மந்திரங்களைச் சொல்லி அதனின் துணை கொண்டு உடலை விட்டுப் பிரிந்தவர்களை மோட்சத்திற்கு
அனுப்புகிறோம் என்பார்கள். எந்த மந்திரத்தைக் கேட்டுப் பதிவு செய்து கொண்டமோ இறந்த
பின் இதே மந்திரத்தைச் சொன்னால் அவர்கள் நம் ஆன்மாவைக் கைவல்யம் செய்வதற்குத்தான் உதவியாக
இருக்கும்.
கைவல்யம் செய்த பின் ஏவலின் தன்மையாக அடுத்தடுத்த உடல்களிலே பாய்ச்சச் செய்து
அங்கேயும் நஞ்சின் தன்மை கவரச் செய்து நம்மை விஷப் பூச்சியாக மாற்றும் நிலை தான் வருமே
தவிர விண்ணுக்குச் செல்ல முடியாது.
உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை நாம் அனைவரும் சேர்ந்து நஞ்சினை
வென்ற அந்த அருள் மகரிஷியின் அருள் வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்தில் இணைத்தால் தான்
அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய முடியும்.
எந்த நஞ்சின் உணர்வு கொண்டு இன்று எந்த ஒலிகளை நாம் கேட்டோமோ உடலை விட்டுச்
சென்ற பின் அதே ஒலியை எழுப்பினால் போதும். இன்று பார்க்கலாம் நீங்கள்...
1.மாடசாமி அந்தச்சாமி இந்தச் சாமி என்று அருளாடும் போது
2.டுவிங்.. டுவிங்… என்று வாத்தியத்தை வாசிப்பார்கள்.
3.கொல...கொல... என்று குழவை இட்டு ஆட்டை வெட்டிப் பலி இடுவார்கள்.
இப்படிச் செய்து இந்தத் தெய்வம் காக்கும் என்று உணர்வின் தன்மையை வளர்த்துக்
கொண்ட பின் இதனின் உணர்வின் தன்மை கொண்டு அடுத்து இறந்து விட்டால்
1.இதே குழவை இட்டதும்
2.இதே வாத்தியத்தை இசைத்த பின் பற்றுள்ளோர் உடல்களில் இருந்து
3.“நான் வந்துவிட்டேன்டா…! எனக்கு ஏன்டா... போன வாரம் ஆட்டைக் கொடுக்கவில்லை...?
4.ஆடு கொடுக்கவில்லை என்றால் “உன் குடும்பம் என்னாகும்...?” என்று சொல்வார்கள்.
5.மடிந்த மனிதனின் ஆன்மா உடலுக்குள் வந்த பின் இப்படிச் செய்கின்றார்.
எதை இரக்கமற்றுக் கொன்றமோ அதே உணர்வின் தன்மை அருளாடப்படும் போது அவனுக்குள்
வந்தால் அவன் உடலையும் இம்சிக்கும் தன்மையே வருகின்றது.
அப்படி ஆடுவோரைப் பாருங்கள். கட்டி உருளும் நிலையும் கடுமையான வேதனையும் படுவார்கள்.
மற்ற உயிர்களைக் கொல்லும் நிலைகள் வருகின்றது.
என் குடும்பத்தில் கஷ்டம் வந்து விட்டது... உன்னையே நான் அடைகிறேன் என்று பக்தியும்
நல்ல ஒழுக்கங்களையும் கொண்ட இந்த ஆன்மாக்கள் உடலை விட்டுச் சென்ற பின் சாந்தம் கொண்ட
உணர்வு கொண்ட ஒருவர் உடலுக்குள் வந்து விட்டால் அது ஆடத் தொடங்குகிறது.
முனியப்பன் கோயிலிலே சென்று ஆட்டை வெட்டினால் இதை ஓட்டி விடலாம் என்று அந்த
அசுர உணர்வுகள் கொண்ட உணர்வின் தன்மையை அங்கே ஊட்டியபின் அதை அடக்குகின்றது ஒடுக்குகின்றது.
ஆனால் சாந்த நிலையிலிருந்த ஆன்மாவோ அடுத்து ஆட்டையும் மற்றதையும் பலி கேட்கும்.
இப்படி அந்த வலுவான நிலை கொண்டு இயக்கும் தன்மையாகத்தான் மாறுகின்றது.
கொலைகாரனாக மாற்றி மிருக நிலைகளாக மாற்றும் உணர்வின் தன்மையைத் தான் வளர்த்துக்
கொள்ள முடியுமே தவிர ஏனென்றால் இன்னொரு ஆன்மா நமக்குள் இயக்குகின்றது என்ற நிலையை மறந்து
விட்டோம்.
குல வழியில் எதை எதைச் செய்தோமோ அதன் உணர்வின் தன்மை கொண்டு இன்னொரு உடலுக்குள்
சென்று அருளாடுகின்றது. மீண்டும் அங்கே தேய்பிறையாகின்றது. மீண்டும் மனிதனல்லாத நிலைகள்
உருபெறுகின்றது. இதைப் போன்ற நிலையிலிருந்தெல்லாம் விடுபட வேண்டுமா இல்லையா…?
இன்றைய விஞ்ஞான உலகில் ஒவ்வொரு அணு செல்கள் எதனுடன் இணைகின்றது. எதன் நிலைகள்
உருமாறுகின்றது என்று தான் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு மெய்ப்பிக்கின்றார்கள்…
உணர்த்துகின்றார்கள். ஆனாலும்
1.விஞ்ஞான அறிவு கொண்டு மனித உடலில் உள்ள அங்கங்களைத் தான் மாற்ற மடிகிறது.
2.மனித உணர்வின் தன்மையைப் பிறவியில்லா நிலை அடையச் செய்யும் நிலை விஞ்ஞானத்தில்
இல்லை.
3.ஆனால் மெய் ஞானத்தில் உண்டு.
மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் வளர்த்து உணர்வின் ஒளிக்கதிராக மாற்றிப் பிறவியில்லா
நிலையை நாம் ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும்.
உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்களை நாம்
அனைவரும் சேர்ந்து நஞ்சினை வென்ற அந்த அருள் மகரிஷியின் அருள் வட்டத்தில் சப்தரிஷி
மண்டலத்தில் இணைத்து அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.