ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 1, 2017

ஒரு சிறு சுவிட்ச் (ELECTRONIC CONTROL) மூலம் பெரிய விமானத்தையே சீராக இயக்குகின்றார்கள் விஞ்ஞானிகள் – ஏன்..., நாம் நமக்குள் வரும் தீமைகளைத் தடுத்து அதிலிருந்து நம்மைச் சீர்படுத்த முடியாதா...!

நம் வாழ்க்கையில் காலையில் எழுகின்றோம்.

எழுந்திருக்கும் பொழுதே எப்படியும் (உதாரணமாக) இந்தக் காரியத்தில் ஜெயிக்க வேண்டும் என்ற ஆர்வமும் கட்டாயமும் இருந்தால் உடனே உடல் நிலை எப்படி இருந்தாலும் அதைச் சரிக்கட்டி எப்படியோ அந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கின்றோம். வெற்றியும் அடைகின்றோம்

ஆனால் அதிலே கொஞ்சம் சோர்வடைந்துவிட்டால் என்ன ஆகிறது?

அது மிகவும் முக்கியமான காரியாமாக இருந்தாலும் கூட.. “கிடக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம்” என்று விட்டுவிடுகின்றோம்.

இதே மாதிரித்தான் மனிதனுடைய உணர்வுகளில் சில நேரங்களில் தொழிலோ அல்லது வியாபாரத்திலோ இந்த உணர்வுகள் நாம் அடுத்தடுத்து வேதனை வெறுப்பு சஞ்சலம் சங்கடம் என்ற உணர்வுகள் பட்டால்
1.நாம் தொழிலையே சீராகக் கவனிக்க முடியாது போய்விடுகின்றது.
2.அதனால் நஷ்டமும் ஏற்பட்டுவிடுகின்றது.
3.அடுத்து வேதனைப்படும் பொழுது நம் உடலில் நோயாகவும் மாறிவிடுகின்றது.
4.இதையெல்லாம் என்றைக்குத் துடைப்பது?

எத்தனையோ உடலில் தீமைகளை நீக்கி நீக்கி தீமைகளை நீக்கக்கூடிய உடலாக அமைத்து தீமையை நீக்கும் சக்தி ஆறாவது அறிவு பெற்றுள்ளோம். அதனின் அறிவாகத் தெரிந்து
1.தீமைகளை நீக்கி நல்லதை உருவாக்கக்கூடிய இந்த உடலைக் கொடுத்தும்
2.நாம் தவறு செய்தோம் என்றால் எங்கே போவோம்?

அதற்காகத்தான் நம் குருநாதர் கூறிய அருள் வழியில் அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெறவேண்டும் என்று ஒரு பத்தும் நிமிடமாவது தியானிக்கச் சொல்வது.

ஏனென்றால் இன்று விஞ்ஞானம் எலெக்ட்ரானிக் முறைப்படி - ஒரு உணர்வின் அழுத்தத்தைக் கொண்டு தீமைகள் வராதபடி தடுக்கும் நிலையாக இதை நிரூபித்துக் காட்டுகின்றது.

அந்த எலெக்ட்ரானிக்கை வைத்து என்னென்னமோ வேலைகளைச் செய்கின்றார்கள். எலெக்ட்ரானிக் முறைப்படி சிறு சுவிட்சுகளைப் போட்டு வைத்துவிட்டால்
1.ஓரு பெரிய விமானத்தையே அது சீர்படுத்துகின்றது.
2.எதிர் நிலை வந்தால் விலகிச் செல்கிறது.
3.இந்த ஊர் வருகின்றது என்றால் (காற்றிலே அதை நுகர்ந்து) இன்ன ஊரில் அந்த இடத்தில் விபத்து வருகிறது
4.காற்றில் அலைகள் மாறுகின்றது என்றால் அது உடனே மாற்றியமைக்கின்றது.
5.அவ்வளவு பெரிய இயந்திரத்தைச் சீராக இயக்குகின்றார்கள்.

நூற்றுக்கணக்கானோரை ஏற்றிக் கொண்டு விமானம் சென்று கொண்டிருந்தாலும் அந்தச் சிறு எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் மூலமாக மாற்றியமைத்துக் கொள்கின்றனர்.

எதிரிலிருந்து வரக்கூடிய விமானத்திலிருந்தும் தப்பிக்கின்றது (விலகிச் செல்கிறது)

அதே சமயத்தில் விமானம் கீழே இறங்குவதற்காகச் செல்லப்படும் பொழுது எதிர் நிலையான நிலைகள் ஒரு உயரமான கோபுரமோ அல்லது ஏதாவது ஒரு வயரோ அல்லது மரங்களோ விமானம் போகும் பாதையில் வந்ததென்றால்
1.அதிலே மோதாதபடி தன்னாலே விமானத்தை மேலே பாதுகாப்பாக ஏற்றிக் கொடுக்கின்றது.
2.அந்த அளவிற்குச் செய்து வைத்துள்ளார்கள் இன்று விஞ்ஞானிகள்.

அதைப் போன்று தான் அகஸ்தியன் நஞ்சினை வென்று ஒளியின் சிகரமாக பிறவியில்லா நிலை அடைந்து துருவ நட்சத்திரமாக இருக்கின்றான். அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியை உயிரான ஈசனிடம் வேண்டி நமக்குள் அதை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வலைகளை நுகர நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
2.அந்த உணர்ச்சிகளை நமக்குள் கொண்டு வர வேண்டும்.
3.ஆக “எலெக்ட்ரிக் – எலெக்ட்ரானிக்” எதனுடைய உணர்வின் அழுத்தமோ அதற்குத்தக்கத் தான் அது வேலை செய்யும்.

இப்படிப் பழக்கிய பின்பு தீமைகள் வரும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்த உணர்வலைகளை இணைத்துக் கொண்டே வந்தால் தன்னிச்சையாகவே தீமைகளை முன் கூட்டியே அறிவிக்கச் செய்து அதிலிருந்து விலக்கி “நம்மைக் காத்திடும் நிலையாக” அது வழி நடத்தும்.

நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் காரிய சித்தியாகும். மகிழ்ச்சியும் ஏற்படும்.  நம்முடைய செயல்கள் மற்றவரையும் நல்லதாக்கும்.