“நம்முடைய இறப்பை யாரும்… தடுக்க முடியாது…!”
1.ஆயுள் காலம் முழுவதும் தியானம் செய்து சக்திகளைப் பெற்று
2.என் நோயெல்லாம் நீக்கி விடுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தால்
3..முழுமையாக இங்கே இருக்கப் போவது யாரும் இல்லை.
4.முழுமையாக யாரையும் காப்பாற்ற முடியாது.
ஆகவே இந்த உலகத்தை விட்டால் எந்த உலகத்திற்குப் போக வேண்டும்…? அதைத் தெரிந்து
வைத்திருக்கின்றோமா…?
ஏனென்றால் இன்னொரு உடல் உலகத்திற்குள் போனால் இந்தப் பூமியில் மீண்டும் மனிதனாகப்
பிறக்க முடியாது. பிறந்தால் மனிதனாக இல்லை…! அப்புறம் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்
கொள்ளுங்கள்…! இன்றைய விஷ உலகில்
1.எந்தக் காரணத்தைக் கொண்டும்
2,மனிதன் இறந்தபின் மீண்டும் மனிதனாகப் பிறப்பதில்லை.
நான் ஆயிரம் நிலைகளைச் செய்து ஆண்டவனை நான் வணங்கியிருக்கின்றேன். ஆண்டவன் என்னை
அப்படியே சொர்க்கலோகத்திற்குக் கூட்டிக் கொண்டு போவான்…! என்றால் அவன் கூப்பிடப் போவதில்லை.
யார்…?
நம்மை ஆண்டு கொண்டிருக்கும் இந்த உயிரிடம் நாம் எதைக் கொடுத்தோமோ அவன் எங்கே
போய் நிற்கின்றானோ அங்கே தான்…!
1.எந்த வாசனையை நமக்குள் சேர்த்து வைத்திருக்கின்றோமோ
2.அந்த வாசனையான இடம் தான் அவனுக்கு நிழல்.
இன்னும் சிறிது காலம் போய்விட்டால் சிந்திக்கக்கூட நேரமில்லாமல் போய்விடும்.
இதைப் போன்ற நிலைகள் வருவதற்கு முன்
1.நமக்கு நல்ல நினைவிருக்கும் பொழுதே
2.இந்தப் பூமியிலிருந்து விண் செல்ல வேண்டும்…
3.அங்கே சப்தரிஷி மண்டலத்திற்குப் போக வேண்டும் என்ற நிலையை உறுதிப்படுத்திக்
கொள்ளுங்கள்.
“ஏனோ தானோ…” என்று இல்லாதபடி உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும் எத்தகைய
நிலைகள் வந்தாலும் அந்த மகரிஷிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்று ஏங்குங்கள்..
அதை உங்கள் உடலுக்குள் சேர்த்துக் கொண்டே வாருங்கள். உங்களிடம் இருக்கும் எல்லாக்
குணங்களுக்குள்ளும் எல்லா எண்ணங்களுக்குள்ளும் மகரிஷிகளின் அருள் ஒளியைக் கலக்கச் செய்யுங்கள்,
உங்களுக்குத் துன்பம் வரும் பொழுதெல்லாம் இந்த ஆத்ம சுத்தியைச் செய்து கொள்ளுங்கள்.
இது உங்களுக்குள் நல்ல பலனைக் கொடுக்கும்.