8/08/2018

“ஓ…ம்…!” என்ற நாதத்தின் ஆற்றலைப் பற்றித் தெரிந்திருக்கின்றோமா...?


எந்த அளவுக்கு மின்சாரத்தின் (CURRENT) இணைப்பை வைத்திருக்கிறோமோ அந்த அளவிற்கு விளக்குகளை நாம் எரிக்க முடிகிறது. ஒளி ஏற்படுகிறது. அதேபோல் இன்று விஞ்ஞானிகள் கண்டது போல

ஏதாவது பொருள் இருக்கிறது என்றால் அதன் மீது காற்றழுத்தத்தின் தன்மையை (COMPRESSION) அதீதமாகக் கொடுத்தால் இது எல்லாமே ஆவியாக மாறிப் போகும்.

இந்தக் காற்றழுத்தமே எதிலிருந்து வந்தது…? ஹைட்ரஜன் அதற்குள் இருக்கக்கூடிய காந்த சக்தியினுடைய நிலைகளை அந்த அணுவின் தன்மையைக் கூட்டி அதைக் கலவையாகக் கொண்டு அழுத்தப்படும் போது
1.இந்த அணுக்களினுடைய தன்மை அதாவது மின்னணுக்கள் (கதிரியக்கம்)
2.அந்த நுண்ணணுக்களினுடைய நிலைகள் ஒன்றோடு ஒன்று மோதியவுடனே
3.அனைத்தையும் ஆவியாக மாற்றுகின்றது.

 இதைப் போன்று தான் நாம் அந்த "ஓ..ம்…!" என்ற சுவாசத்தின் தன்மையை மகரிஷிகளை எண்ணிச் சுவாசிக்கும் போது நம் உயிரின் துடிப்பின் நிலைகள் கொண்டு நம் உடலுக்குள் இருக்கக்கூடிய காந்த செல்களை மட்டும் அது இயக்கும். கரண்டை (ஆற்றலை) அதிகமாக உண்டாக்கும்.

ஓ…ம் என்ற பிரணவத்தின் முக்கியத்துவத்தைச் சொன்னோம் என்றால் அதையெல்லாம் விலை பேசுவார்கள். ஆகையினால் உங்களுக்குச் சாதாரணமான நிலையில் அதைக் கொடுப்பதில்லை.

நீங்கள் எந்தளவுக்கு மெய் ஞானிகளின் அருளாற்றலைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தில் வருகின்றீர்களோ அதற்குத் தக்க குரு வாக்கைக் கொடுக்கின்றோம்.

நீங்கள் ஆயிரம் தடவை குரு என்ற நிலைகளில் நீங்கள் மற்ற உணர்வினுடைய நிலைகள் செயல்படுத்தினாலும் எந்த உணர்வை வளர்த்துக் கொண்டீர்களோ அது தான் ஓ..ம் என்று போய் முன்னாடி நிற்கும்.

எதை…?
1.“ஓ..ம் காளி…! என்று சொல்லிக் கொண்டு
2.உன்னை ஒரு கை நான் பார்க்கிறேன்… நான் என்னவெல்லாம் செய்கிறேன் பார்…! என்று சொல்லி
3.கோபத்தையும் ஆத்திரத்தையும் எடுத்துக் கொண்டால் அது தான் முன்னணியில் இருக்கும்.
4.ஓ…ம்…! என்று சொன்னால் இந்த உணர்வு கிளம்பி என்ன செய்யும்…? ஓங்காரத்தைக் கூட்டி இரத்தக் கொதிப்பு தான் வரும்.
5.கண்களில் வேறு நிலைகள் வேலை செய்துவிடும்

வெறுப்பான நிலைகள் இருக்கப்படும் பொழுது ஒரு ஆவியின் தன்மை உடலுக்குள் இருக்கின்றது. ஓ…ம்..! என்று சொன்னால் அதனுடைய உணர்வின் தன்மையைத் தட்டி எழுப்பி அது வேலை செய்ய ஆரம்பித்துவிடும். ஆனால் உணர்விற்குள் வேட்கை அது வெப்பத்தின் நிலைகள்.

ஓமுக்குள் இருக்கும் அந்த மெய் ஒளியின் தன்மைகளை எந்த மெய் ஞானி எடுத்துக் கொண்டார்களோ அந்த உணர்வின் அலையை வித்தாகப் பதியச் செய்யும் அந்த உணர்வைத்தான் இந்த உபதேச வாயிலாகக் கொடுக்கின்றோம்.

 மெய் ஞானிகளின் உணர்வின் வித்து உங்களுக்குள் பதிந்த பின்
1.அதே நினைவுடன் ஓ…ம்.. ஈஸ்வரா…! என்கிற போது
2.அந்த ஆற்றல் மிக்க நிலைகள் உங்கள் உடலுக்குள் செருகச் செய்யும்.
3.உங்கள் உடலுக்குள் எங்கெல்லாம் மாசுபட்டு இருக்கின்றதோ
4.இந்தக் காந்தத்தை அதிகமான நிலைகள் பிடிக்கச் செய்து
5.இந்த அழுத்தத்தின் நிலைகள் கொண்டு எந்தத் தீய சக்தியாக இருந்தாலும் அது ஆவியாக மாற்றி
6.உங்கள் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றும்.

இது குருவினுடைய பலம்.