1.நம்முடைய சொல் என்றுமே பிறரை மகிழ்ச்சி அடைய வைக்க வேண்டும்
2.நம்மைப் பார்ப்போர் அனைவரும் மகிழ வேண்டும் என்ற இந்த உணர்வை எடுத்து
3.அதை நமக்கு முன்னாடி வைத்துக் கொண்டால் எத்தகைய பகைமை உணர்வும் தீமை செய்யும்
உணர்வும் நம்மைச் சாடாது.
இந்த வலுவான உணர்வை நாம் எடுக்கக் கற்றுக் கொண்டால் தீமை புகாது தடுக்கும் அந்த
அருள் சக்தியை நமக்கு நாமே தெளிவாகப் பார்க்கலாம்.
என்னை இப்படிச் செய்தானே...! அவனை நான் விடுவேனா பார்...! என்று சொன்னால் அது
பழி தீர்க்கும் உணர்வாக நமக்குள் வந்து தீமை செய்யும் உணர்வுகளாக வளர்ந்து நம் உடலுக்குள்
இருக்கும் நல்ல குணங்களை எல்லாம் வாழ விடாது தீமைகளையே உருவாக்கி விடும்.
பின் அந்தத் தீமையான உணர்ச்சிகள் நம்மை அறியாமலே
1.அடங்காத நிலைகள் கொண்டு உந்தி நம்மை இயக்கி
2.நமது வாழ்க்கையைச் சீர்படுத்தி இயக்க முடியாத நிலையாக ஆக்கிவிடும்.
3.நமக்குள் பெரும் பிழைகளை உருவாகும் நிலைகளை உருவாக்கி விடும்.
ஏனென்றால் ஞானிகள் காட்டிய அறநெறியில் குறை இல்லை. ஆசையின் நிமித்தம் தவறுகளைத்தான்
நாம் வளர்த்துக் கொண்டோமே தவிர மீட்டிடும் மார்க்கத்தை இழந்தோம். மீண்டிடும் மார்க்கத்தையே
காண முடியாது தவிக்கின்றோம்.
இதை போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள நாம் அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள்
சேர்ப்போம். அந்த மகரிஷிகளின் துணை கொண்டு வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கிடும் உணர்வினை
நாம் வளர்ப்போம்.
நம் குரு காட்டிய அறவழியில்
1.இருளை அகற்றிடும் நஞ்சை வென்றிடும் அருள் ஞானத்தின் உணர்வை நமக்குள் சேர்ப்போம்.
2.இந்த வாழ்க்கையில் ஞானத்துடன் வாழ்ந்து இருளை அகற்றி அருள் ஞானத்தைப் பெருக்கி
3.இனிப் பிறவி இல்லா நிலை என்ற நிலையை அடைவோம்.
4.இல்லற வாழ்கையில் பற்றுடனும் பாசத்துடனும் வாழ்வோம்.
5.ஒற்றுமையாக வாழும் உணர்வும் தீமைகள் புகாத நிலையும் நமக்குள் வளர்ப்போம்
6.நாம் செய்யும் தொழில்கள் வளம் பெற்று மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி
பெறுவோம்
7.நம் பார்வையால் சொல்லால் செயலால் மூச்சால் பிறரைத் தூய்மையாக்கும் சக்திகளைப்
பெறுவோம்.
8.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே இணைந்து வாழ்வோம்.