இது வரையிலும்
உபதேசித்த உணர்வின் தன்மை கொண்டு நம் குரு அருள் அது உணர்த்தியது. ஏனென்றால்
1.நான் பேசுகின்றேன் என்று யாரும் எண்ணிவிடாதீர்கள்.
2.மகரிஷிகளின் உணர்வலைகளே
3.அந்த உணர்வின் ஒலிகளை அது எழுப்பிக் கொண்டுள்ளது,
நாடாக்களில் “காந்த ஊசியின்…” நிலைகள் கொண்டு எப்படிப்
பதிவு செய்து கொள்கின்றோமோ மீண்டும் அதை இயக்கினால் பதிவானது மீண்டும் பேசுகின்றதோ
அதைப் போல
1.நமது குரு அருள் எனக்குள் பதிந்த நிலைகளே பேசுகின்றது.
2.அவர் (எனக்குள்) உள் வந்து அல்ல.
சிலர் என்ன நினைக்கின்றார்கள்…? குருநாதர் என் உடலுக்குள்
வந்து செயல்படுகின்றார் என்று எண்ணுகிறார்கள்.
அவர் என்ன…! இங்கே நரக லோகத்திற்குள்ளேயா வருவார்…!
அவர் உயர்ந்த நிலை பெற்றதை எனக்குள் பதிவாக்கினார்.
பதிவைத்தான் மீண்டும் அதை நினைவாக்கி அந்த உணர்வின் தன்மை நீங்கள் பெறவேண்டும் என்று
இதைச் செய்கின்றேன்.
அவர் உடலை விட்டு அகன்ற பின் ஒளியின் நிலைகள் பெறவேண்டும்
என்றார். ஒளியின் நிலைகள் பெறும் உணர்வின் தன்மை எனக்குள் நாடாக்களில் பதிவு செய்தது
போல் என் உடலுக்குள் அதை ஊழ்வினையாகப் பதிவு செய்து அதை நினைக்கும் பொழுது அது வினைக்கு
நாயகனாக இயங்குகின்றது.
1.நானும் பெறுகின்றேன் உங்களையும் பெறச் செய்கின்றேன்.
2.இது தான் இதில் உள்ள விஷயம்.
இந்த உணர்வுகள் பதிந்த உணர்வுகள் அவர் கண்டுணர்ந்த
உணர்வுகள்தான் “இங்கே இசையாக…” மாறுகின்றது.
ஆக நான் உங்களிடம் பேசுகின்றேன் என்றால் அந்த அருள்
ஞானத்தை எனக்குள் அடக்கி வைத்துவிட்டால் நுகரும் தன்மையே இல்லை.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டிய நிலைகள்
1, 2, 3 என்ற படி வரிசையில் தான் அவர் தொடச் சொன்னார்.
அந்த உணர்வின் தன்மை அந்த இசையை அவர் எந்த வழியில்
பதித்தாரோ அந்த உணர்வின் தன்மை தான் இயக்கப்படும் பொழுது நானும் பெறுகின்றேன் உங்களைப்
பெறும்படியும் செய்கின்றேன்.
“இவ்வளவு தான்….”
அதில் பெறும்படி செய்த
1.யார் ஒருவர் பெற்று
2.அதில் நீங்கள் மகிழ்கின்றீர்களோ
3.அந்தப் பேரானந்தத்தை நீ நுகரு.., என்றார்
4.அந்த ஆனந்த நிலைகள் உனக்குள் வளரும் என்று சொன்னார்.
இதைக் கேட்டுணர்ந்தோர்… படிப்போர்… இதை நீங்கள்
வளர்த்துக் கொண்டால் உங்களுக்குள் அவ்வாறு பதிந்த நிலைகள் மீண்டும் நினைவுக்கு வரும்
பொழுது இது (குருநாதர் கண்டுணர்ந்தது அனைத்தும்) வரும்.
1.நீங்களும் நுகர்கின்றீர்கள்
2.சொல்லைக் கேட்போர் வழிகளில் அவருக்கும் உணவாகக்
கிடைக்கின்றது
3.அவர்களும் மகிழும் தன்மை பெறுகின்றார்கள்.
என்னைக் குருநாதர் காடு மேடெல்லாம் பல காலம் அலையச்
செய்து அப்பொழுது அங்கே எனக்குள் ஆழப் பதிந்த நிலைகள் “கூர்ந்து கவனித்த உணர்வே… எனக்குள்
பதிவானது”.
அவரிடம் எல்லாம் “சரி…” என்று சொல்லிவிட்டு “காசுக்காக
வேண்டி என் எண்ணத்தை இணைத்திருந்தேன்…,” என்றால்
1.காசு பெறும் தன்மை தான் வந்திருக்கும் இந்த உடலுக்கு.
2.மெய்ஞானத்தை நான் பெறும் தகுதியும் மற்றவர்களைப்
பெறச் செய்யும் நிலையும் வந்திருக்காது.