ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 21, 2018

ஒவ்வொரு உயிரையும் “கடவுளாக மதித்தால்…!” நமக்குள் வரும் நன்மைகள்


இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நாம் எந்த நினைவு கொண்டு எத்தகைய குணங்கள் கொண்ட உணர்வுகளைச் சுவாசிக்கின்றோம்…?
1.சுவாசிக்கும் உணர்வுகளால் நாம் எப்படி இயங்குகின்றோம்?
2.சுவாசித்த உணர்வுகள் உயிரிலே பட்டு நம்மை எப்படி இயக்குகின்றது…?
3.நாம் எப்படி வாழ்கின்றோம்…?
4.நாம் எப்படி வாழ வேண்டும்…? என்பதனை
5.நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு அறிந்து
6.இந்த வாழ்க்கையில் நாம். மெய் ஞானியின் அருள் உணர்வுடன் வாழ வேண்டும் என்ற
7.அந்த வலுவினை நமக்குள் சேர்த்தல் வேண்டும்.

இந்த வாழ்க்கையில் வரும் பகைமைகளை அகற்றி பகைமையற்ற நிலையாக மகிழ்ந்து வாழ வேண்டும். அப்படிப் பகைமையற்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்றால்
1.நாம் பார்க்கும் ஒவ்வொரு உடலையும் கோவில் என்று மதிக்க வேண்டும்
2.அந்த உடலான ஆலயத்தில் வீற்றிருக்கும் உயிரைக் கடவுள் எனத் துதிக்க வேண்டும்.

ஏனென்றால் இப்போது உங்கள் உயிரைக் கடவுள் என்று துதிக்கும் போது “உங்களுடைய வெறுப்புகள் எனக்குள் வளர்வதில்லை…!”

உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கும் போது உங்களைப் பார்க்கும் போது அந்தத் “தீமையின் உணர்வு எனக்குள் நுழைவதில்லை...!”

மற்றவர்கள் எதை எண்ணினாலும் அதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அவர் ஈசனுக்கு அவர் சேவை செய்தால் அவரின் ஈசன் அவருக்கு உதவி செய்யும். இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

ஒரு ரோஜாப்பூ எப்படித் தன் நறுமணத்தால் மற்ற தீமையின் உணர்வுகளைத் தன் அருகில் வர விடாது பாதுகாத்துக் கொள்கின்றதோ அதைப் போன்று நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலை வர வேண்டும்.

மற்றவர்கள் நம்மை எண்ணும் போது நாம் ஏடுக்கும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவருக்குள் சாடி அவர்கள் தீமையை அகற்றும் வலிமை பெறும் சக்தியாக நமக்குள் வளர்த்தல் வேண்டும்.

இது வலிமை பெற்றால் பகைமை உணர்வை அடக்கும். மகிழ்ச்சியாக வாழச் செய்யும். ஆகவே இந்த வாழ்க்கையில் நாம் எப்படி வாழ வேண்டும்..? என்பதனைத் தெளிவுறத் தெரிந்து நாம் வாழ்தல் வேண்டும்.