ஞானிகளால்
உருவாக்கப்பட்டது தான் நாம் காணும் ஆலயங்கள் அனைத்துமே.
அங்கே அமைக்கப்பட்டிருக்கும்
தெய்வத்தின் நிலைகளைக் காவியமாகத் தீட்டி இந்தக் குணமான இந்தத் தெய்வம் நமக்கு
நன்மை செய்யும் என்று எழுதியுள்ளார்கள்.
ஞானிகள் உருவாக்கிய
ஆலயத்தில் “ஓ..ம்” என்ற பிரணவ மந்திரமும் உண்டு.
அங்கிருக்கும் சிலையை
நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது அந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெறவேண்டும்
இந்த உண்மைகளை உணர்த்திய மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று
எண்ணும்படி செய்தார்கள்.
யாகத் தீயில் பல
பொருள்களைப் போட்டு நெய்யை ஊற்றித்தான் எரிப்பார்கள். இன்று யாகத்தில் நெய்யை
ஊற்றுவதற்குத்தான் நாம் பழகியிருக்கின்றோம். நெருப்பு எது...? நெய் எது...? என்று
யாரும் சொல்லவில்லை.
பாலிலிருந்து கடைந்து
எடுத்தது தான் நெய். அதனின் சத்தை வடிக்கச் செய்யும்போது அது வருகின்றது.
அதே சமயத்தில் பால் பிருத்துவிட்டால்
நெய் காணாமல் போய்விடும்.
பாலுடன் இணைந்த நிலைகள்
கொண்டு அதைக் கொதிக்க வைத்து ஆற வைத்தால் பாலுக்குள் இருக்கும் அந்த நெய்யின்
தன்மை தயிராக உறைந்து தயிருக்குள் மிதந்து நெய்யாக மலர்கின்றது.
ஆனால் பாலில் சிறிது
உப்பைப் போட்டால் பிருத்துவிட்டால் நெய்யை அதிலிருந்து பிரிக்க முடியாது. அது
உறைந்துவிடுகின்றது அல்லது கெட்டுவிடுகின்றது.
1.மனித நிலைகளில் இருந்து
மிகச் சக்தி வாய்ந்த உணர்வின் தன்மையை
2.நெய்யாக மாற்றிச்
சென்றவர்கள் மகரிஷிகள்.
3.பாலிலிருந்து வடித்து
அவ்வாறு ஒருக்கிணைந்த “அந்த நெய்யே - மகரிஷிகள்”.
சாதாரண மக்களும் அந்தத்
தெய்வச் சிலையைப் பார்த்தால் அதை எண்ணத்தால் அந்தக் குணத்தைப் பெற்று அந்தத்
தெய்வமாக அவர்கள் ஆக வேண்டும் என்பதற்குத்தான் ஆலயங்களை அமைத்தார்கள் மகரிஷிகள்.
நாம் அந்தத் தெய்வத்தை
(மகரிஷிகளை) எண்ணும் பொழுது
1.தெய்வ குணத்தை நாங்கள்
பெறவேண்டும்.
2.இந்த உண்மையை உணர்த்திய
மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்.
3.தெய்வத்தின் மீது
போடப்பட்டிருக்கும் மலரின் மணம் நாங்கள் பெறவேண்டும்
4.அது எங்கள் உடல்
முழுவதும் படரவேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல்
வேண்டும்.
5.நாங்கள்
பார்ப்போருக்கெல்லாம் இந்த மலரைப் போன்ற நறுமணமும் மகிழ்ந்து வாழும் அருள்
சக்தியும் மகரிஷிகளின் அருள் சக்தியும் பெறவேண்டும்.
6.அவர்கள் குடும்பங்களில்
மன பலம் பெறவேண்டும் உடல் நலம் பெறவேண்டும்
7.அவர்கள் வாழ்க்கையில்
உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
இந்தக் குணத்தை எடுத்து
நம் உயிரான நெருப்பில் இட்டு உணர்வின் எண்ண அலைகளாகப் பரப்பப்படும் பொழுது நம்
உடலிலே அத்தகைய உணர்வின் சத்து (நெய்யாக) விளைகின்றது.
இவ்வாறு விளையச் செய்தால்
நாமும் அந்த மகரிஷிகளைப் போன்று தெய்வீக நிலை அடையலாம். ஆலயங்களில்
காட்டப்பட்டுள்ள உண்மை நிலை இது தான்.