ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 5, 2017

மற்றவர்களுக்காக நாம் ஏன் தியானிக்க வேண்டும்...? அது அவசியமா...?

சில பேர் சொல்வார்கள். எனக்காக வேண்டி நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். “எனக்கு நன்றாக வேண்டும்…” என்று நீங்கள் செய்யுங்கள் என்று அடுத்தவர்களிடம் சொல்வார்கள்.

1.நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று
2.பிரார்த்தனையோ தியானமோ நான் செய்தால்
3.உங்கள் தீமைகளோ வேதனைகளோ “எனக்குள் வராது”.

அது தான் உண்மை.

ஆனால்
1.அந்தச் சக்தியைப் பெறவேண்டும் என்று
2.நீங்கள் எண்ணினால்தான்
3.நீங்கள் மகரிஷிகளின் அருளை நுகர்ந்தால்தான்
4.நீங்கள் அதைக் கவர்ந்தால்தான்
4.உங்கள் உயிர் உங்களுக்குள் அந்த ஆற்றலைப் பெறச் செய்யும்.

நீங்கள் நுகர்ந்த உணர்வை “உயிர்” உங்கள் உடலுக்குள் அணுவாக உருவாக்கும் கருவாக்கி பின் அணுவாக்கி அது தன் இனத்தைப் பெருக்கும் நிலையில் அந்த ஆற்றல் உங்களுக்குள் பெருகும்.

ஏனென்றால் உங்கள் பசிக்கு நீங்கள்தான் சாப்பிட வேண்டுமே தவிர உங்களை எண்ணி நான் உணவை உட்கொண்டால் எனக்குத்தான் சத்து சேரும்.

நீங்கள் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆகவே நான் எண்ணியது போன்று
1.மகரிஷிகளின் அருள் சக்தி மற்றவர்கள் பெறவேண்டும் என்று நீங்களும் எண்ணினால்
2.பிறரின் தீமைகளோ துயரங்களோ உங்களுக்குள் வராது.

மற்றவர்கள் அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணும்போதெல்லாம் உங்களுக்குள் அந்த ஆற்றல் கூடிக் கொண்டே வரும்.

மற்றவர்களும் அதை எண்ணினால் அவர்களும் அந்த ஆற்றலைப் பெறுவார்கள். ஏனென்றால்,
1.உங்கள் உயிரும் தவறு செய்யவில்லை,
2.உங்கள் உடலும் தவறு செய்யவில்லை
3.நீங்கள் “நுகரும் உணர்வுதான்” தவறுக்குக் காரணம்.

அருள் சக்திகளை அனைவரும் நுகர வேண்டும்.
அருள் உணர்வுகள் அங்கே இயக்கமாக வேண்டும்.
அருள் ஞானம் பெருக வேண்டும்.
அருள் ஞானிகள் உருவாக வேண்டும்
அருள் உலகமாக மாற வேண்டும்

நீங்கள் அனைவரும் அவ்வாறு வளர வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.