகளில்தான் நாம் செல்கின்றோம்.

உண்மையான ஜோதியின் சுடரைக் கண் கொண்டு
1.”உயிரான திரு”
2.உடலின் உச்சியில் அண்ணாமலையான உயிரை எண்ணிடல் வேண்டும்.

அந்த உணர்வுடன் விண்ணை நோக்கி ஏகி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
2.அந்த ஒளியின் சுடராக நாம் என்றுமே ஆக வேண்டும் என்று

3.நினைவு கூறும் நந்நாள் தான் “கார்த்திகை ஜோதி”.