ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 12, 2018

இளம் வயதிலே மிகவும் கோபமாக ஆற்றலாகப் பேசக் கூடியவர்களுக்கு வாத நோய் இதய நோய் ஏன் வருகிறது…? தடுக்க என்ன செய்ய வேண்டும்…?


1.ஒரு உணர்விற்குள் விஷம் எந்த அளவிற்கு இருக்கின்றதோ
2.அதற்குத்தக்கதான் அதனின் இயக்கும் ஆற்றலும் இருக்கும்.

பல விதமான மிளகாய் இருக்கின்றது. ஒரு சில மிளகாயை எடுத்துக் கொண்டோம் என்றால் காரமே இருக்காது. ஆனால் அதைப் பார்த்தால் அது செக்கச் செவேல் என்று இருக்கும். அதை நினைத்தவுடனே நம் வாயே அலறும்.

ஏனென்றால் அந்த மிளகாய்க்குள் இருக்கும் சத்திற்குள் அது எந்த அளவிற்கு விஷத்தின் ஆற்றல் அதிகமாகச் சேர்த்திருக்கின்றதோ அதற்குத் தக்கத்தான் அதனின் காரத்தை வேகமான நிலைகள் ஊடுருவச் செய்யும்.

அந்த விஷம் குறைவாக இருந்தாலும் இந்த காரத்தின் நிலைகள் குறைவாக இருக்கும். ஆக இந்த விஷம் கலந்த நிலைகள் கொண்டுதான் இயக்கங்கள் உண்டு.

மனிதனாக வளர்ந்த பின் நாம் சுவாசிக்கக்கூடிய உணர்வுகள் அனைத்திலும் விஷம் கலந்திருந்தாலும் அந்த உணர்வுகள் நம்மை இயக்கினாலும் நம் உடல் அந்த விஷத்தை எல்லாம் மலமாக மாற்றிவிட்டு நல்ல உணர்வை உடலாகச் சேர்த்துக் கொள்கின்றது.

ஒரு நெருப்பு எரிகிறது என்றால் அதற்குத் தகுந்த அதிலே மற்ற எரியக் கூடிய பொருள்களைப் போட்டோம் உடனே கரைந்து விடுகிறது. ஆனால் மொத்தமாகப் போட்டோம் என்றால் எல்லாம் எரிய நேரமாகின்றது. இதைப் போன்று தான்
1.நாம் சுவாசிக்கும் நிலைகளில் அடிக்கடி அந்த விஷமான எண்ணங்களை எடுத்தால்
2.அத்தகைய விஷங்கள் நம் உடலில் அதிகமாகத் தேங்கி விட்டால்
3.நம் உடலால் அதைக் கழிக்க முடியாது.

நாம் சாந்தமாகப் பேசுகின்றோம் என்றால் அதிலே விஷத்தின் தன்மை கம்மி. கோபமோ ஆத்திரமோ பயமோ இதைப் போன்ற உணர்வுகள் அடிக்கடி எடுக்கும் போது அதிலே எல்லாம் விஷம் அதிகமாக உண்டு. அதைக் கழிவாக மாற்றக்கூடிய திறன் நம் உடலுக்குள் இல்லை.

அதனால் நமக்குக் கோபம் அதிகமாக வருகிறது. ஆத்திரம் அதிகமாக வருகிறது. இதைப் போன்ற எண்ணங்கள் அதிகமாக வலுக் கூடும் பொழுது
1.எதையுமே வலுக் கொண்டதாகத் தாக்கும் நிலைகள் நமக்கு வரும்.
2.சிந்திக்கும் ஆற்றல் குறைந்து கொண்டே போகும்.

ஆனால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் சத்துக்கள் இது அனைத்துமே இந்த விஷத்தின் நிலைகள் வரப்போகும் போது நம் உடலுக்கு முதலில் வலுவைக் கூட்டும். இதன் வரிசை கொண்டு இந்த உணர்வின் தன்மை அடுத்து அது பல வியாதிகளாக வந்து விடும்.

கோபமாக வலுவாகப் பேசக் கூடியவர்களை எல்லாம் பாருங்கள். முதலில் ரொம்பவும் ஆற்றலாக இருப்பார்கள். ஆனால் பின்னாடி உடலில் வாத நோய் வந்து கை கால்களை இயக்க முடிவதில்லை. கண்களுக்குள் கோளாறு, காது கேட்கவில்லை. இதயத்தின் துடிப்பு குறைவாகி இதயத்தின் இயக்கமே பலவீனமாகி விடும்.

ஏனென்றால் இந்த விஷத்தின் தன்மைகளை அது வடிக்க முடியவில்லை என்கிற போது அது உடல்களில் தேங்கி இவ்வாறு ஆகிவிடுகின்றது.

மனித உடலுக்குள் இந்த பிரபஞ்சத்தின் சக்திகள் அனைத்துமே அடக்கம். அதாவது எதையுமே வடிகட்டிச் செயல்படும் திறன் கொண்டது தான் மனிதனின் ஆறாவது அறிவு என்று போகர் காட்டினர்.

ஆறு நிறங்களின் தன்மையை எடுத்துத்தான் சூரியன் ஏழாவது ஒளி அலைகளாக மாற்றுகின்றது, அதே போல எட்டுக் கோள்களின் சக்திகள் தனக்குள் மோதினாலும் அதற்குள் இருக்கும் விஷத்தின் சத்தையெல்லாம் விலக்கிவிட்டு ஒளியின் ஆற்றலாக இந்தப் பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கும் தன்மையாகச் சூரியன் வருகின்றது.

இதைப் போன்று தன் தன் வாழ்க்கையில் எதிர்படும் எத்தகைய நிலைகள் வந்தாலும் அதைச் சமாளித்து வென்று ஒளியின் சரீரமாகப் பெறக்கூடிய தகுதி பெற்றவன் ஆறாவது அறிவு கொண்ட மனிதன் என்ற நிலையைக் காட்டுவதற்குத் தான்
1.முருகனுடைய சிலையை வடித்து
2.”சரவணபவா…” எதையும் சரணமடையச் செய்யும் சக்தி பெற்றவன்…!
3.சரணமடையச் செய்து மகிழ்ச்சியாக வாழக் கூடியவன் ‘மகிழ்வாகனா…1’ என்று அன்று காட்டினார் போகமாமகரிஷி.

நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு நம்மை அறியாது இயக்கும் விஷமான உணர்வுகளை எல்லாம் அறிந்து மகரிஷிகளின் அருள் சக்திகளை அதற்குள் இணைத்து
1.அவைகளை நமக்குள் இயங்கவிடாது சரணமடையச் செய்து
2.சாந்தத்தை உருவாக்கும் காந்தத்தை வளர்த்து
3.நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதைத் தெளிவாக்கியவர் போகர்.