ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 3, 2018

நடந்ததை எல்லாம் சொல்லும் சக்தி பெற்றவர்... முக்காலமும் அறிந்தவர்...! என்று சிலரைச் சொல்கிறோம் – விளக்கம்


“முக்காலமும் அறிந்தவர்கள்...!’ என்று சொல்பவர்கள் எல்லாம் மந்திர சக்தியை வைத்து ஒரு மனிதனுக்கு மனிதன் விளைய வைத்த அந்த உணர்வின் ஆற்றலை எடுத்துத் தன் எண்ணத்திற்குள் வலுவாக்கி அந்த நுண்ணிய அலைகள் கொண்டு மற்ற மனிதர்கள் வெளிப்படுத்தும் சிற்றலைகளை எடுத்துச் சொல்வது தான்.

உதாரணமாக ஒரு வேப்ப மரம் அதனின் கசப்பின் வலிமை எந்தளவுக்கு இருக்கின்றதோ அதை வைத்துச் சிற்றலைகளாகப் பூமியிலே காற்றில் படர்ந்து வரும் தன் இனமான கசப்பின் அலையை எடுத்துத்தான் அது வளர்கின்றது.

அதைப் போல ஒரு மனிதனுக்குள் விளைய வைத்த மந்திர சக்தியினுடைய நிலைகளை அதிகமாகக் கூட்டப்படும் போது அதன் வரிசையைக் கொண்டு சிறிய அலைகள் வந்தால் ஏம்ப்பா...! நீ இதை நினைத்தாய் அல்லவா...! என்று அப்படியே சொல்ல முடியும்.

அப்போது சிறுகச் சிறுக அந்த உணர்வின் அலைகளை எடுக்கப்படும் போது நம் எடுத்துக் கொண்டது என்ன…? துன்ப அலைகளைத் தான் நமக்குள் சேர்த்துக் கொள்வோம்.

ஜோதிடம் பார்க்க வேண்டும் என்ற நிலையில் உங்கள் வீட்டிலிருந்து நீங்கள் இங்கே வரப்போகும் போது “எதை நினைத்துக் கொண்டு என்னிடம் நீங்கள் வருகின்றீர்கள்...?” என்று நான் (ஞானகுரு) சொல்ல முடியும்.

உங்கள் சொல்லலாம். அதைப் போல வரக்கூடிய ஒவ்வொருவரின் கஷ்டத்தையும் சொல்லி நான் என்ன செய்வது…? உங்கள் கஷ்டத்தை எல்லாம் நான் எடுத்துக் கொள்கிறேன்.

நீங்கள் கஷ்டப்படுவது சிரமப்படுவது எல்லாம் நான் சொன்னால்
1.என்னை நீங்கள் “முக்காலமும் அறிந்த ஞானி...!” என்று சொல்வீர்கள்.
2.இந்த ஞானி கடைசியில் என்ன ஆவார்...?
3.அத்தனை பேருடைய  துன்பத்தையும் எடுத்து எடுத்துக் கடைசியில்
4.உடலில் பல போராட்டமாகி நோயாகி முடிவில் இறந்தே போய்விடுவார்.
5.ஐய்யய்யோ...! இவ்வளவு தூரத்திற்குப் போய்விட்டாரே...! என்பீர்கள்.

ஆக மொத்தம் - எல்லோருக்கும் நான் நல்லது செய்தேன்... ஆண்டவன் என்னைச் சோதித்துக் கொண்டே இருக்கின்றானே...! எனக்கு இப்படித் துன்பங்களுக்கு மேல் துன்பம் வந்து கொண்டே இருக்கிறதே...! என்று எண்ணுவீர்கள்.
1.என்னை (ஞானகுரு) நினைத்து எங்களுக்கெல்லாம் அவர் நல்லது செய்தார்.
2.எல்லா விஷயத்தையும் சொன்னார். கடைசியில் அவரும் போய்விட்டார்.

நீங்கள் எந்தெந்த சுகத்தை அனுபவித்தீர்களோ அந்த சுகமான நிலைகள் கொண்டு “என்னை நினைத்து...!” இன்னும் கொஞ்சம் வேதனையைத்தான் எண்ணுவீர்கள்.

கொஞ்ச நாள் சுகப்பட்டீர்கள். நான் போன பிற்பாடு வேதனையைத்தான் எடுத்துக் கொள்வீர்கள். சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகின்றதல்லவா...!

