மற்றவர்கள் நாசமாகப் போக வேண்டும் என்பதற்காக சிலர் சாபமிட்டு மண்ணைத்
தூவி விட்டு வந்து விடுவார்கள். “இன்னார் குடும்பம் நாசமாகப் போகட்டும்…!” என்று சொல்லி
மாரியம்மன் கோவிலில் எல்லாம் மண்ணைத் தூவுவார்கள். மண்ணை எடுத்து ரோட்டில் வீசுவார்கள்.
1.மண்ணைத் தூவினால் நாசமாகப் போய்விடும் என்ற பயத்தின் உணர்வை இங்கே
பதிவாக்கப்படும் போது
2.அவன் சொன்ன அலைகளை மீண்டும் அவர்கள் நினைக்க அதனின் இயக்கமாக
3.அவன் சாபம் இட்டது போலவே “எனக்கு இந்த மாதிரி ஆகிவிட்டதே…!” என்பார்கள்.
தெய்வத்திடம் போய் என்ன செய்கின்றோம்…? காணிக்கைச் செலுத்தி இதை
மாற்றுவதற்குப் பல உபாயங்களைக் கடைப்பிடிக்கிறோம்.
ஒரு மனிதனின் உடலில் கெடுமதியான உணர்வுகளை உருவாக்கிப் பகைமை உணர்வு
கொண்டு நாசமாக வேண்டும் என்று சொல்லப்படும்போது அதைப் பார்த்துவிட்டு நம்மிடம் மற்றவர்
வந்து சொல்லும் பொழுது
1.என்ன…? உங்கள் பெயரைச் சொல்லி இந்த மாதிரி மண்ணைத் தூவுகிறார்கள்
என்று சொன்னால்
2.அந்த உணர்வைச் “சிக்கெனப் பிடித்துக் கொள்ளுகின்றோம்…!” அதை மீண்டும்
மீண்டும் நினைவு கொள்கின்றோம்.
3.அவர் இட்ட உணர்வை எடுத்து நமக்குள் அணுவாக வளர்க்கத் தொடங்குகின்றோம்.
4.அவர் இட்ட சாபத்தை நமக்குள் வளர்த்து நமக்கு நாமே தண்டனை கொடுக்கின்றோம்.
5.மனிதனின் வாழ்க்கையில் இது இயக்கிக் கொண்டுதான் உள்ளது.
தீமை செய்வோனைப் பார்த்தால் நமக்குச் சம்பந்தம் இல்லை தான். ஆனாலும்
அவர் உடலிலே விளைந்த தீமையை விளைவிக்கும் உணர்வுகள் அங்கே வெளிப்படும் போது அதை என்ன...?
என்று உற்றுப் பார்த்து அந்த உணர்வினை அறிந்தால் நம் உயிர் “ஓ…” என்று ஜீவ அணுவாக மாற்றிவிடுகிறது.
அவன் செயலை மீண்டும் மீண்டும் எண்ணினால் அவன் எந்தச் செயலைச் செய்தானோ
அந்த உணர்வின் உணர்ச்சியைக் கூட்டி அதுவே குருவாக வருகின்றது.
சில காலம் போய்விட்டால் அவன் தவறு செய்கிறான் என்று எண்ணுகின்றோம்.
ஆனால் நாம் தவறு செய்பவனாகவே மாறி விடுகின்றோம். இதில் அவன் செய்த தீமையான செயலைப்
பற்றி நாம் நியாயத்தையும் தர்மத்தையும் பேசலாம். பேசினாலும்…
1.பிறருடைய குறைகளைத்தான் நாம் வளர்த்துக் கொள்கிறோமே தவிர
2.குறைகளை நீக்கும் அருள் சக்தியை நமக்குள் பெருக்கும் தன்மையை
இழந்தே வாழுகின்றோம்.
3.இது போன்ற நிலைகளிலிருந்து நாம் மீளுதல் வேண்டும்.
அத்தகையை தீமைகளிலிருந்து
மீண்டிடும் நிலையாக நம் குருநாதர் காட்டிய அருள் வழியை நாம் பின்பற்றுதல் வேண்டும்.
அவன் துணை கொண்டு அகஸ்தியன் பெற்ற அருள் ஞானத்தை நாம் நுகரப் பழகிக் கொள்ள வேண்டும்.
நமக்கு முன்னாடி அந்த அகஸ்தியனின் உணர்வுகள் உண்டு. அதைப் பெறவேண்டும்
என்று எண்ணினால் அது நமக்குள் வருகின்றது.
அப்பொழுது அகஸ்தியர் பெற்ற நஞ்சிடும் உணர்வுகள் நமக்குள் குருவாக
வந்து நம் வாழ்க்கையில் வரும் நஞ்சான உணர்வுகளை மாற்றிடும் அருள் சக்திகளைப் பெறுகின்றோம்.
1.அது தான் குரு காட்டிய வழியில் நாம் நடக்க வேண்டிய முறைகள்
2.குரு காட்டிய அந்த நெறியைக் கடைப்பிடித்து
3.குருவின் துணையால் அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வை நாம் ஒவ்வொரு
நிமிடமும் பெ\ற்று
4.நம்மை அறியாது இயக்கும் சாப வினை பாவ வினைகளிலிருந்து விடுபட
வேண்டும்.