ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 26, 2018

“முனியப்பன் சிலையும்…” அகஸ்தியனின் ஆற்றலும்…!


உதாரணமாக ஒரு முனியப்பன் சிலையை வைத்திருப்பார்கள். அதை உற்றுப் பார்த்துக் “கொடூரத் தெய்வம்…!” என்று உணர்வினைப் பதிவாக்கிக் கொள்கிறோம்.

முனியப்பனிடம் ஒருவன் போனான். அவன் தவறு செய்ததால் அவன் அங்கே இறந்தான் என்று இரண்டு கதையைச் சொல்லி விட்டால் போதும். நமக்குள் ஆழமாகப் பதிவாகிவிடும்.

அங்கு முனியப்பனிடம் போனவுடனே நம்மை அறியாமலேயே அவன் கொன்று விடுவான் என்ற அஞ்சி வாழும் நிலையே வருகின்றது. ஏனென்றால்
1.சிலை ரூபமாக உற்று நோக்கி
2.அதன் உணர்வை ஒருவர் சொல்லப்படும் போது
3.அந்த உணர்வின் நினைவுகள் அதன் செயலாகவே நம்மை இயக்கி விடுகின்றது.

ஒருவர் சொன்ன உணர்வுகள் நமக்குள் நுகரப்படும் போது அந்த உணர்வின் தன்மை இயக்குகின்றது. அதன் உணர்வு கொண்டு அஞ்சிய பின்
1.அங்கே போனேன் பயந்தேன்
2.அதில் இருந்து எனக்குக் கை கால் நடுக்கமானது.
3.இருதயம் அடைக்கின்றது நெஞ்சு துடிக்கின்றது.
4.என்னை வந்து நசுக்குகின்றான். தொல்லை கொடுக்கின்றான். கொடூர விகார நிலைகள் கொண்டு என்னை அடக்குகின்றான் என்று
5.அந்தச் சிலையின் ரூபம் எதுவோ அதன் உணர்வின் தன்மை பதிவான பின்
6,அந்த நினைவலைகள் இப்படி இயக்குகின்றது… நாம் வழக்கத்தில் பார்க்கலாம்…!

நமது குருநாதர் காட்டிய நெறிகள் எது…? குரு காட்டிய அருள் வழியில் நாம் செல்ல வேண்டியது எது?

இந்த வாழ்க்கையில் மனிதன் முதல் மனிதன் அகஸ்தியன் இந்த வாழ்க்கையில் வரும் நஞ்சினை அடக்கி அறிவின் நிலையாக அறிந்துணர்ந்து அருள் ஞான சக்தியாக அவன் வாழ்வில் நஞ்சினை வென்றிடும் உணர்வினைப் பெற்று உணர்வினை அறிவின் ஒளியாகத் துருவ நட்சத்திரமாக ஆனான்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன்…
1.தன்னுடைய வாழ்க்கையில் விஷத் தன்மை ஒடுக்கியவன்.
2.அருள் ஞான சக்தி பெற்றவன்…
3.புவியில் வரும் நஞ்சை ஒடுக்கிச் சமநிலைப் படுத்தியவன்.
4.அருள் ஒளி பெறும் நிலையை உணர்ந்தவன்… உணர்ந்து அதை வளர்த்துக் கொண்டவன் தான் அகஸ்தியன் துருவ மகரிஷியாக துருவ நட்சத்திரமாக ஆனது.

தனக்குள் பெற்ற  பேரின்பம் அது வளர வளர இயக்கத்தின் தன்மையை உணர்கின்றான். உணர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று ஏங்குகின்றான். நஞ்சினை அடக்கிடும் அருள் ஞானத்தைப் பெறுகின்றான்.

“எதனைக் கண்டாலும்… அதனைப் பிளந்து காட்டும் நிலையும்…!” உண்மையின் உணர்வை அந்த உணர்ச்சியின் ஆக்கத்தை அறியும் ஆற்றல் பெறுகின்றான் அகஸ்தியன்.

அந்த அறியும் ஆற்றல் பெற்ற பின் தீமை என்ற நிலைகள் வந்தால் அதை எப்படி நீக்க வேண்டும் என்ற உணர்ச்சியின் வழி கொண்டு அதைத் தனக்குள் புகாது தடுக்கும் உணர்வுகளையும் அவன் எடுத்துத் தடுத்து அவன் செயல்படுத்தினான்.

அவன் நுகர்ந்த உணர்வுகள் இருளை அகற்றி மெய்ப் பொருளைக் காணும் அறிவின் வளர்ச்சியாக அவனுக்குள் அணுக்களாக மாற்றுகின்றது. இவ்வழியில் துருவனாகி துருவ மகரிஷியாகித் தான் பெற்ற உண்மையின் உணர்வினைத் தன் மனைவிக்குப் போதித்தான்.

கணவனால் பெற்ற உண்மையின் உணர்வை அகஸ்தியன் மனைவியும் வளர்க்கின்றது. “எப்படி…?”

அதாவது முனியப்பன் என்ற நிலைகள் ஒருவர் சொன்ன பின் அந்த உணர்வைத் தனக்குள் எடுத்து அவன் சொன்ன உணர்வைப் பதிவாக்கி அதன் வழியில் அஞ்சி நடுக்கமாகி கடும் நோயாகி விதி என்ற நிலைகள் முடிகின்றதோ அதைப் போல
1.விண்ணுலக ஆற்றலின் உணர்வின் தன்மையைத் துருவ வழியில் எவ்வாறு நம் பூமி கவர்கிறதென்ற உண்மை நிலையையும்
2.அதை அகஸ்தியன் நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எவ்வாறு பெற்றேன் என்ற நிலையையும்
3.பகைமை உணர்வுகள் தனக்குள் வராது அருள் ஒளி என்ற உணர்வை மாற்றியதையும்
4.தன் மனைவிக்குச் செவி வழியாகச் சொல்கின்றான் அகஸ்தியன்.

அகஸ்தியன் தன் மனைவிக்குப் போதித்த உணர்வுகள் அனைத்தும் இந்தக் காற்றிலே உண்டு. அகஸ்தியன் உடலில் விளைந்த உணர்வுகள் இங்கே அதிகமாக உண்டு. அகஸ்தியனை நினைவு கொண்டு நமக்குள் பதிவாக்கிக் கொண்டால் நமக்குள் அது பதிவாகிவிடும்.

அகஸ்தியனைப் போன்று ஒவ்வொருவரும் மெய் ஞானியாக வளர வேண்டும் என்ற ஆசையில் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இதை உபதேசிக்கின்றோம். பதிவாக்குகின்றோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்…! எமது அருளாசிகள்.