இவைகள் எல்லாம் நாம் நுகரும் உணர்வின் இயக்க நிலைகள். ஆகையினால் யாரும் போற்றலுக்காக ஏங்க வேண்டாம். நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்றால்
1.ஒவ்வொரு நிமிடமும் “மனிதன் மகிழ்ந்து இருக்க வேண்டும்” என்ற எண்ணத்தை மட்டும் நீங்கள் செலுத்துங்கள்.
2.நீங்கள் உங்களுக்குள் அந்த மகிழ்ச்சியைக் காண முடியும்.

உங்களுக்கு யார் இம்சை கொடுத்தாலும் சரி... அல்லது கடும் சொற்களைச் சொல்லிவிட்டாலும் சரி
1.அடுத்து அந்தச் சுடு சொல்லினுடைய நிலைகள் அவர்கள் சொல்லிலே வராதபடி
2.அவர்கள் திருந்த வேண்டும் என்று மட்டும் எண்ணுங்கள்
3.உன்னை அறியாமல் பேசும் நிகழ்ச்சியிலிருந்து “நீ தப்புவாய்...!” என்று இதைச் சொல்லுங்கள்.

அப்போது “இதுவும் கடும் சொல்தான்...!” ஆனால் இந்தச் சொல்லின் தன்மை அவரைத் தப்புவிக்க உதவுகின்றது. நம் மனதைத் தூய்மைப்படுத்துகின்றது.

அதற்குப் பதில் இரு நான் பார்க்கிறேன்... நீ என்னை இப்படிப் பேசினாய் அல்லவா... அதற்காக வேண்டி நீ அனுபவித்தே தீருவாய்.. நீ எப்படி எல்லாம் கஷ்டப்படப் போகின்றாய் தெரியுமா...? என்று நாம் சொன்னால்
1.முதலில் நாம் தான் அந்தக் கஷ்டத்தை அனுபவிப்போம்
2.நாம் சொன்ன உணர்வின் தன்மை அங்கேயும் விளையும்.
3.அந்த உணர்வின் தன்மை எதிர்ப்பு நிலை ஆகும்
4.இரண்டு பேருக்கும் இது கெட்டதாகத் தான் முடியும்.
5.மனிதருடைய உணர்வுகளுக்குள் இத்தனை நிலைகள் உண்டு.

ஆகையினால் இதை எல்லாம் நீங்கள் மாற்றப் பழகிக் கொள்ளுங்கள். குருநாதர் காட்டிய அருள் வழியில் சக்தி வாய்ந்த அந்த மெய் ஞானிகளின் அருள் வித்தை உங்களுக்குள் சமைத்துக் கொடுத்துக் கொண்டேயிருக்கின்றோம்.

இது பல வருட காலம் கஷ்டப்பட்டு அனுபவித்துக் கொண்டு வந்தது.  உங்களிடம் லேசாகச் சொல்றேன் என்றால் “வாக்காலே...!” சொல்கிறேன்.
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள்...! உங்களுக்கு நல்லதாகிப் போகும் என்று யாம் சொல்லும் போது அது உங்களுக்கு நல்லதாகின்றது.
2.நான் சொன்ன மாதிரி நீங்களும் நல்லதாகிப் போகும் என்று மற்றவர்களுக்குச் சொன்னவுடனே அங்கேயும் நல்லதாகின்றது
3.மற்றவர்களுக்கும் நல்லாதாகிறது என்கிற போது உங்களுக்குப் பின்னணியில் யாம் எடுத்துக் கொடுக்க கூடிய அந்த ஞானிகளின் அலைகள்தான்.

ஆகவே அருள் ஞானிகளை ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் எண்ணும்போது உங்களுக்கு நல்லதாகின்றது. அதை நீங்கள் எடுத்து அடுத்தவருக்குச் சொல்லும் பொழுது நீங்கள் சொல்வது அவர்களுக்கும் நல்லதாகும். ஆனால் ஞானிகளின் ஆற்றலை நீங்கள் நினைத்து எடுக்க வேண்டும். (இது முக்கியம்)

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நேரடியாக இருந்து ஞானிகளின் உணர்வை எப்படிப் பெற வேண்டும்...? என்று அதை எடுக்கும் முறைகளைக் காட்டி அதை வைத்துத் துன்பங்களையும் வேதனைகளையும் எப்படிப் போக்கிக் கொள்ள வேண்டும் என்பதை எமக்குத் தெளிவாக்கினார்.

ஏனென்றால் இதெல்லாம் குரு வழியில் வருவதுதான். அதன் வழியில் தான் உங்களுக்குள்ளும் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.