ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 18, 2017

“நம்முடைய பிரார்த்தனை” எதுவாக இருக்க வேண்டும்? - குரு எமக்குச் சொல்லிக் கொடுத்த பிரார்த்தனை எது?

பித்தரைப் போன்று இருந்த குருநாதர் பித்தரைப் போன்று இயங்கும்  (இந்த உலக) நிலைகளிகலிருந்து மீண்டிட எமக்குத் தெளிவாக உபதேசித்தார்.

1.ஒவ்வொரு மனிதரின் உயிரையும் கடவுளாக எண்ணு
2.அவன் கட்டிய கோட்டை அந்த உடல் என்ற நிலைகளில் ஆலயமாக மதி
3.அவருக்குள் இருக்கும் நல்ல குணங்களைத் தெய்வங்களாக நீ மதி
4.அவருக்குள் இருக்கும் நல்ல உணர்வை ஈர்க்கும் நிலையை (காந்த சக்தி) “மகாலட்சுமி” என்று மதி
5.மகாலட்சுமி என்றாலும் அது கவர்ந்தாலும் அந்த உடலுக்குள் சேர்த்து ஞானங்களாக வளர்ந்தது “மகா சரஸ்வதி” சர்வத்தையும் அறிந்து கொள்ளும் மனித உடலுக்குள் இருக்கும் இந்த நிலையை அதை நீ மதி
6.தீமைகளை அகற்றி விண்ணுலகம் சென்ற அந்த அருள் ஞானியின் உணர்வுகளை ஒவ்வொரு மனிதனுக்குள் சேர்க்க வேண்டும்.
7.அந்த உணர்வுகள் அங்கே தீமையற்றதாக வளர வேண்டும்… இந்த உணர்வின் தன்மை ஓங்கி வளர்ந்திட வேண்டும் என்று உன் எண்ணத்திற்குள் நீ சேர்த்துவிடு.
8.உயிரைக் கடவுளாக மதித்து அந்த ஈசன் வீற்றிருக்கும் ஒவ்வொரு ஆலயமும் புனிதமாக வேண்டும் என்று எண்ணி அதை நீ பிரார்த்தனை செய்.
9.அதனை நீ தியானி என்றார்.

அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் சேர்ப்பித்து உங்களுக்குள் வீற்றிருக்கும் ஈசனுக்குத் துன்பமற்ற நிலைகள் கொண்டு மகிழ்ந்து இயக்கும் உணர்வாக நீங்கள் எண்ணும் எண்ணம் அந்த மகிழ்ச்சியான உணர்வின் அபிஷேகமாக நடக்க வேண்டும்.

நீங்கள் எண்ணிய எண்ணங்கள் எல்லாம் இனிமை கொண்டதாகவும் மலரைப் போன்ற மகிழ்ச்சி கொண்ட நல்ல நறுமணம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

இந்த எண்ணத்தின் நிலைகள் உங்களுக்குள் பதிவாக வேண்டும். அப்பொழுது இந்த எண்ணமே
1.உங்கள் உயிரான ஈசனுக்கு நல்லது செய்விக்கும் நிலையும்
2.அவன் அருள் நீங்கள் பெறும் நிலையாகவும் அமையும்.

மனிதர்களான அனைவருக்கும் அருள் ஞானிகளின் உணர்வுகளைச் சேர்ப்பிக்கும் வண்ணமாக எல்லா மனிதர்களுடைய உணர்வுகளிலேயும் இயக்கும் உயிரைக் கடவுள் என நீ மதித்து நட என்றார் குருநாதர்

அவர் காட்டிய அருள் வழியில் அந்த அருளாற்றல்களை நீங்கள் பெறவேண்டும் அருள் ஞானிகளின் ஆற்றலை நீங்கள் பெறவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

அதனின் துணை கொண்டு உங்கள் குலதெய்வங்களான முன்னோர்களை விண் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் மூதாதையர்கள் உங்களை வளர்க்க எத்தனையோ வேதனைப்பட்டிருப்பார்கள். அதன் வழியில் வேதனையான உணர்வு கொண்டு அந்த உடலை இழந்திருப்பார்கள்.

அந்த உடலுக்குள் விளைய வைத்த வேதனையான உணர்வுகள் உயிருடன் ஒன்றி உயிருடன் வேதனையாக விளைந்து கொண்டிருக்கும் அந்த உயிரான்மாக்களை நீங்கள் விண்ணுலகம் செலுத்த வேண்டும்.

இது தலையாகக் கடமையாகும்.

1.உங்கள் குலதெய்வங்களின் உயிராத்மாக்களைப் புனிதப்படுத்தி
2.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையச் செய்து
3.என்றென்றும் அவர்கள் தீமையற்ற நிலைகள் கொண்டு
4.ஒளியின் சுடராக ஒளியின் சரீரமாக நிலைத்திருக்கும்படி நீங்கள் செய்ய வேண்டும்.
5.அவர்களை விண் செலுத்தும் அந்த ஆற்றல் நீங்கள் பெறவேண்டும் என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களைப் பிரார்த்திக்கின்றேன்.

 உங்கள் முன்னோர்கள் மூதாதையர்களை நீங்கள் விண் செலுத்தும் பொழுது அதனின் துணை கொண்டு தீமையற்ற நிலையாக உங்கள் உணர்வுகள் விளைந்து “என்றென்றும்… அழியா ஒளிச் சரீரம் நீங்கள் பெறவேண்டும்...” என்று பிரார்த்திக்கின்றேன்.